Tamil Rasi Palan Today 13th March 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  13.03.2018

இன்றைய  பஞ்சாங்கம்

13-03-2018, மாசி 29, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி பகல் 01.41 வரை பின்பு தேய்பிறை துவாதசி. உத்திராடம் நட்சத்திரம் பகல் 12.30 வரை பின்பு திருவோணம். பிரபலாரிஷ்ட யோகம் பகல் 12.30 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

புதன் சுக்கி

 

 

 

சூரிய

திருக்கணித கிரக நிலை

13.03.2018

ராகு

கேது சந்தி

 

செவ் சனி

 

குரு(வ)

 

இன்றைய ராசிப்பலன் – 13.03.2018

aries-single-iconமேஷம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவிற்கு பஞ்சமிருக்காது. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.


gemini-single-iconமிதுனம்

இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை.


cancer-single-iconகடகம்

இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பெரிய மனிதர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும்.


virgo-single-iconகன்னி

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சினைகளை குறைக்கலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் நல்ல செய்திகள் வரும்.


libra-single-iconதுலாம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சனைகள் சற்று குறையும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். பணப்புழக்கம் அதிகமாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வேலைபளு குறையும்.


sagittarius-single-iconதனுசு

இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் ஓரளவுக்கு குறையும். உறவினர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.


capricorn-single-iconமகரம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்படைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உடன்பிறப்பிடம் இருந்த பிரச்சனைகள் நீங்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவு கிட்டும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வருமானம் பெருகும்.


aquarius-single-iconகும்பம்

இன்று செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். மனஉறுதியோடு பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன் பிரச்சனை தீரும். தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் செய்து லாபம் அடைவீர்கள்.


pisces-single-iconமீனம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் பயணங்கள் உண்டாகும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். உறவினர்கள் வருகை மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப்பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.