Tamil Rasi Palan Today 03rd May 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  03.05.2018

இன்றைய  பஞ்சாங்கம்

03.05.2018 சித்திரை 20, வியாழக்கிழமை, திரிதியை திதி காலை 09.05 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. கேட்டை நட்சத்திரம் இரவு 07.51 வரை பின்பு மூலம். பிரபலாரிஷ்ட யோகம் இரவு 07.51 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. தனியநாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

புதன்

சூரிய

சுக்கி

 

 

திருக்கணித கிரக நிலை

03.05.2018

ராகு

கேது செவ்

 

சனி (வ)

 சந்தி

குரு(வ)

 

இன்றைய ராசிப்பலன் – 03.05.2018

aries-single-iconமேஷம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும். உத்தியோகத்தில் கவனம் தேவை.


taurus-single-iconரிஷபம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். நினைத்த காரியம் நிறைவேறும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.


cancer-single-iconகடகம்

இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும்.


leo-single-iconசிம்மம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவினாலும் சிறுசிறு மனஸ்தாபங்களும் உண்டாகும். திருமண முயற்சிகளில் தாமதப்பலன் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.


virgo-single-iconகன்னி

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.


libra-single-iconதுலாம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுப முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பிள்ளைகளுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். பொருளாதார பிரச்சனை குறையும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணப்பிரச்சனைகள் நீங்கும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படலாம். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவார்கள். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் தடைக்கு பின்பு நற்பலன் கிட்டும்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக இருப்பார்கள். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.


aquarius-single-iconகும்பம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்பு அமையும். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். இதுவரை வராத கடன்கள் வசூலாகும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.


pisces-single-iconமீனம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மந்த நிலை உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.