Tamil Rasi Palan Today 13th August 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  13.08.2017

இன்றைய  பஞ்சாங்கம் 13-08-2017, ஆடி- 28, ஞாயிற்றுக்கிழமை, சஷ்டி திதி இரவு 09.32 வரை பின்பு தேய்பிறை சப்தமி. அசுவினி நட்சத்திரம் பின்இரவு 05.04 வரை பின்பு பரணி. சித்தயோகம் பின்இரவு 05.04 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
சந்தி சுக்கி
  கேது திருக்கணித கிரக நிலை 13.08.2017 சூரிய செவ்
புதன்(வ) ராகு
சனி  (வ)   குரு

இன்றைய ராசிப்பலன் – 13.08.2017

aries-single-iconமேஷம் இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.
taurus-single-iconரிஷபம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
gemini-single-iconமிதுனம் இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெரிய மனிதர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
cancer-single-iconகடகம் இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன்- மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகத்தால் லாபம் பெருகும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். சேமிப்பு பெருகும்.
leo-single-iconசிம்மம் இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் ஓரளவு குறையும். உற்றார் உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும்.
virgo-single-iconகன்னி இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதி காப்பது உத்தமம்.
libra-single-iconதுலாம் இன்று வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமணம் சுப காரியங்களில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பயணங்களில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பகை விலகி ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டா-கும்.
sagittarius-single-iconதனுசு இன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். உடன் பிறந்தவர்களால் குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
capricorn-single-iconமகரம் இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் உண்டாகலாம். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். கூட்டாளிகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் குறையும்.
aquarius-single-iconகும்பம் இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தரும காரியங்கள் செய்து மனம் மகிழ்வீர்கள். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
pisces-single-iconமீனம் இன்று பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். தூர பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். கையிருப்பு குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.