1399. வான் நின்று இழிந்து வரம்பு இகந்த மாபூதத்தின் வைப்பு எங்கும், ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறனும் உளன் என்ப; கூனும் சிறிய கோத் தாயும் கொடுமை இழைப்பக் கோல் துறந்து, கானும் கடலும் கடந்து, இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தை. 1

Previous          Next