பிராட்டியிடம் விடை பெற்றபின் அநுமன் நினைவு பற்றிய கவிக்கூற்று 5537. நெறிக்கொடு வடக்கு உறும் நினைப்பினில் நிமிர்ந்தான் பொறிக் குலம் மலர்ப் பொழில் இடைக் கடிது போவான் ‘சிறுத்தொழில் முடித்து அகல்தல் தீது’ எனல் தரெிந்தான்; மறித்தும் ஒர் செயற்கு உரிய காரியம் மதித்தான். 1 அநுமன் தனக்குள் எண்ணுதல் (5538-5543) 5538. ஈனம் உறு பற்றலரை எற்றி எயின் மூதூர் மீன நிலயத்தின் உற வீசி விழி மானை மானவன் மலர்க் கழலின் வைத்தும் இலென்; என்றால் ஆனபொழுது எப்பரிசின் நான் அடியன் ஆவேன். 2 5539. வஞ்சனை அரக்கனை நெருக்கி, நெடு வாலால் அஞ்சின் உடன் அஞ்சுதலை தோள் உற அசைத்தே, வெம் சிறையில் வைத்தும் இலென்; வென்றும் இலென்; என்றால் தஞ்சம் ஒருவர்க்கு ஒருவர் என்றல், தகவு ஆமே. 3 5540. கண்ட நிருதக்கடல் கலக்கினென் வலத்தில் திண்திறல் அரக்கனும் இருக்க ஒர் திறத்தில் மண்ட உதரத்தவள் மலர்க்குழல் பிடித்துக் கொண்டு சிறைவைத்திடுதலில் குறையும் உண்டோ? 4 5541. மீட்டும் இனி எண்ணும் வினை வேறும் உளதன்றால்; ஓட்டி இவ் அரக்கரை உலைத்து உரிமை எல்லாம் காட்டும் அதுவே கருமம்; அன்னவர் கடும்போர் மூட்டும் வகை யாவதுகொல்? என்று முயல்கின்றான். 5 5542. இப் பொழிலினைக் கடிது இறுக்குவென்; இறுத்தால் அப் பெரிய பூசல் செவி சார்தலும் அரக்கர் வெப்பு உறு சினத்தர் எதிர் மேல்வருவர்; வந்தால் துப்பு அற முருக்கி உயிர் உண்பல்; இது சூதால். 6 5543. வந்தவர்கள் வந்தவர்கள் மீள்கிலர் மடிந்தால் வெம் திறல் அரக்கனும் வெலற்கு அரும் வலத்தான் முந்தும்; எனின் அன்னவன் முடித்தலை முசித்து என் சிந்தை உறு வெம் துயர் தவிர்த்து இனிது செல்வேன். 7 அநுமன் அசோகவனத்தை அழித்தல 5544. என்று நினையா இரவி சந்திரன் இயங்கும் குன்றம் இரு தோள் அனைய தன் உருவு கொண்டான்; அன்று உலகு எயிற்று இடைகொள் ஏனம் எனல் ஆனான்; துன்று கடி காவினை அடிக்கொடு துகைத்தான். 8 அசோகவன அழிவுபாடுகளின் வருணனை (5545-5576) 5545. முடிந்தன; பிளந்தன; முரிந்தன; நெரிந்த; மடிந்தன; பொடிந்தன; மறிந்தன; முறிந்த; இடிந்தன; தகர்ந்தன; எரிந்தன; கரிந்த; ஒடிந்தன; ஒசிந்தன; உதிர்ந்தன; பிதிர்ந்த. 9 5546. வேரொடு மறிந்த சில; வெந்த சில; விண்ணில் காரொடு செறிந்த சில; காலினொடு வேலைத் தூரொடு பறிந்த சில; தும்பியொடு வானோர் ஊரொடு மலைந்த சில; உக்கசில; நெக்க. 10 5547. சோனை முதல் மற்றவை சுழற்றிய திசைப் பேர் ஆனை நுகரக் குளகும் ஆன; அடி பற்றா மேல் நிமிர விட்டன விசும்பின்வழி மீப் போய் வானவர்கள் நந்தன வனத்தையும் மடித்த. 11 5548. அலைந்தன கடல் திரை; அரக்கர் அகல் மாடம் குலைந்து உக இடிந்தன; குலக் கிரிகேளாடு மலைந்து பொடி உற்றன; மயங்கி நெடு வானத்து உலைந்து விழும் மீனினொடு வெண்மலர் உதிர்ந்த. 12 5549. முடக்கும் நெடு வேரொடு முகந்து உலகம் முற்றும் கடக்கும்வகை வீசின களித்த திசையானை மடப் பிடியினுக்கு உதவ மையில் நிமிர் கைவைத்து இடுக்கியன ஒத்தன; எயிற்றின் இடை ஞால்வ. 13 5550. விஞ்சை உலகத்தினும் இயக்கர்மலை மேலும் துஞ்சுதல் இல் வானவர் துறக்க நகரத்தும் பஞ்சி அடி வஞ்சியர்கள் மொய்த்தனர் பறித்தார்; நஞ்சம் அனையான் உடைய சோலையின் நறும்பூ. 14 5551. பொன் திணி மணிப் பரு மரன் திசைகள் போவ மின் திரிவ ஒத்தன; வெயில் கதிரும் ஒத்த; ஒன்றினொடும் ஒன்று இடை புடைத்து உதிர ஊழில் தன் திரள் ஒழுக்கி விழு தாரகையும் ஒத்த. 15 5552. புள்ளினொடு வண்டும் ஞிமிறும் களிகொள் பூவும் கள்ளும் முகையும் தளிர்கேளாடு இனிய காயும் வெள்ள நெடு வேலை இடை மீன் இனம் விழுங்கித் துள்ளின; மரன்பட நெரிந்தன துடித்த. 16 5553. தூவிய மலர்த்தொகை சுமந்து திசைதோறும் பூவின் மணம் நாறுவ புலால் கமழ்கிலாத தேவியர்கேளாடும் உயர் தேவர் இனிது ஆடும் ஆவி எனல் ஆய; திரை ஆர்கலிகள் அம்மா! 17 5554. இடந்த மணி வேதியும் இறுத்த கடி காவும் தொடர்ந்தன துரந்தன படிந்து நெறி தூரக் கடந்து செலவு என்பது கடந்தது; இரு காலால் நடந்து செலல் ஆகும் எனல் ஆகியது; நல்நீர். 18 5555. வேனில் விளையாடு சுடரோனின் ஒளி விம்மும் வானின் இடை வீசிய அரும் பணை மரத்தால்; தானவர்கள் மாளிகை தகர்ந்து பொடி ஆய; வான இடியால் ஒடியும் மால்வரைகள் மான. 19 5556. எண்ணில் தரு கோடிகள் எறிந்தன செறிந்தே தண்ண மழைபோல் இடை தழைந்தது சலத்தால் அண்ணல் அனுமான் ‘அடல் இராவணனது அந்நாள் விண்ணும் ஒரு சோலை உளதாம் ‘என விதித்தான். 20 5557. தேன் உறை துளிப்ப நிறை புள் பல சிலம்பப் பூ நிறை மணி தரு விசும்பின்மிசை போவ மீன்முறை நெருக்க ஒளி வாெளாடு வில் வீச வான் இடை நடாய நெடுமானம் எனல் ஆன. 21 5558. சாகம் நெடு மாப் பணை தழைத்தன தனிப் நாகம் அனையான் எறிய மேல் நிமிர்வ நாளும் மாகம் நெடு வான் இழிந்து புனல் வாரும் மேகம் எனல் ஆய; நெடு மா கடலின் வீழ்வ. 22 5559. ஊனம் உற்றிட மண்ணின் உதித்தவர் ஞானம் முற்றுபு நண்ணினர் வீடு எனத் தான கற்பகத் தண்டலை விண்தலம் போன புக்கன முன் உறை பொன் நகர். 23 5560. மணிகொள் குட்டிமம் மட்டித்து மண்டபம் துணிபடுத்து அயல் வாவிகள் தூர்த்து ஒளிர் திணி சுவர்த்தலம் சிந்திச் செயற்கு அரும் பணி படுத்து உயர் குன்றம் படுத்து அரோ. 24 5561. வேங்கை செற்று மராமரம் வேர் பறித்து ஓங்கு கற்பகம் பூவொடு ஒடித்து உராய்ப் பாங்கர் சண்பகப் பத்தி பறித்து அயல் மாங்கனிப் பணை மட்டித்து மாற்றியே. 25 5562. சந்தனங்கள் தகர்ந்தன; தாள்பட இந்தனங்களின் வெந்து எரி சிந்திட முந்து அனங்க வசந்தன் முகம் கெட நந்தனங்கள் கலங்கி நடுங்கவே. 26 5563. காமரம் கனி வண்டு கலங்கிட மாமரங்கள் மடிந்தன மண்ணொடு; தாம் அரங்க அரங்கு தகர்ந்து உகப் பூ மரங்கள் எரிந்து பொரிந்தவே. 27 5564. குழையும் கொம்பும் கொடியும் குயில் குலம் விழையும் தண் தளிர்ச் சூழலும் மென்மலர்ப் புழையும் வாசப் பொதும்பும் பொலன்கொள் தேன் மழையும் வண்டும் மயிலும் மடிந்தவே. 28 5565. பவள மாக்கொடி வீசின பல் மழை துவளும் மின் எனச் சுற்றிடச் சூழ்வரை திவளும் பொன்பணை மாமரம் சேர்ந்தன கவள யானையின் ஓடையில் காந்தவே. 29 5566. பறவை ஆர்த்து எழும் ஓசையும் பல் மரம் இற எடுத்த இடிக்குரல் ஓசையும் அறவன் ஆர்த்து எழும் ஓசையும் அண்டத்தின் புற நிலத்தையும் கை மிகப் போயதே. 30 5567. பாடலம் படர் கோங்கொடும் பன் இசைப் பாடல் அம் பனி வண்டொடும் பல் திரை பாடு அலம்பு உயர் வேலையில் பாய்ந்தன; பாடு அலம்படப் புள் இனம் பார்ப்பொடே. 31 5568. வண்டு அலம்பு நல் ஆற்றின் மராமரம் வண்டல் அம் புனல் ஆற்றின் மடிந்தன; விண்டு அலம்பு கம் நீங்கிய வெண்புனல் விண்டு அலம்புக நீள்மரம் வீழ்ந்தவே. 32 5569. தாமரைத் தடம் பொய்கை செஞ் சந்தனம் தாம் அரைத்தன ஒத்தது; உகைத்தலின் காமரக் களி வண்டொடும் கள்ெளாடும் கா மரக்கடல் பூக்கடல் கண்டவே. 33 5570. சிந்துவாரம் திசைதொறும் சென்றன சிந்து வார் அம் புரை திரை சேர்ந்தன; தம் துவாரம் புதவொடு தாள் அறத் தந்து வாரம் துகள்படச் சாய்ந்தவே. 34 5571. நந்தவானத்து நாள் மலர் நாறின நந்த வானத்து நாள் மலர் நாறின; சிந்து அ வானம் திரிந்து உகச் செம்மணி சிந்த வால் நந்து இரிந்த திரைக் கடல். 35 5572. புல்லும் பொன் பணைப் பல் மணிப் பூமரம் கொல்லும் இப்பொழுதே எனும் கொள்கையால் எல்லி இட்டு விளக்கிய இந்திரன் வில்லும் ஒத்தன : விண் உற வீசின. 36 5573. ஆனைத் தானமும் ஆடல் அரங்கமும் பானத் தானமும் பாய் பரிப் பந்தியும் ஏனைத் தார் அணி தேரொடும் இற்றன; கானத்து ஆர் தரு அண்ணல் கடாவவே. 37 5574. மயக்கு இல் பொன் குல வல்லிகள் வாரிநேர் இயக்கு உறத் திசைதோறும் எறிந்தன வெயில் கதிர்க் கற்றை அற்று உற வீழ்ந்தன புயல் கடல்தலை புக்கன போல்வன. 38 5575. பெரிய மாமரமும் பெருங்குன்றமும் விரிய வீசலின் மின் நெடும் பொன் மதில் நெரிய மாடம் நெருப்பு எழ நீறு எழ இரியல் போனது இலங்கையும் எங்கணும். 39 சந்திராத்தமன வருணனை 5576. “தொண்டை அம் கனிவாய்ச் சீதை துயக்கினால் என்னைச் சுட்டாய்! விண்ட வானவர் கண் முன்னே விரிபொழில் இறுத்து வீசக் கண்டனை நின்றாய்! ‘‘ என்று காணுமேல் அரக்கன் காய்தல் உண்டு என வெருவினான்போல் ஒளித்தனன்; உடுவின் கோமான். 40 அநுமன் வீசிய (மணி) மரங்களால் வைகறை இருள் விலகல் 5577. காசு அறு மணியும் பொன்னும் காந்தமும் கஞல்வது ஆய மாசு அறு மரங்கள் ஆகக் குயிற்றிய மதனச் சோலை, ஆசைகள் தோறும் ஐயன் கைகளால் அள்ளி அள்ளி வீசிய, விளக்கலாலே விளங்கின உலகம் எல்லாம். 41 விலங்கு பறவைகளின் நிலை (5578-5579) 5578. கதறின வெருவி, உள்ளம் கலங்கின, விலங்கு; கண்கள் குதறின பறவை, வேலை குளித்தன, குளித்திலாத பதறின; பதைத்த; வானில் பறந்தன; பறந்து பார்வீழ்ந்து உதறின சிறையை; மீள ஒடுக்கின உலந்து போன. 42 5579. தோட்டொடும் துதைந்த தயெ்வ மரம் தொறும் தொடுத்த புள், தம் கூட்டொடும் துறக்கம் புக்க; குன்று எனக் குவவுத் திண் தோள் சேட்டு அகன் பரிதி மார்பன் சீறியும் தீண்டல் தன்னால், மீட்டு அவன் கருணைசெய்தால் பெறும் பதம் விளம்பல் ஆமோ. 43 பிராட்டி தங்கியிருந்த மரமொன்றுமே அழியாதிருத்தல் 5580. பொய்ம் முறை அரக்கர் காக்கும் புள் உறை புது மென் சோலை விம்முறும் உள்ளத்து அன்னம் இருக்கும் அவ் விருக்கம் ஒன்றும், மும்முறை உலகம் எல்லாம் முற்றுற முடிவது ஆன அம்முறை ஐயன் வைகும் ஆல் என நின்றது. அம்மா! 44 சூரியோதய வருணனை 5581. உறு சுடர்ச் சூடைக்காசுக்கு அரசினை உயிர் ஒப்பானுக்கு அறிகுறி ஆக விட்டாள், ஆதலான் வறியள் அந்தோ! செறி குழல் சீதைக்கு என்று ஓர் சிகாமணி தரெிந்து வாங்கி எறி கடல் ஈவது என்ன எழுந்தனன் இரவி என்பான். 45 அசோகவனத்தை அழித்து நின்ற அனுமனது தோற்றம் 5582. தாழ் இரும் பொழில்கள் எல்லாம் துடைத்து ஒரு தமியன் நின்றான், ஏழினொடு ஏழு நாடும் அளந்தவன் எனலும் ஆனான்; ஆழியின் நடுவண் நின்ற அரும் வரைக்கு அரசும் ஒத்தான்; ஊழியின் இறுதிக் காலத்து உருத்திர மூர்த்தி ஒத்தான். 46 அநுமனைக் கண்டு அஞ்சிய அரக்கியர் பிராட்டியை வினவுதல் 5583. இன்னன நிகழும் வேலை, அரக்கியர் எழுந்து பொங்கிப், பொன்மலை என்ன நின்ற புனிதனைப் புகன்று நோக்கி, ‘அன்னை! ஈது என்ன மேனி? யார்கொல்? ‘என்று அச்சம் உற்றார்; நன்னுதல் தன்னை நோக்கி, ‘அறிதியோ? ‘நங்கை! என்றார். 47 பிராட்டியின் மறுமொழி 5584. ‘தீயவர் தீய செய்தல் தீயவர் தரெியின் அல்லால் தூயவர் தரெிதல் உண்டோ? நும் உடைச் சூழல் எல்லாம் ஆய மான் எய்த, அம்மான் இளையவன், “அரக்கர் செய்த மாயம் ‘‘ என்று க்கவேயும், மெய் என மையல்கொண்டேன். 48 அநுமன் சயித்தியம் ஒன்றைக் கண்டு பறித்தறெியத் தொடங்குதல் 5585. என்றனள், அரக்கிமார்கள் வயிறு அலைத்து இரியல் போகிக் குன்றமும் உலகும் வானும் கடல்களும் குலைய ஓட, நின்றது ஓர் சயித்தம் கண்டான், ‘நீக்குவல் இதனை ‘என்னாத் தன் தடக்கைகள் நீட்டிப் பற்றினன் : தாதை ஒப்பான். 49 சயித்தத்தின் பெருமை (5586-5588) 5586. கண்கொள அரிது, மீது கார் கொள அரிது, திண் கால் எண்கொள அரிது, இராவும் இருள்கொள அரிது, மாக விண்கொள நிவந்த மேரு வெள்குற வெதும்பி உள்ளம் புண்கொள உய்ர்ந்தது, இப்பார் பொறைகொள அரிது போலாம். 50 5587. பொங்கு ஒளி நெடு நாள் ஈட்டிப் புதிய பால் பொழிவது ஒக்கும் திங்களை நக்குகின்ற இருள் எலாம் வாரித் தின்ன அங்கை பத்து இரட்டியான் தன் ஆணையால் அழகு மானப் பங்கயத்து ஒருவன் தானே பசும் பொனால் படைத்தது அம்மா. 51 5588. தூண் எலாம் சுடரும் காசு, சுற்று எலாம் முத்தம் சொன்னம் பேணல் ஆம் மணியின் பித்தி பிடர் எலாம் ஒளிகள் விம்மச் சேண் எலாம் விரியும் கற்றைச் சேயொளிச் செல்வற்கு ஏயும் பூணலாம் எம்மனோரால் புகழலாம் புதுமைத்து அன்றே. 52 அநுமன் சயித்தத்தைப் பெயர்த்து இலங்கைமேல் எறிதல் (5589-5590) 5589. ‘வெள்ளி அம் கிரியைப் பண்டு அவ் வெம் தொழில் அரக்கன் வேரோடு அள்ளினன் ‘என்னக் கேட்டான்; அத்தொழிற்கு இழிவு தோன்றப் புள்ளி மா மேரு என்னும் பொன் மலை எடுப்பான் போல, வள் உகிர்த் தடக்கை தன்னால் மண் நின்றும் வாங்கி, அண்ணல். 53 5590. விட்டனன் இலங்கை தன்மேல்; விண்ணுற விரிந்த மாடம் பட்டன பொடிகள் ஆன; பகுத்தன பாங்கு நின்ற; சுட்டன பொறிகள் வீழத், துளங்கினர் அரக்கர் தாமும்; கெட்டனர் வீரர் அம்மா! பிழைப்பரோ கேடு சூழ்ந்தார். 54 அசோகவனம் அழிந்த செய்தியைக் காவலர் இராவணனிடம் தரெிவித்தல் (5591-5593) 5591. நீர் இடு துகிலர், அச்சம் நெருப்பிடும் நெஞ்சர், நெக்குப் பீரிடும் உருவர், தறெ்றிப் பிணங்கிடு தாளர், பேழ்வாய் ஊர் இடு பூசல் ஆர, உளைத்தனர் ஓடி உற்றார்; பார் இடு பழுவச் சோலை பாரிக்கும் பருவத் தேவர். 55 5592. அரிபடு சீற்றத்தான் தன் அருகு சென்று அடியின் வீழ்ந்தார், ‘கரிபடு திசையின் நீண்ட காவலா! காவல் ஆற்றோம்; கிரிபடு குவவுத் திண்தோள் குரங்கு இடை கிழித்து வீச எரிபடு துகிலின் நொய்தின் இற்றது கடி கா ‘என்றார். 56 5593. ‘சொல்லிட எளியது அன்றால் சோலையைக் காலில் கையில் புல்லொடு துகளும் இன்றிப் பொடிபட நூறிப், பொன்னால் வில்லிடு வேரம் தன்னை வேரொடும் வாங்கி வீசச் சில்லிடம் ஒழியத் தயெ்வ இலங்கையும் சிதைந்தது ‘என்றார். 57 காவலர் கூறக்கேட்ட இராவணன் இகழ்ந்து நகுதல் 5594. ஆடகத் தருவின் சோலை பொடிபடுத்து, அரக்கர் காக்கும் தேடு அரும் வேரம் வாங்கி, இலங்கையும் சிதைத்தது அம்மா! கோடரம் ஒன்றே, நன்று இது இராக்கதர் கொற்றம் சொற்றல் மூடரும் மொழியார்; என்ன மன்னனும் முறுவல் செய்தான். 58 காவலர் அநுமன் திறத்தைப் பின்னும் வியந்து கூறுதல் 5595. தேவர்கள், பின்னும் ‘மன்ன! அதன் உருச் சுமக்கும் திண்மைப் பூவலயத்தை அன்றோ புகழ்வது! புலவர் போற்றும் மூவரின் ஒருவன் என்று புகல்கினும் முடிவு இலாத ஏவம்; அக்குரங்கை ஐய! காணுதி இன்னே ‘என்றார். 59 அநுமனது போரார்ப்பு 5596. மண்டலம் கிழிந்த வாயில் மறிகடல் மோழை மண்ட, எண்திசை சுமந்த மாவும் தேவரும் இரியல் போக, தொண்டை வாய் அரக்கிமார்கள் சூல் வயிறு உடைந்து சோர, அண்டமும் பிளந்து விண்டதாம் என அனுமன் ஆர்த்தான 60  

Previous          Next