Tamil Rasi Palan Today 17th April 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  17.04.2018

இன்றைய  பஞ்சாங்கம்

17-04-2018, சித்திரை 04, செவ்வாய்க்கிழமை, துதியை திதி பின்இரவு 03.45 வரை பின்பு வளர்பிறை திரிதியை. பரணி நட்சத்திரம் பின்இரவு 01.56 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

புதன்

சூரிய சுக்கி சந்தி

 

 

 

திருக்கணித கிரக நிலை

17.04.2018

ராகு

கேது

 

செவ் சனி

 

குரு(வ) 

 

 


இன்றைய ராசிப்பலன் – 17.04.2018

aries-single-iconமேஷம்

இன்று உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். வேலையில் மேலதிகாரிகளுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும்.


taurus-single-iconரிஷபம்

இன்று குடும்பத்தினரிடம் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பர்.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் இருந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும்.


cancer-single-iconகடகம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கலாம். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப்பலன்கள் கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.


virgo-single-iconகன்னி

இன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுப காரியங்கள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.


libra-single-iconதுலாம்

இன்று உங்களுக்கு தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற நற்பலன்கள் கிட்டும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் சேரும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உற்றார் உறவினர்களுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் தோன்றலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.


capricorn-single-iconமகரம்

இன்று உறவினர்களால் வீண் செலவு ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.


aquarius-single-iconகும்பம்

இன்று உத்தியோகத்தில் மனம் மகிழும் மாற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியை தரும். கொடுத்த கடன் வசூலாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.


pisces-single-iconமீனம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். புதிய பொருட்கள் வாங்கும் விஷயத்தில் கவனமாக செயல்படுவது நல்லது.