Tamil Daily Rasi Palan 22nd January 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  22.01.2017

22.01.2017, தை 9, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி இரவு 10.00 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி, விசாகம் நட்சத்திரம் பகல் 11.03 வரை பின்பு அனுஷம், நாள் முழுவதும் மரணயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, சுப முயற்சிகளை தவிர்க்கவும்.   இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,    
செவ்
கேதுசுக்கி   திருக்கணித கிரக நிலை22.01.2017    
சூரிய ராகு
புதன் சனி  சந்தி குரு
 

இன்றைய ராசிப்பலன் – 22.01.2017

aries-single-iconமேஷம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை.
taurus-single-iconரிஷபம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் இரட்டிப்பாகும்.
gemini-single-iconமிதுனம் இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை அடையப் போகிறீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும்.
cancer-single-iconகடகம் இன்று நீங்கள் குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் வீண் மனஸ்தாபங்களை தவிர்க்கலாம். பிள்ளைகளால் மதிப்பு கிடைக்கும். மதிநுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் உங்களின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள்.
leo-single-iconசிம்மம் இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும்.
virgo-single-iconகன்னி இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாமல் இருக்கும். பிள்ளைகள் கலைத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். அனுபவமுள்ளவர்களின் அறிவுரையால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.
libra-single-iconதுலாம் இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை அதிகமாகும். வீட்டில் சுப பேச்சுக்கள் நல்ல பலனை தரும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.
sagittarius-single-iconதனுசு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள்.
capricorn-single-iconமகரம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துகளை விற்பதில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வீட்டு தேவை பூர்த்தியாகும்.
aquarius-single-iconகும்பம் இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளின் படிப்பிற்கான கல்வி கடன் கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும்.
pisces-single-iconமீனம்   இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும். வியாபார சம்பந்தமாக வெளி வட்டார நட்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனைகள் குறையும்.
Daily-Rasi-Fala-20-06-17

Odia Rashifal 2017 Today 20th June

Daily-Rasi-Fala-19-06-17

Odia Rashifal 2017 Today 19th June

Daily-Rasi-Fala-18-06-17

Odia Rashifal 2017 Today 18th June

Daily-Rasi-Fala-17-06-17-1

Odia Rashifal 2017 Today 17th June

Daily-Rasi-Fala-16-06-17

Odia Rashifal 2017 Today 16th June

Daily-Rasi-Fala-15-06-17

Odia Rashifal 2017 Today 15th June

Daily-Rasi-Fala-14-06-17

Odia Rashifal 2017 Today 14th June

Daily-Rasi-Fala-13-06-17

Odia Rashifal 2017 Today 13th June