இந்திரசித்தின் வெகுளி 5826. அவ் வழி அவ் கேட்ட ஆண்தகை வெவ் வழி எரி புக வெகுளி வீங்கினான் எவ்வழி உலகமும் குலைய இந்திரத் தவெ் அழிதர உயர் விசயச் சீர்த்தியான். 1 இந்திரசித்து போர்க்கு எழல் 5827. அரம் சுடர் வேல் தனது இளவல் அற்ற சொல் உரம் சுட எரி உயிர்த்து ஒருவன் ஓங்கினான்; புரம் சுட வரிசிலைப் பொருப்பு வாங்கிய பரம் சுடர் ஒருவனைப் பொருவும் பான்மையான். 2 இந்திரசித்து தேர் ஏறுதல் 5828. ஏறினன் விசும்பினுக்கு எல்லை காட்டுவான் ஆறு இருநூறு பேய் பூண்ட ஆழித் தேர்; கூறின கூறின சொற்கள் கோத்தலால் பீறின நெடும் திசை பிளந்தது அண்டமே. 3 படையின் ஆரவாரம் 5829. ஆர்த்தன, கழலும் தாரும் பேரியும் அசனி அஞ்ச; வேர்த்து உயிர் குலைய மேனி வெதும்பினன் அமரர் வேந்தன்; “சீர்த்தது போரும் “ என்னாத் தேவர்க்கும் தேவர் ஆய மூர்த்திகள் தாமும் தத்தம் யோகத்தின் முயற்சி விட்டார். 4 இந்திரசித்தின் துன்பமும் வீரமும் 5830. தம்பியை நினையும் தோறும் தாரைநீர் ததும்பும் கண்ணான், அம்பு இயல் சிலையை நோக்கி வாய் மடித்து உருத்து நக்கான்; “கொம்பு இயல் மாய வாழ்க்கைக் குரங்கினால், குறுகா வாழ்க்கை எம்பியோ தேய்ந்தான்? எந்தை புகழ் அன்றோ தேய்ந்தது ‘‘ என்றான். 5 வேற்படை யானைப்படை முதலியவற்றின் மிகுதி 5831. வேல் திரண்டனவும், வில்லும் மிடைந்தவும், வெற்பு என்றாலும் கூறு இரண்டு ஆக்கும் வாள் கைக் குழுவையும், குணிக்கல் ஆற்றேம்; சேறு இரண்டு அருகு செய்யும் செறிமதச் சிறு கண் யானை ஆறு இரண்டு அஞ்சு நூற்றின் இரட்டி; தேர்த் தொகையும் அஃதே. 6 இந்திரசித்து இராவணன் கோயில் புகல் 5832. ஆய மாத் தானை தான் வந்து அண்மியது; அண்ம, ஆண்மைத் தீய வாள் நிருதர் வேந்தர் சேர்ந்தவர் சேரத் தேரில் ஏ எனும் அளவின் வந்தான்; இராவணன் இருந்த யாணர் வாயில் தோய் கோயில் புக்கான், அருவி சோர் வயிரக் கண்ணான். 7 இந்திரசித்து இராவணனிடம் பேசல் (5833-5836) 5833. தாள் இணை வீழ்ந்தான்; தம்பிக்கு இரங்கினான்; தறுகணானும் தோள் இணை பற்றி ஏந்தித் தழுவினான்; அழுது சோர்ந்தான்; வாள் இணை நெடும் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க, மீளி போல் மொய்ம்பினானும் விலக்கினன்; விளம்பல் உற்றான். 8 5834. “ஒன்று நீ உறுதி ஓராய், உற்று இருந்து உளையகிற்றி; வன்திறல் குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்து மன்னோ, ‘சென்று நீர் பொருதிர் ‘என்று, திறம் திறம் செலுத்தித் தீயக் கொன்றனை நீயே அன்றோ? அரக்கர் தம் குழுவை ‘‘ என்றான். 9 5835. கிங்கரர், சம்புமாலி, கேடு இலா ஐவர், என்று இப் பைங்கழல் அரக்கரோடும் உடன் சென்ற ப குதிச் சேனை, இங்கு ஒரு பேரும் மீண்டார் இல்லையேல், குரங்கு அது, எந்தாய்! சங்கரன், அயன், மால், என்பார் தாம் எனும் தரத்தது ஆமோ. 10 5836. திக்கய வலியும், மேல்நாள் திரிபுரம் தீயச் செற்ற முக்கணன் கயிலையோடும் உலகு ஒரு மூன்றும் வென்றாய்; அக்கனைக் கொன்று நின்ற குரங்கினை ஆற்றல் காண்டி; புக்கு இனி வென்றும் என்றால், புலம்பு அன்றிப் புலமைத்து ஆமோ. 11 இராவணனிடம் உறுதிகூறிப் புறப்படல் 5837. ஆயினும், “ஐய, நொய்தின் ஆண்டு எழில் குரங்கை, நானே ஏ எனும் அளவில் பற்றித் தருகுவென்; இடர் ஒன்று ஒன்றும், நீ, இனி உழக்கற்பாலை அல்லை; நீடு இருத்தி; “ என்று, போயினன்; இலங்கை வேந்தன் போர்ச் சினம் போவது ஒப்பான். 12 படையின் பரப்பு 5838. உடைந்த வல் இருள், நோற்றுப் பல் உருக்கொடு, அக் கதிர்க் குழாங்கள் மிடைந்தன, மிலைச்சி ஆங்கு, மெய் அணி பலவும் மின்னக் குடைந்து வெம் பகைவர் ஊன் தோய் கொற்றப் போர் வாள் வில் வீச, அடைந்த கார் அரக்கர் தானை, அகலிடம் இடம் இன்று, என்ன. 13 இந்திரசித்து மலைபோல் படைநடுவில் நிற்றல் 5839. ஆழி அம் தேரும், மாவும், அரக்கரும், உருக்கும் செம் கண் சூழி வெம் கோல மாவும், துவன்றிய நிருதர் சேனை, ஊழி வெம் கடலில் சுற்ற, ஒரு தனி நடுவண் நின்ற பாழி மா மேரு ஒத்தான்; வீரத்தின் பன்மை தீர்த்தான். 14 அனுமனால் நேர்ந்த அழிவைக் கருதல் (5840-5842) 5840. சென்றனன் என்ப, மன்னோ திசைகேளாடு உலகம் எல்லாம் வென்றவன் இவன் என்றாலும், வீரத்தே நின்ற வீரன், அன்று அது கண்ட வாழி அனுமனை, அமரின் ஆற்றல் நன்று என உவகை கொண்டான்; யாவரும் நடுக்கம் உற்றார். 15 5841. இலை குலாம் பூணினானும், “இரும் பிணக் குருதி ஈரத்து, அலகு இல் வெம் படைகள் தறெ்றி, அளவு இடற்கு அரிய ஆகி, மலைகளும், கடலும், யாறும், கானமும், பெற்று, மற்று ஓர் உலகமே ஒத்தது, அம்மா! போர்ப் பெரும் களம், “ என்று உன்னா. 16 5842. வெப்பு அடைகில்லா நெஞ்சில், சிறியது ஓர் விம்மல் கொண்டான்; “அப்பு அடை வேலை அன்ன பெருமையார், ஆற்றலோடும் ஒப்பு அடைகில்லார், எல்லாம் உலந்தனர்; குரங்கும் ஒன்றே; எப் படை கொண்டு வெல்வது? இராமன் வந்து எதிர்க்கில்; “ என்றான். 17 இந்திரசித்து இறந்த வீரருக்கு இரங்கல் 5843. கண்ணனார், உயிரே ஒப்பார் கைப் படைக்கலத்தில் காப்பார், எண்ணலாம் தகைமை அல்லர் இறந்து இடைக் கிடந்தார் தம்மை மண்ணுளே நோக்கி நின்று, வாய்மடித்து, உயிர்த்தான்; மாயாப் புண் உளே கோல் இட்டு அன்ன, மானத்தால் புழுங்குகின்றான். 18 இந்திரசித்து தம்வீரம் குறைந்ததனெ வருந்தல் 5844. கான் இடை அத்தைக்கு உற்ற குற்றமும், கரனார் பாடும், யான் உடை எம்பி வீந்த இடுக்கணும் பிறவும் எல்லாம் மானிடர் இருவராலும் வானரம் ஒன்றினாலும் ஆனிடத்து உள, என் வீரம் அழகிற்றே அம்ம என்றான். 19 இந்திரசித்து பிணக்குவியலில் தம்பியின் சிதைவைக் கண்டு வருந்தல் (5845-5847) 5845. நீப்பு உண்ட உயிர ஆகி, நெருப்பு உண்ட நிறத்தில் தோன்றி, ஈர்ப்பு உண்டற்கு அரிய ஆய பிணக் குவடு, இடறச் செல்வான்; தேய்ப்பு உண்ட தம்பி யாக்கை, சிவப்பு உண்ட கண்கள், தீயில் காய்ப்பு உண்ட செம்பில் தோன்றக் கறுப்பு உண்ட மனத்தன் கண்டான். 20 5846. தாருகன் குருதி அன்ன குருதியில் தனி மாச் சீயக் கூர் உகிர் அளைந்த கொற்றக் கனகன் மெய்க் குழம்பில் தோன்றத் தேர் உகக் கையில் வீரச் சிலை உக, வயிரச் செங்கண் நீர் உகக் குருதி சிந்த, நெருப்பு உக உயிர்த்து நின்றான். 21 5847. வெவ் இலை அயில்வேல் உந்தை வெம்மையைக் கருதி, வீர! வவ்வுதல் கூற்றும் ஆற்றான்; மாறுமாறு உலகின் வாழ்வார், அவ் உலகத்து உளாரும் அஞ்சுவர் ஒளிக்க; ஐயா, எவ் உலகத்தை உற்றாய் எம்மை நீத்து எளிதின் எந்தாய். 22 துயரமும் வீரமும் 5848. ஆற்றலன் ஆகி, அன்பால் அறிவு அழிந்து, அயரும் வேலை, சீற்றம் என்று ஒன்று தானே மேல் நிமிர் செலவிற்று ஆகித் தோற்றிய துன்ப நோயை உள்ளூறத் துரந்தது; அம்மா! ஏற்றம் சால் ஆணிக்கு ஆணி எதிர் செலக் கடாயது என்ன. 23 இந்திரசித்தைப் பார்த்த அநுமனின் எண்ணம் (5849-5852) 5849. ஈண்டு இது நிகழ்வுழி இரவி தேர் எனத் தூண்டுறு தேரின் மேல் தோன்றும் தோன்றலை மூண்டு முப்புரம் சுட முடுகும் ஈசனில் ஆண்டகை வனைகழல் அனுமன் நோக்கினான். 24 5850. வென்றேன் இதன்முன் சில வீரரை என்னும் மெய்ம்மை அன்றோ, முடுகிக் கடிது எய்த அழைத்தது; அம்மா! ஒன்றோ இனி வெல்லுதல்; தோற்றல் அடுப்பது உள்ளி, இன்றே அமையும் இவன்; இந்திரசித்தும் என்பான். 25 5851. கட்டேறு நறும் கமழ் கண்ணி இக் காளை, என் கைப் பட்டால், அதுவே அவ் இராவணன் பாடும் ஆகும்; ‘கெட்டேம் ‘என எண்ணி, இக் கேடு அரும் கற்பினாளை விட்டு, ஏகும்; அது அன்றி, அரக்கரும் வெம்மை தீர்வார். 26 5852. ஓன்றோ? இதனால் வரும் ஊதியம்; ஒண்மையானைக் கொன்றேன் எனில், இந்திரனும் துயர்கோளும் நீங்கும்; இன்றே கடிகெட்டது அரக்கர் இலங்கை மூதூர்; வென்றேன் அவ் இராவணன் தன்னையும் வேரொடு; என்றான். 27 அநுமன் அரக்கர் படையுடன் பொருதல் (5853-5858.) 5853. அக்காலை, அரக்கரும், ஆனையும், தேரும், மாவும், முக்கால் உலகம் ஒரு மூன்றையும் வென்று முற்றிப் புக்கானின் முன் புக்கு, உயர் பூசல் பெருக்கும் வேலை, மிக்கானும், வெகுண்டு ஒர் மராமரம் கொண்டு புக்கான். 28 5854. உதையுண்டன யானை; உருண்டன யானை; ஒன்றோ, மிதியுண்டன யானை; விழுந்தன யானை; மேல் மேல் புதையுண்டன யானை; புரண்டன யானை; போரால் வதையுண்டன யானை; மறிந்தன யானை மண்மேல். 29 5855. முடிந்த தேர்க்குலம்; முறிந்தன தேர்க்குலம், முரண் இற்று இடிந்த தேர்க்குலம்; இற்றன தேர்க்குலம்; அச்சு இற்று ஒடிந்த தேர்க்குலம்; உக்கன தேர்க்குலம்; நெக்குப் படிந்த தேர்க்குலம்; பறிந்தன தேர்க்குலம் படியில். 30 5856. சிரன் நெரிந்தவும், கண்மணி சிதைந்தவும், செறிதாள் தரன் நெரிந்தவும், முதுகு இறச் சாய்ந்தவும், தார்பூண் உரன் நெரிந்தவும், உதிரங்கள் உமிழ்ந்தவும், ஒண்பொன் குரன் நெரிந்தவும், கொடுங் கழுத்து ஒடிந்தவும் குதிரை. 31 5857. பிடியுண்டார்களும், பிளத்தல் உண்டார்களும், பெரும் தோள் ஒடியுண்டார்களும், தலை உடைந்தார்களும், உருவக் கடியுண்டார்களும், கழுத்து இழந்தார்களும், மரத்தால் அடியுண்டார்களும், அச்சம் உண்டார்களும் அரக்கர். 32 5858. வட்ட வெம் சிலை ஓட்டிய வாளியும் வயவர் விட்ட வெம் திறல் படைகளும் வீரன் மேல் வீழ்ந்த சுட்ட மெல் இரும்பு அடைகலைச் சுடுகிலாதன போல் பட்ட பட்டன திசைதொறும் பொடி ஒடும் பரந்த. 33 இந்திரசித்தும் அநுமனும் பலவகையாகப் பொருதல் (5859-5878) 5859. சிகை எழும் சுடர் வாளிகள் இந்திரசித்து மிகை எழும் சினத்து அனுமன் மேல் விட்டன வெந்து புகை எழுந்தன எரிந்தன கரிந்தன போக நகை எழுந்தன; அழிந்தன வான் உேளார் நாட்டம். 34 5860. தேரும், யானையும், புரவியும், அரக்கரும், சிந்திப் பாரில் வீழ்தலும், தான் ஒரு தனி நின்ற பணைத்தோள் வீரர் வீரனும், முறுவலும், வெகுளியும், வீங்க, ‘வாரும், வாரும் ‘என்று, அழைக்கின்ற அனுமன்மேல் வந்தான். 35 5861. புரந்தரன் தலை பொதிர் எறிந்திடப் புயல் வானில் பரந்த பல் உரும் ஏறு இனம் வெறித்து உயிர் பதைப்ப, நிரந்தரம் புவி முழுவதும் சுமந்த நீடு உரகன் சிரம் துளங்கிட, அரக்கன் வெம் சிலையை நாண் எறிந்தான். 36 5862. ஆண்ட நாயகன் தூதனும், அயனுடை அண்டம் கீண்டது ஆம் என, கிரி உக, நெடுநிலம் கிழிய, நீண்ட மாதிரம் வெடிபட, அவன் நெடும் சிலையில் பூண்ட நாண் இற, தன் நெடும் தோள் புடைத்து ஆர்த்தான். 37 5863. ‘நல்லை நல்லை! இஞ் ஞாலத்து, நின் ஒக்கும் நல்லார் இல்லை இல்லையால், எறுழ் வலிக்கு, யாரொடும் இகல வல்லை வல்லை; இன்று ஆகும் நீ படைத்துடை வாழ் நாட்கு எல்லை எல்லை ‘என்று, இந்திரசித்துவும் இசைத்தான். 38 5864. நாளுக்கு எல்லையும் நிருதராய் உலகத்தை நலியும், கோளுக்கு எல்லையும், கொடும் தொழிற்கு எல்லையும், கொடியீர்! வாளுக்கு எல்லையும் வந்தன; வகைகொண்டு வந்தேன் தோளுக்கு, எல்லை ஒன்று இல்லை; என்று அனுமனும் சொன்னான். 39 5865. “இச் சிரத்தையைத் தொலைப்பென் “ என்று இந்திரன் பகைஞன், பச்சிரத்தம் வந்து ஒழுகிட, வானவர் பதைப்ப, வச்சிரத்திலும் வலியன வயிர வான் கணைகள், அச் சிரத்திலும், மார்பிலும், செறித்தலும், அனுமன், 40 5866. குறிது வான் என்று குறைந்திலன், நெடும் சினம் கொண்டான், மறியும் வெண் திரை மா கடல் உலகு எலாம் வழங்கிச் சிறிய தாய் சொன்ன திரு மொழி சென்னியில் சூடி, நெறியில் நின்ற தன் நாயகன் புகழ் என நிமிர்ந்தான். 41 5867. பாகம் அல்லது கண்டிலன்; அனுமனைப் பார்த்தான்; மாக வன்திசை பத்தொடும் வரம்பு இலா உலகிற்கு ஏகநாதனை எறுழ் வலித் தோள் பிணித்து ஈர்த்த மேகநாதனும், மயங்கினன் ஆம் என வியந்தான். 42 5868. நீண்ட வீரனும், நெடும் தடம் கைகளை நீட்டி, ஈண்டு வெம் சரம் எய்தன, எய்திடா வண்ணம், மீண்டு போய் விழ வீசி, அங்கு, அவன் மிடல் தடம் தேர் பூண்ட பேயொடு, சாரதி தரைப்படப் புடைத்தான். 43 5869. ஊழிக் காற்று என ஒரு பரித் தேர் அவண் உதவப் பாழித் தோளவன் அத் தடம் தேர் மிசைப் பாய்ந்தான் ஆழிப் பல்படை அனையன அளப்ப அரும் சரத்தால் வாழிப் போர்வலி மாருதி மேனியை மறைந்தான். 44 5870. உற்ற வாளிகள் உரத்து அடங்கின உக உதறாக் கொற்ற மாருதி மற்று அவன் தேர்மிசைக் குதித்தான்; பற்றி வன்கையால் பறித்து எறிந்து உலகு எலாம் பலகால் முற்றி வென்ற ஓர் மூரி வெம் சிலையினை முறித்தான். 45 5871. முறிந்த வில்லின் வல் ஓசை போய் முடிவதன் முன்னம், மறிந்துபோர் இடை வழிக் கொள்வான், வயிர வாள் படையால் செறிந்த வான் பெரும் சிறை அற மலைகளைச் செயிரா எறிந்த இந்திரன் இட்ட, வான் சிலையினை எடுத்தான். 46 5872. நூறுநூறு போர் வாளி, ஓர் தொடை கொண்டு, நொய்தின், மாறு வெம் சினத்து இராவணன் மகன், சிலை வளைத்தான்; ஊறு, தன் நெடு மேனியில் பல பட, ஒல்கி, ஏறு சேவகன் தூதனும், சிறிது போது இருந்தான். 47 5873. ஆர்த்த வானவர், ஆகுலம் கண்டு, அறிவு அழிந்தார்; பார்த்த மாருதி, தாரு ஒன்று, அம் கையில் பற்றாத் தூர்த்த வாளிகள் துணிபட, முறைமுறை சுற்றிப் போர்த்த பொன் நெடு மணி முடித் தலையிடைப் புடைத்தான் 48 5874. பாரம் மாமரம், முடி உடைத் தலையிடைப் படலும், தாரையின் நெடும் கற்றைகள், சுற்றின தயங்க; ஆர மால் வரை அருவியில், வழி கொழும் குருதி சோர, நின்று, உடன் துளங்கினன் அமரரைத் தொலைத்தான். 49 5875. நின்று, போதம் வந்து உறுதலும், நிறை பிறை எயிற்றைத் தின்று, தேவரும் அவுணரும் முனிவரும் திகைப்பக் குன்று போல் நெடு மாருதி ஆகமும் குலுங்க, ஒன்று போல், அவன், ஆயிரம் பகழி கோத்து எய்தான். 50 5876. உய்த்த வெம் சரம், உரத்திலும் கரத்தினும், ஒளிப்பக் கைத்த சிந்தையன், மாருதி, அதிகமும் கனன்றான், வித்தகச் சிலை விடு கணை விசையினும் கடுகி, அத் தடம் பெரும் தேரொடும் எடுத்து, எறிந்து, ஆர்த்தான். 51 5877. கண்ணின் மீச் சென்ற இமை இடை கலப்பதன் முன்னம், எண்ணின் மீச் சென்ற எறுழ் வலி திறல் உடை இகலோன், புண்ணின் மீச் சென்ற பொழி புலால் பசும்புனல் பொறிப்ப, விண்ணின் மீச் சென்ற தேரொடும் பார்மிசை விழுந்தான். 52 5878. விழுந்து, பார் அடையா முன்னம், மின் அன மெய்யான் எழுந்து, மால் விசும்பு எய்தினன்; இடை, அவன் படையில், செழும் தண் மா மணித் தேர் குலம் யாவையும் சிதைய, உழுந்து பேர்வதன் முன், நெடு மாருதி உதைத்தான். 53 இந்திரசித்து அயன்படை விடுதல் (5879-5883) 5879. ஏறு தேர் இலன், எதிர் நிற்கும் உரன் இலன், எரியில் சீறு வெம் சினம் திருகினன், அந்தரம் திரிவான், வேறு செய்வது ஓர் வினை பிறிது இன்மையான், விரிஞ்சன் மாறு இலாப் பெரும் படைக்கலம் தொடுப்பதா, மதித்தான். 54 5880. பூவும், பூநிற அயினியும், தீபமும், புகையும், தாவு இல் பாவனையால் கொடுத்து, அருச்சனை சமைத்தான், தேவும், யாவையும், உலகமும், திருத்திய தயெ்வக் கோவில்; நான்முகன் படைக்கலம் தடக்கையில் கொண்டான். 55 5881. கொண்டு கொற்ற வெம் சிலை நெடுநாணொடு கூட்டிச் சண்ட வேகத்த மாருதி தோெளாடு சாத்தி மண் துளங்கிட மாதிரம் துளங்கிட மதிதோய் விண் துளங்கிட மேருவும் துளங்கிட விட்டான். 56 5882. தணிப்பு அரும் பெரும் படைக்கலம், தழல் உமிழ் தறுகண் பணிக் குலங்களுக்கு அரசனது உருவினைப் பற்றித் துணிக்க உற்று உயர் கலுழனும் துணுக்கு உற சுற்றிப் பிணித்தது; அப்பெரு மாருதி தோள்களைப் பிறங்க. 57 5883. திண் என் யாக்கையைத் திசைமுகன் படை சென்று திருக, அண்ணல் மாருதி, அன்று தன்பின் சென்ற அறத்தின் கண்ணின் நீரொடும், கனம் தோரணத்தொடும், கடைநாள் தண் என் மாமதி கோெளாடும் சாய்ந்து எனச் சாய்ந்தான். 58 அநுமன் அயன்படையில் கட்டுப்படல் 5884. சாய்ந்த மாருதி, சதுமுகன்படை எனும் தன்மை ஆய்ந்து, மற்று இதன் ஆணையை அவமதித்து அகல்கை ஏய்ந்தது அன்று என எண்ணினன், கண்முகிழ்த்து இருந்தான்; ‘ஓய்ந்தது ஆம் இவன் வலி ‘என, அரக்கன் வந்து உற்றான். 59 அரக்கர் அநுமனைச் சூழல் (5885-5886) 5885. உற்ற காலையில், உயிர் கொண்டு திசைதொறும் ஒதுங்கி அற்றம் நோக்கினர் நிற்கின்ற வாள் எயிற்று அரக்கர், சுற்றும் வந்து உடல் சுற்றிய தொளை எயிற்று அரவைப் பற்றி ஈர்த்தனர், ஆர்த்தனர், தழெித்தனர், பலரால். 60 5886. “குரக்கு நல்வலம் குறைந்தது “ என்று, ஆவலம் கொட்டி இரைக்கும் மா நகர், எறிகடல் ஒத்தது; எம் மருங்கும் திரைக்கும் மாசுணம், வாசுகி ஒத்தது; தேவர்; அரக்கர் ஒத்தனர்; மந்தரம் ஒத்தனன் அனுமன். 61 அயன்படையில் கட்டுண்ட அநுமன் தோற்றம் 5887. கறுத்த மாசுணம், கனக மா மேனியைப் பற்ற, அறத்துக்கு ஆங்கு ஒரு தனி துணை என நின்ற அனுமன், மறத்து மாருதம் பொருத நாள், வாசுகி என்பான் புறத்துச் சுற்றிய மேரு மா மலையையும் போன்றான். 62 இலங்கையர் மகிழ்ச்சி 5888. வந்து இரைத்தனர், மைந்தரும் மகளிரும் மழைபோல் அந்தரத்தினும் விசும்பினும் திசைதொறும் ஆர்ப்பார்; முந்தி உற்ற பேர் உவகைக்கு ஓர் கரை இலை; மொழியின், இந்திரன் பிணிப்பு உண்ட நாள் ஒத்தது அவ் இலங்கை. 63  

Previous          Next