Tamil Rasi Palan Today 14th May 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  14.05.2018

இன்றைய  பஞ்சாங்கம்

14-05-2018, சித்திரை 31, திங்கட்கிழமை, சதுர்த்தசி திதி இரவு 07.47 வரை பின்பு அமாவாசை. அசுவினி நட்சத்திரம் பகல் 12.30 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. போதாயன அமாவாசை. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 

சந்தி சூரிய புதன்

சுக்கி

 

 

திருக்கணித கிரக நிலை

14.05.2018

ராகு

செவ் கேது

 

சனி (வ)

 

குரு (வ)  

 

 


இன்றைய ராசிப்பலன் – 14.05.2018

aries-single-iconமேஷம்

இன்று உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமின்றி கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபார வளர்ச்சிக்கான புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.


taurus-single-iconரிஷபம்

இன்று குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். கடன் பிரச்சினை தீரும்.


gemini-single-iconமிதுனம்

இன்று நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் லாபம் கிடைக்கும்.


cancer-single-iconகடகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பிள்ளைகள் தம் பொறுப்பு அறிந்து செயல்படுவர். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.


leo-single-iconசிம்மம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத வகையில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் நெருக்கடிகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். லாபம் பெருகும்.


virgo-single-iconகன்னி

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமலிருப்பது உத்தமம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபகாரியங்களை தவிர்க்கவும்.


libra-single-iconதுலாம்

இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் நல்ல லாபங்கள் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் உங்கள் புகழ் செல்வாக்கு மேலோங்கும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உங்களுக்கு உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள்.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களால் வீண் பிரச்சனைகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். தொழிலில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை பெறலாம்.


capricorn-single-iconமகரம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகலாம். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். இதுவரை வராத கடன்கள் இன்று வசூலாகும்.


aquarius-single-iconகும்பம்

இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கப்பெறும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.


pisces-single-iconமீனம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற மனஸ்தாபம் தோன்றும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.