Tamil Rasi Palan Today 13th June 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  13.06.2018

இன்றைய  பஞ்சாங்கம்

13-06-2018, வைகாசி 30, புதன்கிழமை, அமாவாசை திதி பின்இரவு 01.13 வரை பின்பு வளர்பிறை பிரதமை. ரோகிணி நட்சத்திரம் மாலை 04.43 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30-12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

 

சூரிய சந்தி

புதன்

 

திருக்கணித கிரக நிலை

13.06.2018

ராகு சுக்கி

கேது  செவ்

 

சனி (வ)

 

குரு (வ)

 

இன்றைய ராசிப்பலன் – 13.06.2018

aries-single-iconமேஷம்

இன்று குடும்பத்தில் வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறி சற்று முன்னேற்றம் ஏற்படும். வேலையில் கவனமுடன் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.


taurus-single-iconரிஷபம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய நட்பு ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். பணவரவு சிறப்பாக இருக்கும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். சிக்கனமாக செயல்பட்டால் செலவுகளை சமாளிக்க முடியும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் பிரச்சனைகள் ஓரளவு தீரும்.


cancer-single-iconகடகம்

இன்று பெரிய மனிதர்களின் சந்திப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்க்காத லாபம் ஏற்படும்.  நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.


virgo-single-iconகன்னி

இன்று எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர்.


libra-single-iconதுலாம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி பாராட்டுதல்களை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.


sagittarius-single-iconதனுசு

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். சகோதர சகோதரி வழியில் நன்மைகள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். எதிர்பாராத பணவரவால் ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படும். பண பற்றாக்குறையால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும்.


aquarius-single-iconகும்பம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வேலையில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.


pisces-single-iconமீனம்

இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகள் தீரும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.