Tamil Rasi Palan Today 13th January 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  13.01.2018

இன்றைய  பஞ்சாங்கம்

13-01-2018, மார்கழி 29, சனிக்கிழமை, துவாதசி திதி இரவு 11.52 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. அனுஷம் நட்சத்திரம் பகல் 10.14 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. சனிபகவான் வழிபாடு நல்லது. போகிப் பண்டிகை.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

திருக்கணித கிரக நிலை 13.01.2018 ராகு
கேது
சூரிய சனி சுக்கி புதன் சந்தி   செவ் குரு

இன்றைய ராசிப்பலன் – 13.01.2018

aries-single-iconமேஷம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படுவது உத்தமம்.


taurus-single-iconரிஷபம்

இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எந்த வேலையையும் புது பொலிவுடனும், தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். வேலையில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.


gemini-single-iconமிதுனம்

இன்று இனிய செய்திகள் வந்து இல்லத்தை மகிழ்விக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில்  எதிர்பாராத  லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.


cancer-single-iconகடகம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனை தீரும். பெரியவர்களின் நட்பு கிட்டும். தேவைகள் யாவும் நிறைவேறும்.


leo-single-iconசிம்மம்

இன்று குடும்பத்தில் அசையா சொத்து வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.


virgo-single-iconகன்னி

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும்.


libra-single-iconதுலாம்

இன்று வேலையில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கலாம். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டாகும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகலாம். அலுவலகத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகள் குறையும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அனுகூலம் கிட்டும்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழிலில் இருந்த எதிரிகளின் தொல்லை குறைந்து முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.


aquarius-single-iconகும்பம்

இன்று திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கப்பெறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உயர் பதவிகள் கிடைக்ககூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியாக வெளிமாநில தொடர்பு ஏற்படும்.


pisces-single-iconமீனம்

இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.