Tamil Rasi Palan Today 14th September 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  14.09.2017

இன்றைய  பஞ்சாங்கம்

14-09-2017, ஆவணி- 29, வியாழக்கிழமை, நவமி திதி இரவு 08.36 வரை பின்பு தேய்பிறை தசமி. திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 03.35 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் பின்இரவு 03.35 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம்- 1, ஜீவன்- 1/2. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 
சந்தி
திருக்கணித கிரக நிலை 14.09.2017   சுக்கி ராகு
கேது சூரிய புதன் செவ்
சனி குரு

இன்றைய ராசிப்பலன் – 14.09.2017

aries-single-iconமேஷம்

இன்று நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்களில் புதிய நபர்கள் அறிமுகம் கிட்டும். தொழிலில் பணியாட்கள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.


taurus-single-iconரிஷபம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் ஆதரவு கிட்டும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினை குறையும்.


gemini-single-iconமிதுனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் உங்கள் புகழ் செல்வாக்கு மேலோங்கும். வங்கி சேமிப்பு உயரும்.


cancer-single-iconகடகம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமின்றி கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பெண்கள் ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வார்கள்.


virgo-single-iconகன்னி

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.


libra-single-iconதுலாம்

இன்று உங்களுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபகாரியங்களை தவிர்க்கவும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வெளிக்கடன்கள் இன்று வசூலாகும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.


capricorn-single-iconமகரம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழிலில் நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.


aquarius-single-iconகும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். வியாபாரத்தில் சிறுசிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம்.


pisces-single-iconமீனம்

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். ஆடம்பர பொருட்களால் வீண் செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கப்பெறும்.