Posts

Tamil Daily Rasi Palan 11th June 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  11.06.2017

இன்றைய  பஞ்சாங்கம் 11-06-2017, வைகாசி -28, ஞாயிற்றுக்கிழமை, துதியை திதி இரவு 11.15 வரை பின்பு தேய்பிறை திரிதியை. மூலம் நட்சத்திரம் காலை 08.05 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் காலை 08.05 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,  
  சுக்கி சூரிய புதன் செவ்
கேது திருக்கணித கிரக நிலை11.06.2017  
ராகு
சனி(வ) சந்தி குரு
 

இன்றைய ராசிப்பலன் – 11.06.2017

aries-single-iconமேஷம் இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். ஒரு சிலர் தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
taurus-single-iconரிஷபம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். முக்கிய பேச்சுவார்த்தைகளை தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களில் அதிக கவனம் தேவை.
gemini-single-iconமிதுனம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும்.
cancer-single-iconகடகம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். திருமண முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும்.
leo-single-iconசிம்மம் இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.
virgo-single-iconகன்னி இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும்.
libra-single-iconதுலாம் இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபார முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். வருமானம் பெருகும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் இருக்கும். சிலருக்கு வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். குடும்பத்தினருக்கிடையே ஒற்றுமை நிலவும்.
sagittarius-single-iconதனுசு இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன்சுமை தீரும். சேமிப்பு உயரும்.
capricorn-single-iconமகரம் இன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். கையிருப்பு குறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பண பற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும்.
aquarius-single-iconகும்பம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
pisces-single-iconமீனம் இன்று பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். திருமண சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

Tamil Daily Rasi Palan 10th June 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  10.06.2017

இன்றைய  பஞ்சாங்கம் 10-06-2017, வைகாசி -27, சனிக்கிழமை, பிரதமை திதி இரவு 09.00 வரை பின்பு தேய்பிறை துதியை. நாள் முழுவதும் மூலம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 1. சனிப்ரிதி நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள்- காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு09.00-10.00.  
  சுக்கி சூரிய புதன் செவ்
கேது திருக்கணித கிரக நிலை10.06.2017  
ராகு
சனி(வ) சந்தி குரு
 

இன்றைய ராசிப்பலன் – 10.06.2017

aries-single-iconமேஷம் இன்று குடும்ப உறவுகளுக்கிடையே நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் பெருகும்.
taurus-single-iconரிஷபம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.  தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பயணங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.
gemini-single-iconமிதுனம் இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப் பலன் கிட்டும்.
cancer-single-iconகடகம் இன்று உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.
leo-single-iconசிம்மம் இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
virgo-single-iconகன்னி இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.
libra-single-iconதுலாம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனைவி மூலமாக இன்று நல்லது நடக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் அலைச்சல்கள் ஏற்படலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும்.
sagittarius-single-iconதனுசு இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். குடும்பத்தில் பெண்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வேலையில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். சேமிப்பு உயரும்.
capricorn-single-iconமகரம் இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிடைக்கும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். கடன்கள் குறையும்.
aquarius-single-iconகும்பம் இன்று தொழில் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.
pisces-single-iconமீனம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

Tamil Daily Rasi Palan 9th June 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  09.06.2017

இன்றைய  பஞ்சாங்கம் 09-06-2017, வைகாசி -26, வெள்ளிக்கிழமை, பௌர்ணமி திதி மாலை 06.39 வரை பின்பு தேய்பிறை பிரதமை. கேட்டை நட்சத்திரம் பின்இரவு 05.11 வரை பின்பு மூலம். மரணயோகம் பின்இரவு 05.11 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 1. பௌர்ணமி. அம்மன் வழிபாடு நல்லது. சுப முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00  
  சுக்கி சூரிய புதன் செவ்
கேது திருக்கணித கிரக நிலை09.06.2017  
ராகு
சனி(வ)   சந்தி குரு (வ)
 

இன்றைய ராசிப்பலன் – 09.06.2017

aries-single-iconமேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடங்கல்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வேலையில் உடனிருப்பவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.
taurus-single-iconரிஷபம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். லாபம் பெருகும்.
gemini-single-iconமிதுனம் இன்று வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். வெளியூர் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.
cancer-single-iconகடகம் இன்று வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். வரவேண்டிய தொகை கிடைப்பதில் கால தாமதம் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
leo-single-iconசிம்மம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். வருமானம் பெருகும்.
virgo-single-iconகன்னி இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தொழில் ரீதியாக லாபம் பெருகும். உடல் ஆரோக்கியம் சீராகும். நண்பர்கள் அனுகூலமாய் இருப்பார்கள்.
libra-single-iconதுலாம் இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படக்கூடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். கொடுக்கல் வாங்கல் ஓரளவுக்கு லாபகரமாக இருக்கும். பணக் கஷ்டம் குறையும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் ஒப்பந்தமாகும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சேமிப்பு உயரும்.
sagittarius-single-iconதனுசு இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகள் குறையும்.
capricorn-single-iconமகரம் இன்று குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சனை தீரும்.
aquarius-single-iconகும்பம் இன்று பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
pisces-single-iconமீனம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணங்கள் அனுகூலமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உடல் நிலை சீராகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

Tamil Daily Rasi Palan 8th June 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  08.06.2017

இன்றைய  பஞ்சாங்கம் 08-06-2017, வைகாசி -25, வியாழக்கிழமை, சதுர்த்தசி திதி மாலை 04.16 வரை பின்பு பௌர்ணமி. அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 02.14 வரை பின்பு கேட்டை. சித்தயோகம்  பின் இரவு 02.14 வரை பின்பு பிரபலாரிஷ்டயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.  
  சுக்கி சூரிய புதன் செவ்
கேது திருக்கணித கிரக நிலை08.06.2017  
ராகு
சனி(வ)   சந்தி குரு (வ)
 

இன்றைய ராசிப்பலன் – 08.06.2017

aries-single-iconமேஷம் இன்று உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது.
taurus-single-iconரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பொன்பொருள் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
gemini-single-iconமிதுனம் இன்று இல்லத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சனைக்கு நல்ல தீர்வு உண்டாகும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
cancer-single-iconகடகம் இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே அன்பும் ஆதரவும் பெருகும். கடன் பிரச்சனைகள் தீரும். மன அமைதி இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும்.
leo-single-iconசிம்மம் இன்று அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும்.
virgo-single-iconகன்னி இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வேலையில் பணிச்சுமை குறையும்.
libra-single-iconதுலாம் இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். திருமண சுப முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துகளை வழியில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும்.
sagittarius-single-iconதனுசு இன்று நீங்கள் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு கடினமாக உழைக்க வேண்டும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் கணவன்& மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்கள் உங்களின் வளர்ச்சிக்கு துணையாக இருப்பார்கள்.
capricorn-single-iconமகரம் இன்று உங்களுக்கு அமோகமான பலன்கள் உண்டாகும். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். அரசு ஊழியர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
aquarius-single-iconகும்பம் இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.  உத்தியோகஸ்தர்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
pisces-single-iconமீனம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். தொழிலில் உள்ள மந்த நிலை மாறும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.

Tamil Daily Rasi Palan 7th June 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  07.06.2017

இன்றைய  பஞ்சாங்கம் 07-06-2017, வைகாசி -24, புதன்கிழமை, திரியோதசி திதி பகல் 01.56 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. விசாகம் நட்சத்திரம் இரவு 11.18 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 1. வைகாசி விசாகம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00  
  சுக்கி சூரிய புதன் செவ்
கேது திருக்கணித கிரக நிலை07.06.2017  
ராகு
சனி(வ)   சந்தி குரு (வ)
 

இன்றைய ராசிப்பலன் – 07.06.2017

aries-single-iconமேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று மாலை 04.34 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் அதன் பின் மன உளைச்சல் அதிகமாகும்.
taurus-single-iconரிஷபம் இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
gemini-single-iconமிதுனம் இன்று வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். உறவினர்கள் சாதகமாக அமைவார்கள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.
cancer-single-iconகடகம் இன்று குடும்பத்தில் உறவினர் வருகையால் வீண் பிரச்சனைகள் உண்டாகலாம். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்ககூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
leo-single-iconசிம்மம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்தி வரும். வேலையில் சக ஊழியர்களுக்கிடையே ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார்கள். தொழில் ரீதியான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.
virgo-single-iconகன்னி இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வெளியூர் பயணங்களால் அ-னுகூலப்பலன் உண்டாகும்.
libra-single-iconதுலாம் இன்று குடும்பத்தில் தாராள பணவரவு இருக்கும். உடன் பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் வியாபாரம் பாதிப்படையாது.  உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் உதவுவார்கள்.
sagittarius-single-iconதனுசு இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் மூலம் சுபசெலவுகள் ஏற்படும். அரசு துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் அமையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
capricorn-single-iconமகரம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் விலகி சுமூகநிலை உருவாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை பலப்படும். பழைய கடன்கள் வசூலாகும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.
aquarius-single-iconகும்பம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை குறையும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களின் புதிய முயற்சிகளுக்கு பெரியவர்களின் ஆதரவு கிட்டும். நண்பர்களின் உதவியால் பணகஷ்டம் குறையும்.
pisces-single-iconமீனம் இன்று உங்கள் ராசிக்கு மாலை 04.34 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். வேலையில் வீண் பிரச்சனைகள் உண்டாகும். பெரிய தொகையை பிறரை நம்பி கொடுக்காமல் இருப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

Tamil Daily Rasi Palan 6th June 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  06.06.2017

இன்றைய  பஞ்சாங்கம் 06-06-2017, வைகாசி -23, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி பகல் 11.43 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. சுவாதி நட்சத்திரம் இரவு 08.27 வரை பின்பு விசாகம். சித்தயோகம் இரவு 08.27 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 1. பிரதோஷம். சிவ – முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.  
  சுக்கி சூரிய புதன் செவ்
கேது திருக்கணித கிரக நிலை06.06.2017  
ராகு
சனி(வ)   சந்தி குரு (வ)
 

இன்றைய ராசிப்பலன் – 06.06.2017

aries-single-iconமேஷம் இன்று நீங்கள் எந்த செயலையும் உற்சாகத்தோடு செய்வீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
taurus-single-iconரிஷபம் இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவாய் இருப்பார்கள்.
gemini-single-iconமிதுனம் இன்று பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். திருமண முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகலாம். சேமிப்பு குறையும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று விலகும். சிக்கனமுடன் செயல்பட்டால் கடன் பிரச்சனை குறையும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
cancer-single-iconகடகம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வருமானம் பெருகும்.
leo-single-iconசிம்மம் இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். உடல் நிலை புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். வங்கி சேமிப்பு உயரும்.
virgo-single-iconகன்னி இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது நம்பிக்கையை தரும்.
libra-single-iconதுலாம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை நிலவும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும். வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட காலதாமதமாகும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.
sagittarius-single-iconதனுசு இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்ததியாகும்.
capricorn-single-iconமகரம் இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். பொருளாதார நிலை உயரும். கடன் பிரச்சனைகள் தீரும். பொன் பொருள் சேரும்.
aquarius-single-iconகும்பம் இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்களில் சில இடையூறுகள் உண்டா-கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் சுமை ஓரளவு குறையும். நண்பர்கள் துணை நிற்பர். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.
pisces-single-iconமீனம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. சுபகாரியங்களை தவிர்க்கவும்.

Tamil Daily Rasi Palan 5th June 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  05.06.2017

இன்றைய  பஞ்சாங்கம் 05-06-2017, வைகாசி -22, திங்கட்கிழமை, ஏகாதசி திதி காலை 09.43 வரை பின்பு வளர்பிறை துவாதசி. சித்திரை நட்சத்திரம் மாலை 05.47 வரை பின்பு சுவாதி. பிரபலாரிஷ்டயோகம் மாலை 05.47 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 1. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. தனிய நாள். சுப முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.  
  சுக்கி சூரிய புதன் செவ்
கேது திருக்கணித கிரக நிலை05.06.2017  
ராகு
சனி(வ)   சந்தி குரு (வ)
 

இன்றைய ராசிப்பலன் – 05.06.2017

aries-single-iconமேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பணவரவு தாரளமாக இருக்கும். சேமிப்பு உயரும்.
taurus-single-iconரிஷபம் இன்று உங்களுக்கு ஆனந்தமான செய்தி வந்து சேரும். சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வருமானம் பெருகும்.
gemini-single-iconமிதுனம் இன்று உங்களுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.
cancer-single-iconகடகம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வழக்கு சம்பந்தங்களில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்படுவதால் லாபம் அதிகமாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். கடன்கள் குறையும்.
leo-single-iconசிம்மம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். தொழில் ரீதியாக பொருளாதார நிலை உயரும். வெளிவட்டார நட்பு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
virgo-single-iconகன்னி இன்று வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பணப்பிரச்சனை குறையும்.
libra-single-iconதுலாம் இன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டிகள் விலகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன்கள் தீரும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகள் குறையும்.
sagittarius-single-iconதனுசு இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை கூடும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும்.
capricorn-single-iconமகரம் இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.
aquarius-single-iconகும்பம் இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். உடன்பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறையக்கூடும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
pisces-single-iconமீனம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்பட்டு மனகுழப்பத்துடன் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

Tamil Daily Rasi Palan 4th June 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  04.06.2017

இன்றைய  பஞ்சாங்கம் 04-06-2017, வைகாசி -21, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி காலை 08.03 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. அஸ்தம் நட்சத்திரம் பகல் 03.24 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 0. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். வாஸ்து நாள் காலை 09.51 மணிக்கு மேல் 10.27 மணிக்குள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,  
  சுக்கி சூரிய புதன் செவ்
கேது திருக்கணித கிரக நிலை04.06.2017  
ராகு
சனி(வ)   குரு (வ)சந்தி
 

இன்றைய ராசிப்பலன் – 04.06.2017

aries-single-iconமேஷம் இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
taurus-single-iconரிஷபம் இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளால் ஒற்றுமை குறைந்து காணப்படும். பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். சுப முயற்சிகளில் சில தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
gemini-single-iconமிதுனம் இன்று வீட்டில் மகிழ்ச்சி குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
cancer-single-iconகடகம் இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.
leo-single-iconசிம்மம் இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
virgo-single-iconகன்னி இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். சுப செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
libra-single-iconதுலாம் இன்று பிள்ளைகளின் தேவைக்காக சிறு தொகையை செலவிட நேரிடும். உறவினர்கள் வருகையால் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். தெய்வ தரிசனத்திற்காக மேற்கொள்ளும் பயணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
sagittarius-single-iconதனுசு இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் பெருகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
capricorn-single-iconமகரம் இன்று உங்கள் பிரச்சனைகள் தீர்ந்து குடும்பத்தில் சந்தோஷம் கூடும். பெரியோர்களின் நன்மதிப்பிற்கு ஆளாவீர்கள். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதால் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.
aquarius-single-iconகும்பம் இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சனைகள் குறையும். உடல்நிலையில் கவனம் தேவை.
pisces-single-iconமீனம் இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். மகிழ்ச்சி நிலவும்.

Tamil Daily Rasi Palan 3rd June 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  03.06.2017

இன்றைய  பஞ்சாங்கம் 03-06-2017, வைகாசி -20, சனிக்கிழமை, நவமி திதி காலை 06.51 வரை பின்பு வளர்பிறை தசமி. உத்திரம் நட்சத்திரம் பகல் 01.26 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 1/2. சனிப்ரிதி நல்லது. சுப முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள்- காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு09.00-10.00.  
புதன்சுக்கி சூரிய செவ்
கேது திருக்கணித கிரக நிலை03.06.2017  
ராகு
சனி(வ)   சந்திகுரு (வ)
 

இன்றைய ராசிப்பலன் – 03.06.2017

aries-single-iconமேஷம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ப பதவி உயர்வுகள் கிடைக்கும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலர் ஆடம்பர பொருள்கள் வாங்கி மகிழ்வார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.
taurus-single-iconரிஷபம் இன்று உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
gemini-single-iconமிதுனம் இன்று உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
cancer-single-iconகடகம் இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப்பெறும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.
leo-single-iconசிம்மம் இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சனை தீரும்.
virgo-single-iconகன்னி இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கப்பெறும். உடன்பிறப்புகள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும்.
libra-single-iconதுலாம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொத்துக்களை வாங்கவும் விற்கவும் அனுகூலமான நாளாகும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும்.
sagittarius-single-iconதனுசு இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கப்பெறும். வெளியூர் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாகும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
capricorn-single-iconமகரம் இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
aquarius-single-iconகும்பம் இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் பொறுமையை கடை பிடிப்பது நல்லது. மற்றவர்கள் பிரச்சனையில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
pisces-single-iconமீனம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை ஆபரண பொருட் சேர்க்கை உண்டாகும்.

Tamil Daily Rasi Palan 2nd June 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  02.06.2017

இன்றைய  பஞ்சாங்கம் 02-06-2017, வைகாசி -19, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி காலை 06.15 வரை பின்பு வளர்பிறை நவமி. பூரம் நட்சத்திரம் பகல் 12.01 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1, ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுப முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00  
புதன்சுக்கி சூரிய செவ்
கேது திருக்கணித கிரக நிலை02.06.2017  
ராகுசந்தி
சனி(வ)   குரு (வ)
 

இன்றைய ராசிப்பலன் – 02.06.2017

aries-single-iconமேஷம் இன்று எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
taurus-single-iconரிஷபம் இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். சேமிப்பு குறையும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.
gemini-single-iconமிதுனம் இன்று நீங்கள் எதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமையும். குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.
cancer-single-iconகடகம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் சற்று குறையும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
leo-single-iconசிம்மம் இன்று இல்லத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி கூடும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
virgo-single-iconகன்னி இன்று தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனசங்கடங்கள் மறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.
libra-single-iconதுலாம் இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.
sagittarius-single-iconதனுசு இன்று தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கலாம். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து நிம்மதி ஏற்படும்.
capricorn-single-iconமகரம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் ஏற்படக்கூடும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்யாதிருப்பது நல்லது. வேலையில் மேலதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.
aquarius-single-iconகும்பம் இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
pisces-single-iconமீனம் இன்று உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.