3417. சங்கு அடுத்த தனிக் கடல் மேனியாற்கு அங்கு அடுத்த நிலைமை அறைந்தனம்; கொங்கு அடுத்த மலர்க் குழல் கொம்பு அனாட்கு இங்கு அடுத்த தகைமை இயம்புவாம். 1 சீதையின் துயர்நிலை (3418-3419) 3418. எயிறு அலைத்து முழை திறந்து ஏங்கிய செயிர் தலைக்கொண்ட சொல் செவி சேர்தலும் குயில் தலத்திடை உற்றது ஒர் கொள்கையாள் வயிறு அலைத்து விழுந்து மயங்கினாள். 2 3419. “‘பிடித்து நல்கு இவ் உழை ‘எனப் பேதையேன் முடித்தனென் முதல் வாழ்வு “ என மொய் அழல் கொடிப் படிந்தது என நெடுங் கோள் அரா இடிக்கு உடைந்தது எனப் புரண்டு ஏங்கினாள். 3 சீதை இலக்குவனைச் சினந்து கூறியது 3420. “குற்றம் வீந்த குணத்தின் எம் கோமகன் மற்றை வாள் அரக்கன் புரி மாயையால் இற்று வீழ்ந்தனன் என்னவும் என் அயல் நிற்றியோ? இளையோய்! ஒரு நீ?“ என்றாள். 4 இலக்குவன் கூறும் அமைதி (3421-3427) 3421. “எண்மையார், ‘உலகினில் இராமற்கு ஏற்றம் ஓர் திண்மையார் உளர் ‘எனச் செப்பற் பாலரோ? பெண்மையால் செயப் பெறுதிரால்‘‘ என உண்மையான் அனையவட்கு உணரக் கூறினான். 5 3422. “ஏழுமே கடல் உலகு ஏழும் ஏழுமே சூழும் ஏழ் மலை அவை தொடர்ந்த சூழல்வாய் வாழும் ஏழையர் சிறுவலிக்கு வாள் அமர் தாழுமே இராகவன் தனிமை? தையலீர்!“ 6 3423. “பார் எனப் புனல் எனப் பவனம் வான், கனல் பேர் என அவை அவன் முனியில் பேருமால்; கார் எனக் கரிய அக் கமலக் கண்ணனை யார் எனக் கருதி, இவ் இடரின் ஆழ்கின்றீர்?‘‘ 7 3424. “இடைந்துபோய் நிசிசரற்கு, இராமன், எவ்வம் வந்து அடைந்த போது அழைக்குமே? அழைக்குமாம் எனின், மிடைந்த பேர் அண்டங்கள், மேல, கீழன, உடைந்து போம்; அயன் முதல் உயிரும் வீயுமால் ‘‘ 8 3425. “மாற்றம் என் பகர்வது? மண்ணும் வானமும் போற்ற, வன் திரிபுரம் எரித்த புங்கவன் ஏற்றி நின்று எய்த வில் இற்றது, எம்பிரான் ஆற்றலின் அமைவது ஓர் ஆற்றல் உண்மையோ?‘‘ 9 3426. “காவலன் ஈண்டு நீர் கருதிற்று எய்துமேல் மூவகை உலகமும் முடியும்; முந்து உள தேவரும் முனிவரும் முதல செவ்வியோர் ஏவரும் வீவர்; நல் அறமும் எஞ்சுமால்.“ 10 3427. “பரக்க என் பகர்வது? பகழி, பண்ணவன் துரக்க, அங்கு அது படத் தொலைந்து சோர்கின்ற அரக்கன் அவ் எடுத்து அரற்றினான்; அதற்கு இரக்கம் உற்று இரங்கலிர்; இருத்திர் ஈண்டு‘‘ என்றான். 11 சீதையின் கடுஞ்சொல் 3428. என்று அவன் இயம்பலும், எடுத்த சீற்றத்தள், கொன்றன இன்னலள், கொதிக்கும் உள்ளத்தள், “நின்ற நின் நிலை இது, நெறியிற்று அன்று“ எனா, வன் தறுகண்ணினள், வயிர்த்துக் கூறுவாள். 12 3429. “ஒருபகல் பழகினார் உயிரை ஈவரால்; பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும் நீ வெருவலை நின்றனை; வேறு என்? யான் இனி எரி இடை கடிது வீழ்ந்து இறப்பென் ஈண்டு“ எனா. 13 இலக்குவன் சீதையை விலக்கி வணங்குதல் 3430. தாமரை வனத்திடைத் தாவும் அன்னம் போல் தூம வெம் காட்டு எரி தொடர்கின்றாள் தனைச் சேம வில் குமரனும் விலக்கிச் சீறடிப் பூ முக நெடு நிலம் புல்லிச் சொல்லுமால். 14 இலக்குவன் செல்ல உடன்படல் 3431. “துஞ்சுவது என்னை? நீர் சொற்ற சொல்லை யான் அஞ்சுவென்; மறுக்கிலென்; அவலம் தீர்ந்து இனி, இஞ்சு இரும்; அடியனேன் ஏகுகின்றனென்; வெஞ்சினம் விதியினை வெல்ல வல்லமோ?‘‘ 15 இலக்குவன் போதல் 3432. “போகின்றேன் அடியனேன்; பொருந்தி வந்து, கேடு ஆகின்றது; அரசன் தன் ஆணை நீர் மறுத்து, ‘ஏகு ‘என்றீர்; இருக்கின்றீர் தமியிர் “ என்று, பின் வேகின்ற சிந்தையான் விடைகொண்டு ஏகினான். 16 இலக்குவன் தனக்குள் விம்முதல் (3433-3435) 3433. “இருப்பனேல், எரி இடை இறப்பரால் இவர்; பொருப்பு அனையான் இடைப் போவெனே எனின், அருப்பம் இல் கேடு வந்து அடையும்; ஆருயிர் விருப்பனேற்கு என் செயல்?‘‘ என்று விம்மினான். 17 3434. “அறம்தனால் அழிவு இலது ஆகின் ஆக்கலாம்; இறந்து பாடு இவர்க்கு உறும் இதனின், இவ்வழி துறந்து போம் இதனையே துணிவென்; தொல் வினைப் பிறந்து போந்து இதுபடும் பேதையேன்‘‘ எனா. 18 3435. “போவது புரிவல் யான்; புகுந்தது உண்டு எனின், காவல் செய் எருவையின் தலைவன் கண்ணுறும்; ஆவது காக்கும் ‘‘ என்று அறிவித்து, அவ் வழித் தேவர் செய் தவத்தினால் செம்மல் ஏகினான். 19 இராவணன் தவவேடம் தாங்கிச் செல்லுதல் (3436-3439) 3436. இளையவன் ஏகலும், இறவு பார்க்கின்ற வளை எயிற்று இராவணன், வஞ்சம் முற்றுவான், முளை வரித் தண்டு ஒரு மூன்றும், முப்பகைத் தளை அரி தவத்தவர் வடிவும் தாங்கினான். 20 3437. ஊண் இலனாம் என உலர்ந்த மேனியன், சேண் நெறி வந்தது ஓர் வருத்தச் செய்கையன், பாணியின் அளந்து இசை படிக்கின்றான் என, வீணையின் இசைபட வேதம் பாடுவான். 21 3438. பூப் பொதி அவிழ்ந்தன நடையன்; பூதலம் தீப் பொதிந்தாம் என மிதிக்கும் செய்கையன்; காப்பு அரும் நடுக்கு உறும் காலன்; கையினன்; மூப்பு எனும் பருவமும் முனிய முற்றினான். 22 3439. தாமரை மணிதொடர் தவத்தின் மாலையன், ஆமையின் இருக்கையன், வளைந்த ஆக்கையன், நாம நூல் மார்பினன், நணுகினான் அரோ தூ மனத்து அருந்ததி இருந்த சூழல்வாய். 23 இராவணன் இப்பன்னசாலையில் இருப்பது யார் எனல் 3440. தோம் அறு சாலையின் வாயில் துன்னினான், நா முதல் குழறிட நடுங்கு சொல்லினான், “யாவிர் இவ் இருக்கையுள் இருந்துளீர்? “ என்றான் தேவரும் மருள் கொளத் தரெிந்த மேனியான். 24 சீதை வரவேற்றல் 3441. தோகையும் “இவ்வழித் தோம் இல் சிந்தனைச் சேகு அறு நோன்பினர் ‘‘ என்னும் சிந்தையாள், பாகு இயல் கிளவி ஓர், பவளக் கொம்பர் போன்று, “ஏகுமின் ஈண்டு “ என, எதிர் வந்து எய்தினாள். 25 சீதையைக் கண்ட இராவணன் மனநிலை (3442-3448) 3442. வெற்பு இடை மதம் என வியர்க்கும் மேனியன், அற்பினின் திரை புரள் ஆசை வேலையன், பொற்பினுக்கு அணியினைப் புகழின் சேக்கையைக் கற்பினுக்கு அரசியைக் கண்ணில் நோக்கினான 26 3443. தூங்கல் இல் குயில் கெழு சொல்லின், உம்பரின் ஓங்கிய அழகினாள் உருவம் காண்டலும், ஏங்கினன் மனநிலை யாது என்று உன்னுவாம்? வீங்கின; மெலிந்தன; வீரத் தோள்களே. 27 3444. புன மயில் சாயலின் எழிலில் பூநறைச் சுனை மடுத்து உண்டு இசை முரலும் தும்பியின் இனம் எனக் களித்துளது என்பது என்? அவன் மனம் எனக் களித்தது கண்ணின் மாலையே. 28 3445. “சேயிதழ்த் தாமரைச் சேக்கை தீர்ந்து இவண் மேயவள் மணி நிற மேனி காணுதற்கு ஏயுமே இருபது? இங்கு இமைப்பு இல் நாட்டங்கள் ஆயிரம் இல்லை! “ என்று அல்லல் எய்தினான். 29 3446. “அரை கடை இட்ட முக்கோடி ஆயுவும் புரை தபு தவத்தின் யான் படைத்த போதுமே? நிரை வளை முன்கை இந் நின்ற நங்கையின் கரை அறு நல் நலக் கடற்கு “ என்று உன்னினான். 30 3447. “தேவரும் அவுணரும் தேவி மாரொடும் கூவல் செய் தொழிலினர் குடிமை செய்திட மூவுலகமும் இவர் முறையின் ஆள யான் ஏவல் செய்து உய்குவன் இனி “ என்று உன்னினான். 31 3448. “உளைவு உறு துயர் முகத்து ஒளி இது ஆம் எனின், முளை எயிறு இலங்கிடும் முறுவல் என்படும்? தளை அவிழ் குழல் இவட் கண்டு தந்த என் இளையவட்கு அளிப்பன் என் அரசு ‘‘ என்று எண்ணினான். 32 சீதை இராவணனை வரவேற்று முகமன் செய்தல் (3449-3450) 3449. ஆண்டையான் அனையன உன்னி, ஆசை மேல் மூண்டு எழு சிந்தனை, முறை இலோன் தனை காண்டலும், கண்ணின் நீர் துடைத்த கற்பினாள், “ஈண்டு எழுந்து அருளும் “ என்று, இனிய கூறினாள். 33 3450. ஏத்தினள்; எய்தலும் “இருத்திர் ஈண்டு ” என வேத்திரத்து ஆசனம் விதியின் நல்கினாள்; மாத் திரி தண்டு அயல் வைத்த வஞ்சனும் பூத் தொடர் சாலையின் இருந்த போழ்தினே. 34 இராவணனை யறிந்து அஃறிணைப் பொருள்கள் அஞ்சுதல் 3451. நடுங்கின மலைகளும் மரனும்; நா அவிந்து அடங்கின பறவையும்; விலங்கும் அஞ்சின; படம் குறைந்து ஒதுங்கின பாம்பும்; பாதகக் கடுந் தொழில் அரக்கனைக் காணும் கண்ணினே. 35 இராவணன் வினாவும் சீதை விடையும் (3452-3453) 3452. இருந்தவன் “யாவது இவ் இருக்கை? இங்கு உறை இருந்தவன் யாவன்? நீர் யாரை? “ என்றலும் “விருந்தினர்; இவ் வழி விரகு இலார் ” எனப் பெருந்தடங் கண்ணவள் பேசல் மேயினாள். 36 3453. “தயரதன் தொல் குலத் தலைவன் தம்பியோடு உயர் குலத்து அன்னை சொல் உச்சி ஏந்தினான் அயர்வு இலன் இவ் வழி உறையும்; அன்னவன் பெயரினைத் தரெிகுதிர் பெருமையீர்! “ என்றாள். 37 இராவணன் விடையும் வினாவும் 3454. “கேட்டனென் கண்டிலென்; கெழுவு கங்கை நீர் நாடு இடை ஒருமுறை நண்ணினேன்; மலர் வாள் தடங் கண்ணின் நீர் யாவர் மா மகள்? காட்டிடை அரும் பகல் கழிக்கின்றீர்! “ என்றான். 38 சீதையின் விடை 3455. “அனக மா நெறி படர் அடிகள்! நும் அலால் நினைவது ஓர் தயெ்வம் வேறு இலாத நெஞ்சினான் சனகன் மா மகள்; பெயர் சனகி; காகுத்தன் மனைவி யான் ‘‘ என்றனள், மறு இல் கற்பினாள். 39 சீதையின் வினா 3456. அவ்வழி அனையன த்த ஆய் இழை “வெவ்வழி வருந்தினிர் விளைந்த மூப்பினிர் இவ்வழி இரு வினை கடக்க எண்ணினிர் எவ்வழி நின்றும் இங்கு எய்தினீர்? “ என்றாள். 40 இராவணத் துறவியின் சொல் (3457-3466) 3457. “இந்திரற்கு இந்திரன்; எழுதல் ஆகலாச் சுந்தரன்; நான்முகன் மரபில் தோன்றினான்; அந்தரத்தோடும் எவ் உலகும் ஆள்கின்றான்; மந்திரத்து அருமறை வைகும் நாவினான். “ 41 3458. “ஈசன் ஆண்டு இருந்த பேர் இலங்கு மால்வரை ஊசி வேரொடும் பறித்து எடுக்கும் ஊற்றத்தான்; ஆசைகள் சுமந்த பேர் ஆற்றல் ஆனைகள் பூசல் செய் மருப்பினைப் பொடிசெய் தோளினான். “ 42 3459. “நிற்பவர் கடைத்தலை நிறைந்து தேவரே; சொல் படும் மற்றவன் பெருமை சொல்லுங்கால்; கற்பகம் முதலிய நிதியம் கையன; பொற்பு அகம் மான நீர் இலங்கைப் பொன் நகர். “ 43 3460. “மேனகை திலோத்தமை முதல ஏழையர், வானகம் துறந்து வந்து, அவன்தன் மாட்சியால், ஊனம் இல் அடைப்பை, கால் வருடல், ஒண் செருப்பு ஆனவை முதல் தொழில் அவரது ஆகுமே. ‘‘ 44 3461. “சந்திரன் இரவி என்பவர்கள்தாம் அவன் சிந்தனை வழி நிலை திரிவர்; தேசு உடை இந்திரன் முதலிய அமரர் ஈண்டு அவன் கம் தடு கோயிலின் காவலாளரே. “ 45 3462. “பொன் நகரத்தினும்; பொலம் கொள் நாகர் தம் தொல் நகரத்தினும் தொடர்ந்த மா நிலத்து எந் நகரத்தினும் இனிய ஈண்டு அவன் நல் நகரத்தன நவை இலாதன. “ 46 3463. “தாள் உடை மலர் உளான் தந்த, அந்தம் இல் நாள் உடை வாழ்க்கையன்; நாரி பாகத்தன் வாள் உடைத் தடக்கையன்; வாரி வைத்த வெங் கோள் உடைச் சிறையினன்; குணங்கள் மேன்மையான்.‘‘ 47 3464. “வெம்மை தீர் ஒழுக்கினன்; விரிந்த கேள்வியன்; செம்மையோன்; மன்மதன் திகைக்கும் செவ்வியன்; எம்மையோர் அனைவரும் ‘இறைவர் ‘என்று எணும் மும்மையோர் பெருமையும் முற்றும் பெற்றியான். ‘‘ 48 3465. “அனைத்து உலகினும் அழகு அமைந்த நங்கையர் எனைப் பலர், அவன் தனது அருளின் இச்சையோர்; நினைத்து அவர் உருகவும், உதவ நேர்கிலன்; மனக்கு இனியாள் ஒரு மாதர் நாடுவான். ‘‘ 49 3466. “ஆண்டையான் அரசு வீற்றிருந்த அந்நகர் வேண்டி யான் சில் பகல் உறைதல் மேயினேன்; நீண்டனென் இருந்து அவற் பிரியும் நெஞ்சு இலேன் மீண்டனென் “ என்றனன் வினையம் உன்னுவான். 50 சீதையின் வினா (3467-3468) 3467. “வேதமும் வேதியர் அருளும் வெஃகலாச் சேதனை மன் உயிர் தின்னும் தீ வினைப் பாதக அரக்கர் தம் பதியின் வைகுதற்கு ஏது என்? உடலமும் மிகை என்று எண்ணுவீர்! “ 51 3468. “வனத்திடை மாதவர் மருங்கு வைகலிர்; புனல் திரு நாட்டு இடைப் புனிதர் ஊர்புக நினைத்திலிர்; அறநெறி நினைக்கிலாதவர் இனத்திடை வைகினிர்; என் செய்தீர்! “ என்றாள். 52 இராவணத் துறவி நிருதரே நல்லவர் எனல் 3469. மங்கை அஃது த்தல் கேட்ட வரம்பு இலான், “மறுவில் தீர்ந்தார், வெங்கண் வாள் அரக்கர் என்ன வெருவலம்; மெய்ம்மை நோக்கின், திங்கள் வாள் முகத்தினாய்! அத் தேவரில் தீயர் அல்லர்; எங்கள் போலியர்க்கு நல்லார் நிருதரே போலும் ‘‘ என்றான். 53 சீதை தீயரைச் சேரின் நல்லவரும் தீயராவர் எனல் 3470. சேயிழை, அன்ன சொல்லத் “தீயவர்ச் சேர்தல் செய்தால் தூயவர் அல்லர், சொல்லின், தொல் நெறி தொடர்ந்தோர் ‘‘ என்றாள்; மாய வல் அரக்கர் வல்லர், வேண்டு உரு வரிக்க என்பது, ஆயவள் அறிதல் தேற்றாள், ஆகலின் அயல் ஒன்று எண்ணாள். 54 இராவணன் வல்லோன் வழியது உலகம் எனல் 3471. அயிர்த்தனள் ஆகும் என்று, ஓர் ஐயுறவு அகத்துக் கொண்டான்; பெயர்த்து, அது துடைக்க எண்ணிப் பிறிது உற பேசலுற்றான்; “மயக்கு அறும் உலகம் மூன்றின் வாழ்பவர்க்கு, அனைய வல்லோர் இயற்கையின் நிற்பது அல்லால், இயற்றலாம் நெறி என்? ‘‘ என்றான். 55 சீதை இராமனால் அரக்கர் அழிவர் எனல் 3472. திறம் தரெி வஞ்சன், அச்சொல் செப்பலும், செப்பம் மிக்காள், “அறம் தரு வள்ளல், ஈண்டு இங்கு அருந்தவம் முயலும் நாளுள், அறம் தலைதிரிந்த வாழ்க்கை அரக்கர் தம் வருக்கத் தோடும் இறந்தனர் முடிவர்; பின்னர் இடர் இலை உலகம் ‘‘ என்றாள். 56 இராவணன் மனிதர் அரக்கரை வெல்லார் எனல் 3473. மானவள் த்தலோடும், “மானிடர் அரக்கர் தம்மை, மீன் என மிளிரும் கண்ணாய்! வேர் அற வெல்வர் என்னின், யானையின் இனத்தை எல்லாம் இள முயல் கொல்லும்; பின்னும், கூன் உகிர் மடங்கல் ஏற்றைக் குருளை மான் கொல்லும் ‘‘ என்றான். 57 அழிந்த அரக்கர்களைக் கூறி இராமன் ஆற்றலைப் புகழ்தல் (3474-3475) 3474. “மின் திரண்டு அனைய பங்கி விராதனும், வெகுளி பொங்கக் கன்றிய மனத்து வென்றிக் கரன் முதல் கணக்கிலோரும் பொன்றிய பூசல் ஒன்றும் கேட்டிலிர் போலும் ‘‘ என்றாள், அன்று அவர்க்கு அடுத்தது உன்னி, மழைக்கண் நீர் அருவி சோர்வாள். 58 3475. “வாள் அரி வள்ளல், சொன்ன மான் கணம் நிருதர்; அன்னார், கேள் ஒடு மடியு மாறும், வானவர் கிளரு மாறும், நாளையே காண்டிர் அன்றே; நவை இலிர், உணர்கிலீரோ? மீள் அரும் தருமம் தன்னை வெல்லுமோ பாவம்? ‘‘ என்றாள். 59 இராவணன் சீற்றமும் மாயவேடங் கலைதலும் (3476-3480) 3476. தேன் இடை அமுது அளாய அன்ன மென் சில சொல் மாலை, தானுடைச் செவிகள் ஊடு தவழ் உற தளிர்த்து வீங்கும் ஊனுடை உடம்பினானும், உருகெழு மானம் ஊன்ற, ‘மானிடர், வலியர் ‘என்ற மாற்றத்தால் சீற்றம் வைத்தான். 60 3477. சீறினன், செய்வான், அச் “சிறு வலிப் புல்லியோர்கட்கு ஈறு, ஒரு மனிதன் செய்தான், என்று எடுத்து இயம்பினாயேல், தேறுதி நாளையே; அவ் இருபது திண்தோள் வாடை வீறிய பொழுது, பூளை வீ என வீவன் அன்றே? ‘‘ 61 3478. “மேருவைப் பறிக்க வேண்டின், விண்ணினை இடிக்க வேண்டின், நீரினைக் கலக்க வேண்டின், நெருப்பினை அவிக்க வேண்டின், பாரினை எடுக்க வேண்டின் பல வினைச் சில சொல் ஏழாய்! யார் எனக் கருதிச் சொன்னாய்! இராவணற்கு அரிது என்?‘‘ என்றான். 62 3479. “அரண் தரு திரள் தோள் சால உள எனின், ஆற்றல் உண்டோ? கரண்ட நீர் இலங்கை வேந்தைச் சிறை வைத்த கழல் கால் வீரன் திரண்ட தோள் வனத்தை எல்லாம், சிறியது ஓர் பருவம் தன்னில், இரண்டு தோள் ஒருவன் அன்றோ மழுவினால் எறிந்தான்?‘‘ என்றாள். 63 3480. என்று அவள் த்தலோடும், எரிந்தன நயனம்; திக்கில் சென்றன திரள் தோள்; வானம் தீண்டின மகுடம்; திண் கை ஒன்று ஒடு ஒன்று அடித்த; மேகத்து உரும் என எயிற்றின் ஓளி மென்றன; வெகுளி பொங்க, விட்டது மாய வேடம். 64 சீதையின் ஐயமும் இராவணன் வடிவமும் 3481. “இருவினை துறந்த மேலோர் அல்லன் கொல் இவன்? “ என்று எண்ணி, அரிவையும் ஐயம் எய்தா, “ஆர் இவன்தான்? “ என்று ஒன்றும், தரெிவு அரு நிலையளாகத் தீ விடத்து அரவம் தானே உரு கெழு சீற்றம் பொங்கிப் பணம் விரித்து உயர்ந்தது ஒத்தான். 65 சீதையின் அச்சம் 3482. ஆற்ற வெம் துயரத்து அன்னாள் ஆண்டு உற்ற அலக்கண் நோக்கின் ஏற்றம் என் நினைக்கல் ஆகும்? எதிர் எடுத்து இயம்பலாகும் மாற்றம் ஒன்று இல்லை; செய்யும் வினை இல்லை; வரிக்கல் ஆகாக் கூற்றம் வந்து உற்ற காலத்து உயிர் எனக் குலைவு கொண்டாள். 66 இராவணன் சீதையை அச்சுறுத்தல் 3483. “விண்ணவர் ஏவல் செய்ய, வென்ற என் வீரம் பாராய்; மண் இடைப் புழுவின் வாழும் மானிடர் வலியர் என்றாய்; பெண் எனப் பிழைத்தாய் அல்லை; உன்னை யான் பிசைந்து தின்ன எண்ணுவென்; எண்ணில், பின்னை என் உயிர் இழப்பென்‘‘ என்றான். 67 இராவணன் சீதையை நயந்து வேண்டுதல் 3484. “குலைவு உறல், அன்னம்! முன்னம் யாரையும் கும்பிடா என் தலை மிசை மகுடம் என்னத் தனித்தனி இனிது தாங்கி, அலகு இல் பூண் அரம்பை மாதர் அடி முறை ஏவல் செய்ய உலகம் ஈரேழும் ஆளும் செல்வத்துள் உறைதி ‘‘ என்றான். 68 சீதையின் சினச்சொல் (3485-86) 3485. செவிகளைத் தளிர்க் கையாலே சிக்குறச் சேமம் செய்தாள்; “கவினும் வெஞ்சிலைக் கை வென்றிக் காகுத்தன் கற்பினேனை, புவி இடை ஒழுக்கம் நோக்காய் பொங்கு எரிப் புனிதர் ஈயும் அவியை நாய் வேட்டது என்ன, என் சொனாய் அரக்க? ‘‘ என்னா. 69 3486. “புல் நுனை நீரின் நொய்தாப் போதலே புரிந்து நின்ற இன் உயிர் இழத்தல் அஞ்சி, இல் பிறப்பு அழிதல் உண்டே? மின் உயிர்த்து உருமின் சீறும் வெம் கணை விரவாமுன்னம், உன் உயிர்க்கு உறுதி நோக்கின், ஒளித்தியால் ஓடி ‘‘ என்றாள். 70 இராவணன் மறுமொழி (3487-3488) 3487. என்று அவள் க்க, நின்ற இரக்கம் இல் அரக்கன், “எய்த உன் துணைக் கணவன் அம்பு, அவ் உயர் திசை சுமந்த ஓங்கல் வன் திறல் மருப்பின் ஆற்றல் மடித்த என் மார்பில் வந்தால், குன்று இடைத் தொடுத்து விட்ட பூங்கணை கொல் அது ‘‘ என்றான். 71 3488. “அணங்கினுக்கு அணங்கு அனாய்! நின் ஆசை நோய் அகத்துப் பொங்க, உணங்கிய உடம்பினேனுக்கு உயிரினை உதவி, உம்பர்க் கணம் குழை மகளிர்க்கு எல்லாம் பெரும் பதம் கைக்கொள் ‘‘ என்னா, வணங்கினன் உலகம் தாங்கும் மலையினும் வலிய தோளான். 72 சீதையின் ஏக்கம் 3489. தறை வாய் அவன் வந்து அடி தாழுதலும் கறை வாள் பட ஆவி கலங்கினள் போல் “இறைவா! இளையோய்! ” என ஏங்கினளால் பொறைதான் உருவானது ஒர் பொற்பு உடையாள். 73 இராவணன் சீதையைப் பன்னசாலையோடு எடுத்தல் (3490-3491) 3490. ஆண்டு ஆ இடை தீயவன் ஆய் இழையைத் தீண்டான் அயன் மேல் சிந்தைசெயாத் தூண் தான் எனல் ஆம் உயர் தோள் வலியால் கீண்டான் நிலம்; யோசனை கீழொடு மேல். 74 3491. கொண்டான் உயர் தேர் மிசை; கோல் வளையாள் கண்டாள் தனது ஆர் உயிர் கண்டிலளால் மண் தான் உறும் மின்னின் மயங்கினளால்; விண் தான் வழியா எழுவான் விரைவான். 75 சீதையின் அரற்றல் (3492-3497) 3492. “விடு தேர் ” என வெம் கனல் வெந்து அழியும் கொடிபோல் புரள்வாள் குலைவாள் அயர்வாள் துடியா எழுவாள் துயரால் அழுவாள் “கடிதா அறனே! இது கா ” எனுமால். 76 3493. “மலையே! மரனே! மயிலே! குயிலே! கலையே! பிணையே! களிறே! பிடியே! நிலையா உயிரேன் நிலை தேறினிர் போய் உலையா வலியார் உழை நீர் யீர்! “ 77 3494. “செஞ் சேவகனார் நிலை நீர் தரெிவீர்; மஞ்சே! பொழிலே! வன தேவதைகாள்! ‘அஞ்சேல் ‘என நல்குதிரேல் அடியேன் உஞ்சால் அதுதான் இழிவோ? யீர்! “ 78 3495. “நிருத ஆதியர் வேர் அற நீல் முகில் போல் சர தாரைகள் வீசினிர் சார்கிலிரோ? வரதா! இளையோய்! மறு ஏதும் இலாப் பரதா! இளையோய்! பழி பூணுதிரோ? “ 79 3496. “கோதாவரியே! குளிர்வாய் குழைவாய்; மாதா அனையாய் மனனே தெளிவாய்; ஓதாது உணர்வார் உழை ஓடினை போய் நீதான் வினையேன் நிலை சொல்லலையோ? “ 80 3497. “முந்தும் சுனைகாள்! முழை வாழ் அரிகாள்! இந்த நிலனோடும் எடுத்த கை நால் ஐந்தும் தலை பத்தும் அலைந்து உலையச் சிந்தும்படி கண்டு சிரித்திடுவீர். “ 81 இராவணன் சிரித்தல் 3498. என்று இன்ன பலவும் பன்னி இரியல் உற்று அரற்றுவாளைப் “பொன் துன்னு புணர் மென் கொங்கைப் பொலம் குழாய்! போரில் என்னைக் கொன்று, உன்னை மீட்பர் கொல், அம் மானிடர்? கொள்க ‘‘ என்னா, வன் திண்கை எறிந்து நக்கான், வாழ்க்கை நாள் வறிது வீழ்ப்பான். 82 சீதையின் சினச் சொற்கள் (3499-3500) 3499. வாக்கினால் அன்னான் சொல்ல, “மாயையால் வஞ்ச மான் ஒன்று ஆக்கினாய்; ஆக்கி, உன்னை ஆருயிர் உண்ணும் கூற்றைப் போக்கினாய்; புகுந்து, கொண்டு போகின்றாய்; பொருது நின்னைக் காக்குமா காண்டி ஆயின், கடவல் உன் தேரை ‘‘ என்றாள். 83 3500. மீட்டும் ஒன்று செய்வாள்; “நீ வீரனே! விரைவில் மற்று உன் கூட்டராம் அரக்கர் தம்மைக் கொன்று, உங்கை கொங்கை மூக்கும் வாட்டினார் வனத்தில் உள்ளார், மானிடர் ‘‘ என்ற வார்த்தை கேட்டும், இம் மாயம் செய்தது அச்சத்தின் கிளர்ச்சி அன்றோ? ‘‘ 84 இராவணன் மறுமொழி 3501. மொழிதரும் அளவில், “நங்கை! கேள் இது; முரண் இல் யாக்கை இழி தரு மனிதரோடே யான் செரு ஏற்பல் என்றால், விழி தரும் நெற்றியான் தன் வெள்ளி வெற்பு எடுத்த தோட்குப் பழி தரும்; அதனின் சாலப் பயன் தரும், வஞ்சம் ‘‘ என்றான். 85 சீதையின் பழிப்புரை 3502. பாவையும் அதனைக் கேளாத் “தம் குலப் பகைஞர் தம்பால் போவது குற்றம்! வாளின் பொருவது நாணம் போலாம்! ஆவது, கற்பினாரை வஞ்சிக்கும் ஆற்றலே ஆம்! ஏவம் என்? பழிதான் என்னே? இரக்கம் இல் அரக்கர்க்கு ‘‘ என்றாள். 86 சடாயு எதிர்த்தல் (3503-3509) 3503. என்னும் அவ் வேலை இன் கண், “எங்கு அடா போவது? எங்கே? நில்! நில்! ‘‘ என்று இடித்த சொல்லன், நெருப்பு இடைப் பரப்பும் கண்ணன், மின் என விளங்கும் வீரத் துண்டத்தன், மேரு என்னும் பொன் நெடுங்குன்றம் வானின் வருவதே போலும் மெய்யான். 87 3504. பாழி வன் கிரிகள் எல்லாம் பறித்து, எழுந்து, ஒன்றோடு ஒன்று பூழியின் உதிர, விண்ணில் புடைப்பு உற கிளர்ந்து பொங்கி, ஆழியும் உலகும் ஒன்றாய் அழிதர, முழுதும் வீசும் ஊழி வெம் காற்று இது என்ன, இரு சிறை ஊதை மோத. 88 3505. சாக வன் தலையொடு மரமும் தாழ மேல் மேகமும் விண்ணின் மீச் செல்ல மீமிசை “மாக வெம் கலுழன் ஆம்; வருகின்றான் ” என நாகமும் படம் ஒளித்து ஒதுங்கி நையவே. 89 3506. யானையும் யாளியும் முதல யாவையும் கான் நெடு மரத்தொடு தூறு கல் இவை மேல் நிமிர்ந்து இரு சிறை வீச்சின் ஏறலால் வானமும் கானமும் மாறு கொள்ளவே. 90 3507. “உத்தமன் தேவியை உலகொடு ஓங்கு தேர் வைத்தனை ஏகுவது எங்கு? வானினோடு இத்தனை திசையையும் மறைப்பென் ஈண்டு “ எனாப் பத்திரச் சிறைகளை விரிக்கும் பண்பினான். 91 3508. வந்தனன் எருவையின் மன்னன்; மாண்பு இலான் எந்திரத் தேர் செலவு ஒழிக்கும் ஈட்டினால் சிந்துரக் கால் சிரம் செக்கர் மூடிய கந்தரக் கயிலையை நிகர்க்கும் காட்சியான். 92 3509. ஆண்டு உற்று அவ் அணங்கினை “அஞ்சல் ” எனாத் தீண்டுற்றிலன் என்று உணர் சிந்தையினான் மூண்டு உற்று எழு வெம் கதம் முற்றிலனாய் மீண்டுற்று யாடலை மேயினனால். 93 சடாயுவின் அறிவுரை (3510-3518) 3510. “கெட்டாய்! கிளையோடும் நின் வாழ்வை எலாம் சுட்டாய்; இது என்னை தொடங்கினை? நீ பட்டாய் எனவே கொடு பத்தினியை விட்டு ஏகுதியால்! விளிகின்றிலையால். “ 94 3511. “பேதாய்! பிழை செய்தனை; பேர் உலகின் மாதா அனையாளை மனக்கொடு நீ யாது ஆக நினைத்தனை? எண்ணம் இலாய்! ஆதாரம் நினக்கு இனி யார் உளரோ? “ 95 3512. “உய்யாமல் மலைந்து உமர் ஆருயிரை மெய்யாக இராமன் விருந்து இடவே கை ஆர முகந்து கொடு அந்தகனார் ஐயா! புதிது உண்டது அறிந்திலையோ? “ 96 3513. “கொடு வெம் கரி கொல்லிய வந்ததன் மேல் விடும் உண்டை கடாவ விரும்பினையே! அடும் என்பது உணர்ந்திலை ஆயினும் வன் கடு உண்டு உயிரின் நிலை காணுதியோ? “ 97 3514. “எல்லா உலகங்களும் இந்திரனும் அல்லாதவர் மூவரும் அந்தகனும் புல்வாய் புலி கண்டது போல்வர் அலால் வில்லாளரை வெல்லும் மிடுக்கு உளரோ? “ 98 3515. “இம்மைக்கு உறவோடும் இறந்து அழியும் வெம்மைத் தொழில் இங்கு இதன்மேல் இலையால்; அம்மைக்கு அரு மா நரகம் தருமால்; எம்மைக்கு இதமாக இது எண்ணினை நீ? “ 99 3516. “முத் தேவரில் மூல முதல் பொருள் ஆம் அத்தேவர் இம் மானிடர்; ஆதலினால் எத்தேவரொடு எண்ணுவது? எண்ணம் இலாய்! பித்து ஏறினை ஆதல் பிழைத்தனையால். “ 100 3517. “புரம் பற்றிய போர் விடையோன் அருளால் வரம் பெற்றவும் மற்று உள விஞ்சைகளும் உரம் பெற்றன ஆவன உண்மையினோன் சரம் பற்றிய சாபம் விடும் தனையே. “ 101 3518. “வான் ஆள்பவன் மைந்தன் வளைத்த விலான் தானே வரின் நின்று தடுப்பு அரிதால்; நானே அவண் உய்ப்பென் இந் நல் நுதலை; போ நீ கடிது “ என்று புகன்றிடலும். 102 இராவணன் மறுப்புரை (3519-3520) 3519. கேட்டான் நிருதர்க்கு இறை; கேழ் கிளர் தன் வாள் தாரை நெருப்பு உக வாய் மடியா “ஓட்டாய் இனி நீ செய்குநரை காட்டாய் கடிது “ என்று கனன்று யா. 103 3520. “வரும் புண்டரம்! வாளி உன் மார்பு உருவிப் பெரும் புண் திறவா வகை பேருதி நீ; இரும்பு உண்ட நிர் மீள்கினும் என் உழையின் கரும்பு உண்ட சொல் மீள்கிலள்; காணுதியால். “ 104 அஞ்சிய சீதையைச் சடாயு அஞ்சல் என்றது (3521-3522) 3521. என்னும் அளவில், பயம் முன்னின் இரட்டி எய்த, அன்னம் அயர்கின்றது நோக்கி, “அரக்கன் யாக்கை சின்னம் உறும் இப்பொழுதே; ‘சிலை ஏந்தி, நங்கள் மன்னன் மகன் வந்திலன் ‘ என்று வருந்தல்; அன்னை! ‘‘ 105 3522. “முத்து உக்கன போல் முகத்து ஆலி முலைக்கண் வீழத் தத்துற்று அயரேல்; தலை, தால பலத்தின் ஏலும் கொத்து ஒப்பன கொண்டு, இவன் கொண்டன என்ற ஆசை பத்திற்கும் இன்றே பலி ஈவது பார்த்தி ‘‘ என்றான். 106 சடாயுவின் போர் (3523-43) 3523. இடிப்பு ஒத்த முழக்கின், இரும் சிறை வீசி எற்றி, முடிப் பத்திகளைப் படி இட்டு, முழங்கு துண்டம் கடிப்பக் கடிது உற்று அவன் காண்தகும் நீண்ட வீணைக் கொடிப் பற்றி ஒடித்து, உயர் வானவர் ஆசி கொண்டான். 107 3524. அக்காலை, அரக்கன், அரக்கு உருக்கு அன்ன கண்ணன், எக்காலமும், இன்னது ஒர் ஈடு அழிவு உற்றிலாதான் நக்கான், உலகு ஏழும் நடுங்கிட; நாகம் அன்ன கைக் கார்முகத்தோடு கடைப் புருவம் குனித்தான். 108 3525. சண்டப் பிறை வாள் எயிற்றான் சர தாரை மாரி மண்டச் சிறகால் அடித்தான் சில; வள் உகிரால் கண்டப் படுத்தான் சில; காலனும் காண உட்கும் துண்டப் படையால், சிலை துண்ட துண்டங்கள் கண்டான். 109 3526. மீட்டும் அணுகா, நெடு வெங்கண் அநந்த நாகம் வாட்டும் கலுழன் என, வன் தலை பத்தின் மீடும் நீட்டும் நெடு மூக்கு எனும் நேமியன், சேம வில் கால் கோட்டும் அளவில், மணிக் குண்டலம் கொண்டு எழுந்தான். 110 3527. எழுந்தான் தட மார்பினில், ஏழினொடு ஏழு வாளி அழுந்தாது கழன்றிடப் பெய்து, எடுத்து ஆர்த்த, அரக்கன் பொழிந்தான், புகர் வாளிகள் மீளவும்; ‘போர்ச் சடாயு விழுந்தான் ‘என, அஞ்சினர், விண்ணவர் வெய்து உயிர்த்தார். 111 3528. புண்ணில் புது நீர் பொழியப் பொலி புள்ளின் வேந்தன், மண்ணில், கரனே முதலோர் உதிரத்தின் வாரி கண்ணிக் கடல் என்று நுகர்ந்தது கான்று, மீள விண்ணில் பொலிகின்றது ஒர் வெள் நிறம் மேகம் ஒத்தான். 112 3529. ஒத்தான் உடனே உயிர்த்தான்; உருத்தான்; அவன் தோள் பத்தோடு பத்தின் நெடும் பத்தியில் தத்தி, மூக்கால் கொத்தா, நகத்தால் குடையா, சிறையால் புடையா, முத்து ஆர மார்பில் கவசத்தையும் மூட்டு அறுத்தான். 113 3530. அறுத்தானை, அரக்கனும் ஐம்பதொடு ஐம்பது அம்பு செறித்தான் தட மார்பில்; செறித்தலும், தேவர் அஞ்சி வெறித்தார்; வெறியாமுன், இராவணன் வில்லைப் பல்லால் பறித்தான் பறவைக்கு இறை, விண்ணவர் பண்ணை ஆர்ப்ப. 114 3531. எல் ‘இட்ட வெள்ளிக் கயிலைப் பொருப்பு, ஈசனோடும், மல் இட்ட தோளால் எடுத்தான் சிலை வாயின் வாங்கி, வில் இட்டு உயர்ந்த நெடு மேகம் எனப் பொலிந்தான் சொல் இட்டு அவன் தோள் வலி, யார் உளர், சொல்ல வல்லார்? 115 3532. மீளா நிறத்து ஆயிரம் கண்ணவன் விண்ணின் ஓட, வாளால் ஒறுத்தான் சிலை வாய் இடை நின்றும் வாங்கித் தாளால் இறுத்தான்; தழல் வண்ணன் தடக்கை வில்லைத் தோளால் இறுத்தான் துணைத் தாதை தன் அன்பின் தோழன 116 3533. ஞாலம் படுப்பான் தனது ஆற்றலுக்கு ஏற்ற நல் வில் மூலம் ஒடிப்பு உண்டது கண்டு, முனிந்த நெஞ்சன், ஆலம் மிடற்றான் புரம் அட்டது ஒர் அம்பு போலும் சூலம் எடுத்தான் எறிந்தான், மறம் தோற்றிலாதான். 117 3534. “ஆற்றான் இவன் என்று உணராது, எனது ஆற்றல் காண் “ என்று ஏற்றான், எருவைக்கு இறை முத்தலை எஃகம் மார்பின்; “மேல்தான் இது செய்பவர் யார்? “ என, விண்ணு ேளார்கள் தோற்றாது நின்றார், தம தோள் புடை கொட்டி ஆர்த்தார். 118 3535. பொன் நோக்கியர் தம் புலன் நோக்கிய புன்கணோரும், இன் நோக்கியர் இல் வழி எய்திய நல் விருந்தும், தன் நோக்கிய நெஞ்சு உடை யோகியர் தம்மைச் சார்ந்த மென் நோக்கியர் நோக்கமும், ஆம் என மீண்டது, அவ் வேல். 119 3536. வேகம் முடன், வேல் இழந்தான் படை வேறு எடாமுன், மாகம் மறையும் படி நீண்ட வயங்கு மான் தேர்ப் பாகன் தலையைப் பறித்துப் படர் கற்பினாள் பால் மோகம் படைத்தான் உளைவு எய்த, முகத்து எறிந்தான். 120 3537. எறிந்தான் தனை நோக்கி, இராவணன், நெஞ்சின் ஆற்றல் அறிந்தான்; முனிந்து, ஆண்டது ஒர் ஆடகத் தண்டு வாங்கி, பொறிந்தாங்கு எரியின் சிகை பொங்கி எழப் புடைத்தான்; மறிந்தான் எருவைக்கு இறை, மால்வரை போல மண்மேல். 121 3538. மண்மேல் விழுந்தான்; விழலோடும், வயங்கு மான் தேர்க் கண்மேல் ஒளியும் தொடரா வகை, தான் கடாவி விண்மேல் எழுந்தான்; எழ, மெல்லியலாளும், வெம் தீப் புண்மேல் நுழையத் துடிக்கின்றனள் போல், புரண்டாள். 122 3539. கொழுந்தே அனையாள் குழைந்து ஏங்கிய கொள்கை கண்டான்; “அழுந்தேல் அவலத்திடை; அஞ்சலை அன்னை! “ என்னா எழுந்தான், உயிர்த்தான்; “அட! எங்கு இனிப் போவது! “ என்னா, விழுந்தான் அவன் தேர் மிசை விண்ணவர் பண்ணை ஆர்ப்ப. 123 3540. பாய்ந்தான், அவன் பல் மணித் தண்டு பறித்து எறிந்தான்; ஏய்ந்து ஆர் கதிர்த் தேர் பரி எட்டினொடு எட்டும் எஞ்சித் தீய்ந்து ஆசு அற வீசி அத் திண் திறல் துண்ட வாளால் காய்ந்தான்; கவர்ந்தான் உயிர் காலனும், கை விதிர்த்தான். 124 3541. திண் தேர் அழித்து, ஆங்கு அவன் திண் புறம் சேர்ந்த தூணி, விண்தான் மறைப்பச் செறிகின்றன, வில் இலாமை, மண்டு ஆர் அமர்தான் வழங்காமையின், வச்சைமாக்கள் பண்டாரம் ஒக்கின்றன, வள் உகிரால் பறித்தான். 125 3542. மாச் சிச்சிரல் பாய்ந்தனெ மார்பினும் தோள்கள் மேலும் ஓச்சிச் சிறகால் புடைத்தான்; உலையா விழுந்து, மூர்ச்சித்த இராவணனும் முடி சாய்ந்து இருந்தான்; ‘போச்சு; இத்தனை போலும் நின் ஆற்றல்? ‘ எனப் புகன்றான். 126 3543. அவ்வேலையினே முனிந்தான்; முனிந்து, ஆற்றலன், அவ் வெவ்வேல் அரக்கன், விடலாம் படை வேறு காணான்; “இவ்வேலையினே இவன் இன் உயிர் உண்பென் “ என்னாச் செவ்வே, பிழையா நெடு வாள் உறை தீர்த்து, எறிந்தான். 127 சடாயு வீழ்தல் 3544. வலியின் தலை தோற்றிலன்; மாற்ற அரும் தயெ்வ வாளால் நலியும் தலை என்றது அன்றியும், வாழ்க்கை நாளும் மெலியும் கடை சென்றுளது ஆகலின், விண்ணின் வேந்தன் குலிசம் எறியச் சிறை அற்றது ஒர் குன்றின், வீழ்ந்தான். 128 சீதை வருந்தி த்தல் (3545-3552) 3545. விரிந்து ஆர் சிறை கீழ் உற வீழ்ந்தனன், மண்ணின்; விண்ணோர் இரிந்தார்; “இழந்தாள் துணை! “ என்ன, முனிக் கணங்கள் பரிந்தார்; படர் விண்டுவின் நாட்டவர் பைம்பொன் மாரி சொரிந்தார்; அது நோக்கிய சீதை துளக்கம் உற்றாள். 129 3546. வெள்கும் அரக்கன், நெடு விண் புக ஆர்த்து, மிக்கான்; தொள்கின் தலை எய்திய மான் எனச் சோர்ந்து நைவாள், உள்கும்; உயிர்க்கும்; உயங்கும்; ஒரு சார்பு காணாள், கொள் கொம்பு ஒடியக் கொடி வீழ்ந்தது போல் குலைந்தாள். 130 3547. “வன் துணை உளன் என வந்த மன்னனும் பொன்றினன்; எனக்கு இனிப் புகல் என்? ‘‘ என்கின்றாள்; இன் துணை பிரிந்து இருந்து இன்னல் எய்திய அன்றில் அம் பெடை என அரற்றினாள் அரோ. 131 3548. “பின்னவன் யினை மறுத்துப் பேதையேன் அன்னவன் தனைக் கடிது அகற்றினேன்; பொரு மன்னவன் சிறை அற மயங்கினேன்; விதி இன்னமும் எவ் வினை இயற்றுமோ? “ எனா. 132 3549. “அல்லல் உற்றேனை வந்து ‘அஞ்சல் ‘என்ற இந் நல்லவன் தோற்பதே? நரகன் வெல்வதே? வெல்வதும் பாவமோ? வேதம் பொய்க்குமோ? இல்லையோ அறம்? “ என இரங்கி ஏங்கினாள். 133 3550. “நாண் இலேன் கொடு நடந்த நம்பிமீர்! நீள் நிலை அறம் நெறி நின்றுேளார்க்கு எலாம் ஆணியை உந்தையர்க்கு அமைந்த அன்பனைக் காணிய வம் “ எனக் கலங்கி விம்மினாள். 134 3551. “எல் இயல் விசும்பு இடை இருந்த நேமியாய்! சொல்லிய அற நெறி தொடர்ந்த தோழமை நல் இயல் அரும் கடன் கழித்த நம்பியைப் புல்லுதியோ? “ எனப் பொருமிப் பொங்கினாள். 135 3552. “கற்பு அழியாமை என் கடமை; ஆயினும் பொற்பு அழியா வலம் பொருந்தும் போர் வலான் வில் பழியுண்டது; வினையினேன் வந்த இல் பழியுண்டது “ என்று இரங்கி ஏங்கினாள். 136 சீதையை நிலத்தோடு தோளில் தாங்கி இராவணன் செல்லுதல் 3553. ஏங்குவாள் தன்மையும் இறகு இழந்தவன் ஆங்கு உறு தன்மையும் அரக்கன் நோக்கினான்; வாங்கினன் தேரிடை வைத்த மண்ணொடும் வீங்கு தோள் மீக்கொடு விண்ணின் ஏகினான். 137 சீதையின் நிலை 3554. விண் இடை வெய்யவன் ஏகும் வேகத்தால் கண்ணொடு மனம் இவை சுழன்ற; கற்பினாள் உள் நிறை உணர்வு அழிந்து ஒன்றும் ஓர்ந்திலள்; மண் இடை தன்னையும் மறந்து சாம்பினாள். 138 சடாயு விண்ணோக்கி இரங்குதல் (3555-3561) 3555. ஏகினன் அரக்கனும்; எருவை வேந்தனும் மோக வெம் துயர் சிறிது ஆறி முன்னியே மாகமே நோக்கினன்; வஞ்சன் வல்லையில் போகுதல் கண்டு அகம் புலர்ந்து சொல்லுவான். 139 3556. “வந்திலர் மைந்தரும்; மருகிக்கு எய்திய வெந்துயர் துடைத்தனன் என்னும் மெய்ப் புகழ் தந்திலர் விதியினார் தரும வேலியைச் சிந்தினர்; மேல் இனிச் செயல் என் ஆம் கொலோ? “ 140 3557. “வெற்றியர் உளர் எனின் மின்னின் நுண் இடைப் பொன் தொடிக்கு இந்நிலை புகுதற் பாலதோ? உற்றதை இன்னது என்று உணரகிற்றிலேன்; சிற்றவை வஞ்சனை முடியச் செய்ததோ? “ 141 3558. “பஞ்சு அணை பாம்பு அணை ஆகப் பள்ளி சேர் அஞ்சன வண்ணனே இராமன்; ஆதலால் வெஞ்சின அரக்கனால் வெல்லற்பாலனோ? வஞ்சனை இழைத்தனன் கள்ள மாயையால். “ 142 3559. “வேர் அற அரக்கரை வென்று வெம் பழி தீரும் என் சிறுவனும்; தீண்ட அஞ்சுமால் ஆரியன் தேவியை அரக்கன் நல் மலர்ப் பேர் உலகு அளித்தவன் பிழைப்பு இல் சாபத்தால். “ 143 3560. பரும் சிறை இன்னன பன்னி உன்னுவான்; “அருஞ்சிறை உற்றனளாம் ” எனா மனம் ‘பொரும் சிறை அற்றதேல் பூவை கற்பு எனும் இரும் சிறை இறாது ‘என இடரும் நீங்கினான். 144 3561. அம் சிறைக் குருதி யாறு அழிந்து சோர்வு உற “வஞ்சியை மீட்கிலேன் ” என்னும் மானமும் செஞ்செவே மக்கள்பால் சென்ற காதலும் நெஞ்சு உறத் துயின்றனன் உணர்வு நீங்கலான். 145 சீதையை அசோகவனத்தில் சிறை வைத்தல் 3562. வஞ்சியை அரக்கனும் வல்லை கொண்டுபோய்ச் செஞ்செவே திரு உரு தீண்ட அஞ்சுவான் நஞ்சு இயல் அரக்கியர் நடுவண் ஆயிடைச் சிஞ்சுப வனத்திடைச் சிறை வைத்தான் அரோ. 146 கவிக் கூற்று. 3563. இந்நிலை இனையவன் செயல் இயம்பினாம்; “பொன் நிலை மானின் பின் தொடர்ந்து போகிய மன் நிலை அறிக “ என மங்கை ஏவிய பின் இளையவன் நிலை பேசுவாம் அரோ. 147 இலக்குவன் துயர்நிலை. 3564. ஒருமகள் தனிமையை உன்னி உள் உறும் பருவரல் மீதிடப் பதைக்கும் நெஞ்சினான் பெருமகன் தனைத் தனிப் பிரிந்து பேது உறும் திருநகர்த் தீரும் அப் பரதன் செய்கையான். 148 இலக்குவன் இராமனைக் காணுதல். 3565. தணெ் திரைக் கலம் என விரைவில் செல்கின்றான் புண்டரீகத் தடம் காடு பூத்து ஒரு கொண்டல் வந்து இழிந்தன கோலத்தான் தனை கண்டனன் மனம் எனக் களிக்கும் கண்ணினான். 149 இராமன் இலக்குவனைக் காணுதல் 3566. “துண் எனும் அவ் தொடரத் தோகையும் பெண் எனும் பேதைமை மயக்கப் பேதினால் உள்நிறை சோரும் “ என்று ஊசலாடும் அக் கண்ணனும் இளவலைக் கண்ணுற்றான் அரோ. 150 இலக்குவன் வருதல் கண்டு இராமன் சிந்தித்தல் 3567. “புன் சொற்கள் தந்த பகு வாய் அரக்கன் பொய் எனாது, புலர்வாள் வன் சொற்கள் தந்து மடமங்கை ஏவ, நிலை தேர வந்த மருளே தன் சொல் கடந்து தளர்கின்ற நெஞ்சம் உடையேன் மருங்கு, தனியே என் சொல் கடந்து, மனமும் தளர்ந்த இளவீரன் வந்த இயல்பே. ‘‘ 151 இராமன் இலக்குவனை வினவுதல் 3568. என்று உன்னி, “என்னை விதியார் முடிப்பது? “ என எண்ணி நின்ற இறையைப் பொன் துன்னு வில் கை வய வீரன் வந்து புனைதாள் இறைஞ்சு பொழுதில் மின் துன்னு நூலின் மணி மார்பு அழுந்த, விரைவோடு புல்லி, உருகா, நின்று, “உன்னி, வந்த நிலை என்கொல்?“ என்று, நெடியோன் விளம்ப, நொடிவான். 152 இலக்குவன் மறுமொழி (3569-3570) 3569. “இல்லா நிலத்தின் இயையாத வெம் சொல் எழ, வஞ்சி எவ்வம் உற, யான், ‘வல் வாய் அரக்கன் யாகும் ‘என்ன, மதியாள், மறுக்கம் உறுவாள், ‘நில்லாது மற்று இது அறி, போதி ‘என்ன, நெடியோய் புயத்தின் வலி என் சொல்லால் மனத்தின் அடையாள், சினத்தின் முடிவோடு நின்று துவள்வாள். 153 3570. “‘ஏகாது நிற்றி எனின், யான் நெருப்பின் இடை வீழ்வென் ‘என்று, முடுகா மா கானகத்தின் இடை ஓடலோடும், மனம் அஞ்சி வஞ்ச வினையேன், போகாது இருக்கின் இறவாது இருக்கை புணராள் என கொடு உணரா, ஆகாது இறக்கை; அறன் அன்று; எனக்கொடு இவண் வந்தது‘‘ என்ன அமலன். 154 இராமன் சிந்தனை 3571. “சாவாது இருத்தல் இவள் ஆனது, உற்றது; அஃதோ தடுக்க முடியாது; ஆ! ஆ! அலக்கண் உறுவாள் த்த பொருேளா அகத்தின் அடையா; காவா நிலத்தின் வரும் ஏதம்; மற்று அது, ஒழியாது கைக்கொடு அகலப் போவார், பிரிக்க முயல்வார் புணர்த்த பொருள் ஆகும்; என்று தரெுளா. 155 இராமன் இலக்குவனுக்குக் கூறுவது 3572. “வந்தாய் திறத்தின் உளது அன்று குற்றம்; மடவாள் மறுக்கம் உறுவாள், சிந்தாகுலத்தொடு செய்த செய்கை அது தீதும் அன்று, தெளிவாய், முந்தே தடுக்க ஒழியாது, எடுத்த வினையேன் முடித்த முடிவால், அந்தோ! கெடுத்தது ‘‘ என உன்னி உன்னி அழியாத உள்ளம் அழிவான். 156 இராமன் சீதையிருந்த சோலைக்கு விரைதல் 3573. “பாணிக்க நின்று பயன் ஆவது என்னை? பயில் பூவை அன்ன குயிலைக் காணில் கலந்த துயர் தீரும் அன்றி, அயல் இல்லை ‘‘ என்று கடுகிச் சேண் உற்று அகன்ற நெறி ஊடு சென்று, சிலை வாளி அன்ன விசை போய், ஆணிப் பசும்பொன் அனையாள் இருந்த அவிர் சோலை வல்லை அணுகா. 157 சீதையைக் காணாமல் இராமன் திகைத்து நிற்றல் (3574-3575) 3574. ஓடி வந்தனன், சாலையின் சோலையின் உதவும் தோடு இவர்ந்த பூஞ் சுரிக் குழலாள் தனை காணான், கூடு தன்னுடையது பிரிந்தாருயிர், குறியா, நேடி வந்து, அது கண்டிலது என நின்றான். 158 3575. கைத்த சிந்தையன், கணம் குழை அணங்கினைக் காணாது, உய்த்து வாழ்தர வேறு ஒரு பொருள் இலான், உதவ வைத்த மா நிதி, மண்ணொடு மறைந்தன, வாங்கிப் பொய்த்து உேளார் கொளத் திகைத்து நின்றானையும் போன்றான். 159 அப்போது உலகப் பொருள்கட்கு நேர்ந்த நிலை (3576-3578) 3576. மண் சுழன்றது; மால் வரை சுழன்றது; மதியோர் எண் சுழன்றது; சுழன்றது அவ் எறி கடல் ஏழும்; விண் சுழன்றது; வேதமும் சுழன்றது; விரிஞ்சன் கண் சுழன்றது; சுழன்றது கதிரொடு மதியும். 160 3577. “அறத்தைச் சீறுங்கொல்? அருளையே சீறுங்கொல்? அமரர் திறத்தைச் சீறுங்கொல்? முனிவரைச் சீறுங்கொல்? தீயோர் மறத்தைச் சீறுங்கொல்? ‘என் கொலோ முடிவு? ‘என்று மறையின் நிறத்தைச் சீறுங்கொல்? நெடுந்தகையோன் ‘‘ என நடுங்கா. 161 3578. நீல மேனி அந்நெடியவன் மனநிலை திரிய, மூல காரணத்தவனொடும் உலகு எலாம் முற்றும் காலம் ஆம் எனக் கடையிடும் கணக்கு அரும் பொருள்கள், மேல கீழ் உறக் கீழன மேல் உறும் வேலை. 162 இலக்குவன், தேடிச் செல்லுவோம் எனல் 3579. “தேரின் ஆழியும் தரெிந்தனம்; தீண்டுதல் அஞ்சிப் பாரினோடு கொண்டு அகன்றதும் பார்த்தனம்; பயன் இன்று ஓரும் தன்மை ஈது என் என்பது? உரன் இலாதவர் போல்; தூரம் போதல் முன் தொடர்தும் ‘‘ என்று, இளையவன் தொழலும். 163 இராமனும் உடன்பட்டுப் போதல் 3580. “ஆம்; அதே இனி அமைவது “ என்று, அமலனும், மெய்யில் தாம வார் கணைப் புட்டிலும் முதலிய தாங்கி வாம மால் வரை மரன் இவை மடிதர, வயவர், பூமி மேல் அவன் தேர் சென்ற நெடு நெறி போனார். 164 தேர் சென்ற சுவடு மறைய வருந்துதல் 3581. மண்ணின் மேல் அவன் தேர் சென்ற சுவடு எலாம் மாய்ந்து, விண்ணின் ஓங்கியது ஒரு நிலை; மெய் உற வெந்த புண்ணின் ஊடு உறு வேல் என, மனம் மிகப் புழுங்கி, “எண்ணின் நாம் இனிச் செய்வது என்? இளவலே! “ என்றான். 165 இலக்குவன் அமைதி கூறல் 3582. “தறெ்கு நோக்கியது எனும் பொருள் தரெிந்தது, அத்திண் தேர்; மற்கு நோக்கிய திரள் புயத்து அண்ணலே! வானம், விற்கு நோக்கிய பகழியின் நெடிது அன்று; விம்மி, நிற்கும் நோக்கு இது, என் பயத்தது? என்று இளையவன் நேர்ந்தான். 166 வீணைக் கொடியைக் காணுதல் 3583. “ஆகும்; அன்னதே கருமம் “ என்று, அத்திசை நோக்கி, ஏகி, யோசனை இரண்டு சென்றார், இடை எதிர்ந்தார், மாக மால் வரை கால் பொர மறிந்தது மானப் பாக வீணையின் கொடி ஒன்று கிடந்தது பார் மேல். 167 கொடி துணிந்துள்ள நிலையை ஆராய்தல்(3584-3585) 3584. கண்டு, “கண்டகரோடும் அக் காரிகை பொருட்டால், அண்டர் ஆதியர்க்கு ஆர் அமர் விளைந்தது? ‘‘ என்று அயிர்த்தார்; துண்ட வாளினில் சுடர்க் கொடி துணிந்தது என்று உணராப் புண்டரீகக் கண் புனல் வரப் புரவலன் புகல்வான். 168 3585. “நோக்கினால், ஐய! நொய்து இவண் எய்திய நுந்தை மூக்கினால் இது முறிந்தமை முடிந்ததான்; மொய்ம்பின் தாக்கினான்; நடு அடுத்தது தரெிகிலம்; தமியன்; யாக்கை தேம்பிடும்; எண்ணரும் பருவங்கள் இறந்தான்.‘‘ 169 இலக்குவன் சொல் 3586. “நன்று சாலவும்; நடுக்கு அரு மிடுக்கினன்; நாமும் சென்று கூடலாம்; பொழுது எலாம் தடுப்பது திடனால்; வென்று, மீட்கினும் மீட்குமால்; வேறு உற எண்ணி, நின்று தாழ்த்து ஒரு பயன் இலை ‘‘ என்றலும், நெடியோன். 170 இராம இலக்குவர் இராவணனது வில் முறிந்திருத்தலைக் காணுதல் 3587. “தொடர்வதே நலம் ஆம் “ எனப் படிமிசைச் சுற்றிப் படரும் கால் எனக் கறங்கு எனச் செல்லுவார் பார்த்தார், மிடல்கொள் வெம் சிலை, விண் இடு வில் முறிந்து என்ன கடலின் மாடு உயர் திரை எனக் கிடந்தது கண்டார். 171 வில்லை ஒடித்த சடாயுவை இராமன் வியத்தல் 3588. “சிலை கிடந்ததால், இலக்குவ! தேவர் நீர் கடைந்த மலை கிடந்தன வலியது; வடிவினால் மதியின் கலை கிடந்தன காட்சியது; இது கடித்து ஒடித்தான் நிலை கிடந்தவா நோக்கு! ‘‘ என நோக்கினன் நின்றான். 172 இராவணனது அம்பறாத்தூணியைக் காணுதல் 3589. நின்று, பின்னரும் நெடு நெறி கடந்து உற நிமிரச் சென்று நோக்கினர், திரிசிகைத் திணி நெடுஞ் சூலம் ஒன்று, பல் கணை மழை உறு புட்டில் ஓர் இரண்டு குன்று போல் அவண் கிடந்த கண்டு அதிசயம் கொண்டார். 173 இராவணனது கவசத்தைக் காணுதல் 3590. மறித்தும் சென்றனர்; வான் இடை வயங்கு உற வழங்கி எறிக்கும் சோதிகள் யாவையும் தொக்கன எனலாய் நெறிக் கொள் கானகம் மறைதர, நிருதர் கோன் நெஞ்சில் பறித்து வீசிய கவசமும் கிடந்தது பார்த்தார். 174 இராவணனது குதிரை முதலிய கிடந்த இடத்தை அடைதல் 3591. கான் கிடந்தது மறைதரக் கால் வயக் கலி மா தான் கிடந்த உழி சாரதி கிடந்துழி சார்ந்தார்; ஊன் கிடந்து ஒளிர் உதிரமும் கிடந்துழி உலகில் வான் கிடந்தது போன்ற தேர் கிடந்துழி வந்தார். 175 இராவணனது குண்டலங்களைக் காணுதல் 3592. கண்டு, அலங்கு தம் கைத்தலம் விதிர்த்தனர், கவின் ஆர் விண் தலம் துறந்து, இறுதியின் விரி கதிர் வெய்யோன் மண்டலம் பல, மண்ணிடைக் கிடந்தன மணியின் குண்டலம் பல, குலம் மணி பூண்களின் குவியல். 176 குண்டலம் முதலியன பலவாக இருத்தலைக் கொண்டு போர் செய்தோர் பலர் என இராமன் கூறுதல் 3593. “தோள் அணிக்குலம் பல உள; குண்டலத் தொகுதி வாள் இமைப்பன பல உள; மணி முடி பலவால்; நாள் அனைத்தையும் கடந்தனன், தமியன், நம் தாதை; யாளி போல்பவர் பலர் உளர், பொருதனர்; இளையோய்! ‘‘ 177 பொருதவன் இராவணன் ஒருவனே என இலக்குவன் கூறல் 3594. திருவின் நாயகன் செயச் சுமித்திரை சிங்கம், “தருவின் நீளிய தோள் பல, தலை பல என்றால், பொருது தாதையை இத்தனை நெறிக்கொடு போனான் ஒருவனே; அவன் இராவணன் ஆம் ‘‘ என த்தான். 178 சடாயுவைக் காணுதல் 3595. மடலுள் நாட்டிய தார் இளையோன் சொலை மதியா, மிடலுள் நாட்டங்கள் தீ உக நோக்கினன் விரைவான், உடலுள் நாட்டிய குருதி அம் பரவையின் உம்பர்க் கடலுள் நாட்டிய மலை அன்ன தாதையைக் கண்டான். 179 இராமன் சடாயுவின் உடல்மேல் வீழ்ந்து அரற்றுதல் (3596-3602) 3596. துள்ளி, ஓங்கு செந்தாமரை நயனங்கள் சொரியத் தள்ளி, ஓங்கிய அமலன் தன் தனி உயிர்த் தந்தை வள்ளியோன் திரு மேனியில் தழல் நிற வண்ணன் வெள்ளி ஓங்கலில் அஞ்சன மலை என வீழ்ந்தான். 180 3597. உயிர்த்திலன் ஒரு நாழிகை; “உணர்வு இலன் கொல்? “ என்று அயிர்த்த தம்பி புக்கு, அம் கையின் எடுத்தனன், அருவிப் புயல் கலந்த நீர் தெளித்தலும், புண்டரீகக் கண் பெயர்த்துப் பைப் பய அயர்வு தீர்ந்து, இனையன பேசும். 181 3598. “தம் தாதையரைத் தனையர் கொலை நேர்ந்தார் முந்து ஆரே உள்ளார்? முடிந்தான் முனை ஒருவன்; எந்தாய்! ஓ! எற்கு ஆக நீயும் இறந்தனையோ? அந்தோ! வினையேன் அருங் கூற்றம் ஆனேனே! ‘‘ 182 3599. “பின் உறுவது ஓராதே பேதுறுவேன், பெண்பாலாள் தன் உறுவல் தீர்ப்பான், தனி உறுவது ஓராதே, உன் உறவு நீ தீர்த்தாய்; ஓர் உறவும் இல்லாதேன் என் உறுவான் வேண்டி இடர் உறுவேன்? எந்தாயே! ‘‘ 183 3600. “மாண்டேனே அன்றோ? மறையோர் குறை முடிப்பான் பூண்டேன் விரதம்; அதனால் உயிர் பொறுப்பேன்; நீண்டேன் மரம்போல நின்று ஒழிந்த புன்தொழிலேன் வேண்டேன், இம் மா மாயப் புன்பிறவி வேண்டேனே! ‘‘ 184 3601. “என் தாரம் பற்று உண்ண ஏன்றாயைச் சான்றோயைக் கொன்றானும் நின்றான்; கொலை உண்டு நீ கிடந்தாய்; வன் தாள் சிலை ஏந்தி, வாளிக் கடல் சுமந்து, நின்றேனும் நின்றேன், நெடு மரம்போல் நின்றேனே. ‘‘ 185 3602. “சொல் உடையார் என்போல் இனி உளரோ? தொல் வினையேன் இல் உடையாள் காண, இறகு உடையாய்! எண் இலாப் பல் உடையாய்! உன்னைப் படை உடையான் கொன்று அகல, வில் உடையேன் நின்றேன்; விறல் உடையேன் அல்லேனோ? ‘‘ 186 சடாயு உயிர்த்தழெுதல் 3603. அன்னா பலபலவும் பன்னி அழும்; மயங்கும்; தன் நேர் இலாதான் தன் தம்பியும் அத்தன்மையனா; உன்னா, உணர்வு சிறிது உள் முளைப்பப் புள் அரசும், இன்னா உயிர்ப்பான், இருவரையும் நோக்கினான். 187 இராம இலக்குவரைக் கண்டு மகிழ்தல் 3604. உற்றது உணராது, உயிர் உலைய வெய்து உயிர்ப்பான் கொற்றவரைக் கண்டான்; தன் உள்ளம் குளிர்ப்பு உற்றான்; இற்ற இரு சிறகும், இன்னுயிரும், ஏழ் உலகும், பெற்றனனே ஒத்தான், “பெயர்த்தேன் பழி “ என்றான். 188 அவர்களை அருகே அழைத்து உச்சி மோத்தல் 3605. “பாக்கியத்தால், இன்று, என் பயன் இல் பழி யாக்கை போக்குகின்றேன், கண்ணுற்றேன்; புண்ணியரே! வம்மின் ‘‘ என்று, தாக்கி அரக்கன் மகுடத் தலை தகர்த்த மூக்கினால் உச்சி முறை முறையே மோக்கின்றான். 189 இரங்கி வினவுதல் 3606. “வஞ்சனையால் வந்த வரவு என்பது என்னுடைய நெஞ்சகமே முன்னம் நினைவித்தது; ஆனாலும், அம் சொல் மயிலை, அருந்ததியை, நீங்கினிரோ, எஞ்சல் இலா ஆற்றல் இருவீரும்? ‘‘ என்று த்தான். 190 இலக்குவன் நிகழ்ந்தது கூறல் 3607. என்று அவன் இயம்பலும் இளைய கோமகன் ஒன்றும் ஆண்டு உறு பொருள் ஒழிவு உறா வகை வன் திறல் மாயம் மான் வந்தது ஆதியா நின்றது நிகழ்ந்தது நிரப்பினான் அரோ. 191 சடாயு அவர்கட்குத் தேறுதல் கூறுதல் 3608. ஆற்றலோன் அவ் அறைய, ஆணையால், ஏற்று, உணர்ந்து, எண்ணி, அவ் எருவை வேந்தனும், “மாற்றரும் துயர் அவர் மனக் கொளா வகை தேற்றுதல் நன்று ‘‘ என, இனைய செப்புவான். 192 சடாயுவின் ஆறுதல் மொழி (3609-3617) 3609. “அதிசயம் ஒருவரால் அமைக்கல் ஆகுமோ? ‘துதி அறு பிறவியின் இன்ப துன்பம்தான் விதி வயம் ‘என்பதை மேற்கொள்ளா விடின் மதி வலியால் விதி வெல்ல வல்லமோ? “ 193 3610. “தரெிவுறு துன்பம் வந்து ஊன்றச் சிந்தையை இரிவு செய்து ஒழியுமது இழுதை நீரதால்; பிரிவு செய்து உலகு எலாம் பெறுவிப்பான் தலை அரிவு செய் விதியினார்க்கு அரிது உண்டாகுமோ? “ 194 3611. “அலக்கணும் இன்பமும் அணுகும் நாள் அவை விலக்குவம் என்பது மெய்யிற்று ஆகுமோ? இலக்கு முப்புரங்களை எய்த வில்லியார் தலை கல அத்து இரந்தது தவத்தின் பாலதோ? “ 195 3612. “பொங்கு வெம் கோள் அரா விசும்பு பூத்தன வெம் கதிர்ச் செல்வனை விழுங்கி நீங்குமால்; அம் கண்மா ஞாலத்தை விளக்கும் ஆய் கதிர் திங்களும் ஒரு முறை வளரும் தேயுமால். “ 196 3613. “அந்தரம் வருதலும் அனைய தீர்தலும் சுந்தரத் தோளினிர்! தொன்மை நீரவால்; மந்திர இமையவர் குருவின் வாய் மொழி இந்திரன் உற்றன எண்ண ஒண்ணுமோ? “ 197 3614. “தடைக்கு அரும் பெருவலிச் சம்பரப் பெயர்க் கடைத் தொழில் அவுணனால், குலிசக் கையினான், படைத்தனன் பழி; அது, பகழி வில் வலாய்! துடைத்தனன் நுந்தை, தன் குவவுத் தோளினால். ‘‘ 198 3615. “பிள்ளைச் சொல் கிளி அனாளைப் பிரிவுறல் உற்ற பெற்றி, தள்ளுற்ற அறமும், தேவர் துயரமும், தந்ததேயால்; கள்ளப் போர் அரக்கர் என்னும் களையினைக் களைந்து வாழ்தி; புள்ளிற்கும், புலன் இல் பேய்க்கும், தாய் அன்ன புலவு வேலோய்! 199 3616. “வடுக்கண், வார் கூந்தலாளை, இராவணன் மண்ணினோடும் எடுத்தனன் ஏகுவானை, எதிர்ந்து, எனது ஆற்றல் கொண்டு தடுத்தனென், ஆவது எல்லாம்; தவத்து, அரன் தந்த வாளால் படுத்தனன்; இங்கு வீழ்ந்தேன்; இது இன்று பட்டது ‘‘ என்றான். 200 இராமன் சீற்றம் 3617. கூறின மாற்றம் சென்று செவித்துளை குறுகா முன்னம், ஊறின உதிரம், செங்கண்; உயிர்த்தன, உயிர்ப்புச் செந்தீ; ஏறின புருவம் மேல் மேல்; இரிந்தன சுடர்கள் எங்கும்; கீறினது அண்ட கோளம்; கிழிந்தன கிரிகள் எல்லாம். 201 கவிக்கூற்று 3618. மண்ணகம் திரிய, நின்ற மால் வரை திரிய, மற்றைக் கண் அகன் புனலும் காலும் கதிரொடும் திரியக் காவல் விண் அகம் திரிய, மேலை விரிஞ்சனும் திரிய, “வீரன் எண் அரும் பொருள்கள் எல்லாம் ‘‘ என்பது தரெிந்தது அன்றே. 202 3619. “குறித்த வெங்கோபம் யார் மேல் கோள் உறும் கொல்? “ என்று அஞ்சி, வெறித்து நின்று, உலகம் எல்லாம் விம்முறுகின்ற வேலை, பொறிப் பிதிர் படலைச் செந்தீப் புகையொடு பொடிப்பப் பொம் என்று, எறிப்பது ஓர் முறுவல் தோன்ற, இராமனும் இயம்பல் உற்றான். 203 இராமன் வெகுளிச் சொற்கள் (3620-3622) 3620. “பெண் தனி ஒருத்தி தன்னைப் பேதை வாள் அரக்கன் பற்றிக் கொண்டனன் ஏக, நீ இக் கோளுறக் குலுங்கல் செல்லா எண் திசை இறுதியான உலகங்கள் இவற்றை, இன்னே, கண்ட வானவர்கேளாடும் களையுமாறு, இன்று காண்டி. ‘‘ 204 3621. “தாரகை உதிரு மாறும், தனிக்கதிர் பிதிருமாறும், பேர் அகல் வானம் எங்கும் பிறங்கு எரி பிறக்குமாறும், நீரொடு நிலனும், காலும், நின்றவும், திரிந்த யாவும், வேரொடும் அழியு மாறும், விண்ணவர் விளியு மாறும். ‘‘ 205 3622. “இக்கணம் ஒன்றில், நின்ற ஏழினோடு ஏழு சான்ற மிக்கன போன்று தோன்றும், உலகங்கள் வீயு மாறும், திக்கு உடை அண்ட கோளப் புறத்தவும் தீந்து, நீரின் மொக்குளின் உடையு மாறும், காண் ‘‘ என முனியும் வேலை. 206 சூரியன் மறைய உலகம் அஞ்சுதல் 3623. வெஞ்சுடர்க் கடவுள் மீண்டு, மேருவில் மறையலுற்றான்; எஞ்சல் இல் திசையில் நின்ற யானையும் இரியல் போய; துஞ்சின உலகம் எல்லாம் என்பது என்? துணிந்த நெஞ்சின், அஞ்சினன், இளைய கோவும்; அயல் உேளார்க்கு அவதி உண்டோ? 207 சடாயு இராமன் வெகுளியைத் தணித்தல் (3624-3628) 3624. இவ் வழி நிகழும் வேலை, எருவைகட்கு இறைவன், “யாதும், செவ்வியோய்! முனியல்; வாழி! தேவரும் முனிவர் தாமும், வெவ்வலி வீர! நின்னால் ‘வேறும் ‘என்று ஏமுற்று உய்வார், எவ்வலி கொண்டு வெல்வார், இராவணன் செயலை? ‘‘ என்றான். 208 3625. “நாள் செய்த கமலத்து அண்ணல் நல்கின நவை இல் ஆற்றல் தோள் செய்த வீரம் என்னில் கண்டனை; சொல்லும் உண்டோ? தாள் செய்ய கமலத்தானே முதலினர், தலை பத்து உள்ளாற்கு ஆட் செய் கின்றார்களன்றி, அறம் செய்கின்றார்கள் யாரே? ‘‘ 209 3626. “தணெ் திரை உலகம் தன்னில், செறுநர்மாட்டு ஏவல் செய்து பெண்டிரின் வாழ்வர் அன்றே! இது அன்றோ தேவர் பெற்றி? பண்டு உலகு அளந்தோன் நல்கப் பாற்கடல் அமுதம் அந் நாள் உண்டிலர் ஆகில், இந் நாள் அன்னவர்க்கு உய்தல் உண்டோ? 210 3627. “வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடைத் தமியள் வைகக், கொம்பு இழை மானின் பின் போய்க் குலப்பழி கூட்டிக் கொண்டீர்; அம்பு இழை வரிவில் செங்கை ஐயன்மீர்! ஆயும் காலை, உம் பிழை என்பது அல்லால், உலகம் செய் பிழையும் உண்டோ? ‘‘ 211 3628. “ஆதலால், முனிவாய் அல்லை; அருந்ததி அனைய கற்பின் காதலாள் துயரம் நீக்கித் தேவர்தம் கருத்தும் முற்றி, வேத நூல் முறையின் யாவும் விதியுளி நிறுவி, வேறும் தீது உள துடைத்தி ‘‘ என்றான், சேவடிக் கமலம் சேர்வான். 212 இராமன் தணிதல் 3629. புயல் நிற வண்ணன், ஆண்டு, அப் புண்ணியன் புகன்ற சொல்லைத் “தயரதன் பணி ஈது “ என்னச் சிந்தையில் தழுவி நின்றான்; “அயல் இனி முனிவது என்னை? அரக்கரை வருக்கம் தீர்க்கும் செயல் இனிச் செயல் ‘‘ என்று எண்ணிக், கண்ணிய சீற்றம் தீர்ந்தான். 213 சடாயு உயிர் நீத்தல் 3630. ஆயபின், அமலன் தானும், “ஐய! ‘நீ அமைதி ‘என்ன வாய் இடை மொழிந்தது அன்றி, மற்று ஒரு செயலும் உண்டோ? போயது அவ் அரக்கன் எங்கே? புகல் ‘‘ எனப் புள்ளின் வேந்தன் ஓய்வினன், உணர்வும் தேய, த்திலன், உயிரும் தீர்ந்தான். 214 கவிக்கூற்று (3631-3632) 3631. சீதம் கொள் மலர் உேளானும், தேவரும் என்பது என்னே? வேதங்கள் காண் கிலாமை, வெளிநின்றே மறையும் வீரன் பாதங்கள் கண்ணில் பார்த்தான்; படிவம் கொள் நெடிய பஞ்ச பூதங்கள் விளியும் நாளும் போக்கு இலா உலகம் புக்கான். 215 3632. வீடு அவன் எய்தும் வேலை, விரிஞ்சனே முதல மேலோர், ஆடவர்க்கு அரசனோடு தம்பியும், அழுது சோர, காடு அமர் மரமும் மாவும் கற்களும் கரைந்து சாய்ந்த; சேடரும் பாரினோர்க்கும் கரம் சிரம் சேர்ந்த அன்றே. 216 இராமன் இரங்கி வினவுதல் 3633. “அறம் தலை நின்றிலாத அரக்கனின், ஆண்மை தீர்ந்தேன்; துறந்தனென், தவம் செய்கேனோ? துறப்பெனோ உயிரைச் சொல்லாய்? பிறந்தனென் பெற்று நின்ற பெற்றியால், பெற்ற தாதை இறந்தனன்; இருந்துளேன் யான்; என் செய்கேன்? இளவல்! ‘‘ என்றான். 217 இலக்குவன் தேற்றுதல் 3634. என்றலும், இளைய கோ அவ் இறையினை இறைஞ்சி, “யாண்டும் வென்றியாய்! விதியின் தன்மை பழி அல; விளைந்தது ஒன்றோ? நின்று இனி நினைவது என்னே? நெருக்கிய அரக்கர் தம்மைக் கொன்றபின் அன்றோ, வெய்ய கொடுந்துயர்க் குளிப்பது? ‘‘ என்றான். 218 3635. “எந்தை ஈது இயம்பிற்று என்னை? எண்மையன் ஆகி ஏழைச் சந்த வார் குழலினாளைத் துறந்தனை தணிதி யேனும், உந்தையை உயிர் கொண்டானை உயிர் கொள்ளும் ஊற்றம் இல்லாச் சிந்தையை ஆகின் நன்று, செய் தவம் செய்கை ‘‘ என்றான். 219 ‘சடாயுவுக்கு ஈமச் சடஙகு இயற்றுவோம் ‘என இராமன் கூறுதல் 3636. அவ்வழி இளவல் கூற, அறிவனும் அயர்வு நீங்கி, “இவ்வழி இனைய எண்ணின் ஏழைமைப் பாலது “ என்னா, வெவ்வழி பொழியும் கண்ணீர் விலக்கினன், “விளிந்த தாதை செவ்வழி உரிமை யாவும் திருத்துவம்; சிறுவ! ‘‘ என்றான். 220 ஈம விறகு அமைத்தல் 3637. இந்தனம் எனைய என்னக் கார் அகில் ஈட்டத்தோடும் சந்தனம் குவித்து, வேண்டும் தருப்பையும் திருத்திப் பூவும் சிந்தினன்; மணலின் வேதி தீது அற இயற்றித் தெள் நீர் தந்தனன்; தாதை தன்னைத் தடக்கையான் எடுத்துச் சார்வான். 221 ஈமப் பள்ளியில் தீவைத்தல் 3638. ஏந்தினன் இருகை தன்னால் ஏற்றினன் ஈமம் தன் மேல்; சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன்; தலையின் சாரல் காந்து எரி கஞல மூட்டிக் கடன் முறை கடவா வண்ணம் நேர்ந்தனன் நிரம்பும் நன்னூல் மந்திர நெறியின் வல்லான். 222 இராமன் நீர்க்கடன் செய்தல் 3639. தளிர்த்தன களித்த பச்சைத் தாமரைக் கெழுவு செம்பூத் துளித்தன அனைய என்னத் துள்ளி சோர் வெள்ளக் கண்ணன், குளித்தனன் கொண்டல்; ஆற்றுக் குளித்தபின், கொண்ட நன்னீர் அளித்தனன்; அரக்கர்ச் செற்ற சீற்றத்தான் அவலம் தீர்ந்தான். 223 கவிக்கூற்று 3640. மீட்டு இனி ப்பது என்னே? விரிஞ்சனே முதல மேல், கீழ், காட்டிய உயிர்கள் எல்லாம் அருந்தின களித்த போலாம்; பூட்டிய கைகளால், அப் புள்ளினுக்கு அரசைக் கொள்க என்று, ஊட்டிய நல் நீர் ஐயன் உண்ட நீர் ஒத்தது அன்றே! 224 சூரியன் மறைவு 3641. பல் வகை துறையும், வேதப் பலிக் கடன் பலவும் முற்றி, வெல்வகைக் குமரன் நின்ற வேலையின், வேலை சார்ந்தான், தொல்வகைக் குலத்தின் வந்தான் துன்பத்தால், புனலும் தோய்ந்து, செல்வகைக்கு உரிய எல்லாம் செய்குவான் என்ன, வெய்யோன். 225  

Previous          Next