Tamil Rasi Palan Today 12th July 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  12.07.2017

இன்றைய  பஞ்சாங்கம் 12-07-2017, ஆனி- 28, புதன்கிழமை, திரிதியை திதி பகல் 02.04 வரை பின்பு தேய்பிறைசதுர்த்தி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 10.49 வரை பின்புசதயம். பிரபலாரிஷ்டயோகம் பகல் 10.49 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1.சங்கடஹரசதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுப முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00
சுக்கி சூரிய
கேது திருக்கணித கிரக நிலை 12.07.2017   செவ் புதன்
சந்தி ராகு
சனி  (வ) குரு

இன்றைய ராசிப்பலன் – 12.07.2017

aries-single-iconமேஷம் இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
taurus-single-iconரிஷபம் இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கணவன்& மனைவியிடையே இருந்த மன ஸ்தாபங்கள் விலகி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். சேமிப்பு உயரும்.
gemini-single-iconமிதுனம் இன்று குடும்பத்தில் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். உங்கள் ராசிக்கு காலை 10.02 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. மற்றவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.
cancer-single-iconகடகம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு காலை 10.02 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.
leo-single-iconசிம்மம் இன்று நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருட்கள் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.
virgo-single-iconகன்னி இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். பயணங்களால் அனுகூலம் கிட்டும்.
libra-single-iconதுலாம் இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். பொன் பொருள் சேரும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாககூடும். தொழில் வியாபாரத்தில் பணியாட்களால் மனசங்கடங்கள் உண்டாகும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன்கள் குறையும். தெய்வ வழிபாட்டின் மூலம் நன்மை பெறலாம்.
sagittarius-single-iconதனுசு இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்& வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரியம் கைகூடும். பழைய கடன்கள் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
capricorn-single-iconமகரம் இன்று குடும்பத்தில் உறவினர்களால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ப உயர்வு கிட்டும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவை பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். புதிய பொருள் சேரும்.
aquarius-single-iconகும்பம் இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்கள் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.
pisces-single-iconமீனம் இன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் பெரியவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் இருக்கும். லாபம் பெருகும்.