Tamil Rasi Palan Today 11th July 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  11.07.2017

இன்றைய  பஞ்சாங்கம் 11-07-2017, ஆனி- 27, செவ்வாய்கிழமை, துதியை திதி பகல் 12.56 வரை பின்பு தேய்பிறை திரிதியை. திருவோணம் நட்சத்திரம் இரவு 09.10 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
சுக்கி சூரிய செவ்
கேது திருக்கணித கிரக நிலை 11.07.2017   புதன்
சந்தி ராகு
சனி  (வ) குரு

இன்றைய ராசிப்பலன் – 11.07.2017

aries-single-iconமேஷம் இன்று வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
taurus-single-iconரிஷபம் இன்று குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகும். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.
gemini-single-iconமிதுனம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மற்றவர்கள் மிது தேவையில்லாத கோபம் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.
cancer-single-iconகடகம் இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வருமானம் பெருகும்.
leo-single-iconசிம்மம் இன்று எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.
virgo-single-iconகன்னி இன்று பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் பெருகும்.
libra-single-iconதுலாம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சனை தீரும். சுபகாரியங்கள் கைகூடும்.
sagittarius-single-iconதனுசு இன்று பொருளாதார ரிதீயாக நெருக்கடி ஏற்படக்கூடும். உறவினர்களால் வீண் பிரச்சனைகள் தோன்றும். அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரத்தில் கொடுக்கல்& வாங்கலில் கவனம் தேவை.
capricorn-single-iconமகரம் இன்று பிள்ளைகளால் அனுகூலம் கிட்டும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.
aquarius-single-iconகும்பம் இன்று குடும்பத்தில் வீண் செலவுகளால் பணப்பிரச்சனை ஏற்படக்கூடும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழில் ரீதியான புதிய முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
pisces-single-iconமீனம் இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி இருக்கும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். புதிய பொருள் சேரும்.