Tamil Rasi Palan Today 11th April 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  11.04.2018

இன்றைய  பஞ்சாங்கம்

11-04-2018, பங்குனி 28, புதன்கிழமை, தசமி திதி காலை 06.40 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 01.40 வரை பின்பு சதயம். பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 01.40 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

சூரிய

புதன்(வ)

சுக்கி

 

 

 

திருக்கணித கிரக நிலை

11.04.2018

ராகு

கேது  சந்தி

 

செவ் சனி

 

குரு(வ)

 


இன்றைய ராசிப்பலன் – 11.04.2018

aries-single-iconமேஷம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன் வசூலாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்களுக்கு விடியற்காலையிலே வியத்தகு செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும்.


gemini-single-iconமிதுனம்

இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு பகல் 12.36 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் தாமதப் பலன் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை மதியத்திற்கு பிறகு செய்வது உத்தமம்.


cancer-single-iconகடகம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு பகல் 12.36 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும்.


virgo-single-iconகன்னி

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.


libra-single-iconதுலாம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ப பதவி உயர்வு உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். நவீன பொருட்களை வாங்குவீர்கள்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். வருமானம் பெருகும்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.


aquarius-single-iconகும்பம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளுடன் வீண் மன-ஸ்தாபங்கள் உண்டாகும். உறவினர்களின் உதவியால் பிரச்சனைகள் ஓரளவுக்கு குறையும். நண்பர்களின் சந்திப்பு ஆறுதலை தரும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும்.


pisces-single-iconமீனம்

இன்று நீங்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். மாணவர்களின் படிப்பில் சற்று மந்தநிலை காணப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று காலதாமதம் ஏற்ப-டலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். உடல் ஆரோக்கியம் சீராகும்.