Tamil Rasi Palan Today 16th May 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  16.05.2018

இன்றைய  பஞ்சாங்கம்

16-05-2018, வைகாசி 02, புதன்கிழமை, பிரதமை திதி பகல் 02.28 வரை பின்பு வளர்பிறை துதியை. கிருத்திகை நட்சத்திரம் காலை 08.59 வரை பின்பு ரோகிணி. அமிர்தயோகம் காலை 08.59 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம் .

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

புதன்

சூரிய சந்தி

சுக்கி

 

திருக்கணித கிரக நிலை

16.05.2018

ராகு

செவ் கேது

 

சனி (வ)

 

குரு (வ) 

 

 


இன்றைய ராசிப்பலன் – 16.05.2018

aries-single-iconமேஷம்

இன்று நீங்கள் அக்கம் பக்கத்தினரை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். கோபத்தை குறைத்து செயலில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.


taurus-single-iconரிஷபம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சிலருக்கு வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடல்நிலை சுறுசுறுப்பாக இருக்கும். சுபசெலவுகள் ஏற்படும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.


cancer-single-iconகடகம்

இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழிலில் வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். அலுவலகத்தில் நீண்ட நாள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப் பெறலாம்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு உபாதைகள் ஏற்படும். வாகனங்களால் வீண் செலவுகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும்.


virgo-single-iconகன்னி

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை தோன்றும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலையில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது உத்தமம்.


libra-single-iconதுலாம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தினருடன் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். எதிர்பார்த்த வங்கி கடன்  கிடைப்பதற்கான சூழ்நிலை உருவாகும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். சுபகாரியங்கள் கைகூடும்.


sagittarius-single-iconதனுசு

இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். கூட்டாளிகளின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். வருமானம் பெருகும்.


capricorn-single-iconமகரம்

இன்று அலுவலகத்தில் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிட்டும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.


aquarius-single-iconகும்பம்

இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சற்று மந்த நிலை ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வெற்றியை ஏற்படுத்தும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.


pisces-single-iconமீனம்

இன்று இல்லத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும்.