Tamil Rasi Palan Today 10th June 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  10.06.2018

இன்றைய  பஞ்சாங்கம்

10-06-2018, வைகாசி 27, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி பகல் 11.54 வரை பின்பு தேய்பிறை துவாதசி. அசுவினி  நட்சத்திரம் இரவு 10.29 வரை பின்பு பரணி. சித்தயோகம் இரவு 10.29 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

 

சந்தி

 

சூரிய புதன்

 

 

திருக்கணித கிரக நிலை

10.06.2018

ராகு சுக்கி

கேது  செவ்

 

சனி (வ)

 

குரு (வ)

 

இன்றைய ராசிப்பலன் – 10.06.2018

aries-single-iconமேஷம்

இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சனைகள் குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.


taurus-single-iconரிஷபம்

இன்று எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் மன அமைதி குறையும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.


gemini-single-iconமிதுனம்

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.


cancer-single-iconகடகம்

இன்று குடும்பத்தில மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். தொழிலில் வேலையாட்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்க நல்ல அனுகூலமான நாளாகும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.


virgo-single-iconகன்னி

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.


libra-single-iconதுலாம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் முன்னேற்ற நிலை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படவேண்டும். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் பல புதிய மாற்றங்கள் உண்டாகும்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கடன் பிரச்சனைகள் குறையும்.


aquarius-single-iconகும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.


pisces-single-iconமீனம்

இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் தம் பொறுப்பு அறிந்து செயல் படுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் அமையும்.