Tamil Rasi Palan Today 13th December 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  13.12.2017

இன்றைய  பஞ்சாங்கம்

13-12-2017, கார்த்திகை 27, புதன்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 03.25 வரை பின்பு தேய்பிறை துவாதசி. சித்திரை நட்சத்திரம் இரவு 08.58 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

திருக்கணித கிரக நிலை 13.12.2017 ராகு
கேது
சனி   சூரிய சுக்கி புதன்(வ) செவ் குரு   சந்தி

இன்றைய ராசிப்பலன் – 13.12.2017

aries-single-iconமேஷம்

இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்துவிடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த வங்கி கடன் கிட்டும்.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் உங்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். சேமிப்பு உயரும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ற உயர்பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.


cancer-single-iconகடகம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் தீரும்.


virgo-single-iconகன்னி

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். பொன்பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சீராகும்.


libra-single-iconதுலாம்

இன்று உங்களுக்கு பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்காத லாபம் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வீண் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்-. உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.


sagittarius-single-iconதனுசு

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை எளிதில் செய்த முடிப்பீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இருந்த இழுபறி நிலை விலகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.


capricorn-single-iconமகரம்

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவர். வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் ஏற்படும்.


aquarius-single-iconகும்பம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடலில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.


pisces-single-iconமீனம்

இன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் தோன்றும். எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.