Tamil Rasi Palan Today 10th July 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  10.07.2017

இன்றைய  பஞ்சாங்கம் 10-07-2017, ஆனி- 26, திங்கட்கிழமை, பிரதமை திதி பகல் 11.26 வரை பின்பு தேய்பிறை துதியை. உத்திராடம் நட்சத்திரம் இரவு 07.09 வரை பின்பு திருவோணம். மரணயோகம் இரவு 07.09 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1. சுப முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.
சுக்கி சூரிய செவ்
கேது திருக்கணித கிரக நிலை 10.07.2017   புதன்
சந்தி ராகு
சனி  (வ) குரு

இன்றைய ராசிப்பலன் – 10.07.2017

aries-single-iconமேஷம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.
taurus-single-iconரிஷபம் இன்று வியாபாரத்தில் பணவரவு சுமாராக இருக்கும். சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வேலையில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் கிடைக்கும். கடன் பிரச்சனை தீரும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
gemini-single-iconமிதுனம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மன குழப்பம் ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். சுப முயற்சிகளை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.
cancer-single-iconகடகம் இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட துணிவுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்லது நடக்கும்.
leo-single-iconசிம்மம் இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். சேமிப்பு உயரும்.
virgo-single-iconகன்னி இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் கூடும். சுபசெலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் நல்ல பலனை தரும்.
libra-single-iconதுலாம் இன்று உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். சுபமுயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும். எதிலும் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவது நல்லது.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும்.
sagittarius-single-iconதனுசு இன்று குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும். உற்றார் உறவினர்களால் மனசங்டங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை விலகி லாபம் கிட்டும். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் தீரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
capricorn-single-iconமகரம் இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி சந்தோஷம் கூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் அமோகமாக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
aquarius-single-iconகும்பம் இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் உதவியால் உங்கள் பிரச்சனைகள் குறையும்.
pisces-single-iconமீனம் இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.  உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வருமானம் இரட்டிப்பாகும்.