Tamil Rasi Palan Today 17th July 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  17.07.2017

இன்றைய  பஞ்சாங்கம் 17-07-2017, ஆடி -01, திங்கட்கிழமை, அஷ்டமி திதி பகல் 12.05 வரை பின்பு தேய்பிறை நவமி. அசுவினி நட்சத்திரம் இரவு 11.18 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 1, ஜீவன்- 1/2. சுப முயற்சிகளையும், பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.
சந்தி சுக்கி
கேது   திருக்கணித கிரக நிலை 17.07.2017   சூரிய புதன் செவ்
ராகு
சனி  (வ) குரு

இன்றைய ராசிப்பலன் – 17.07.2017

aries-single-iconமேஷம் இன்று குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதில் சந்தோஷம் இருக்கும்.
taurus-single-iconரிஷபம் இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். சேமிப்பு உயரும்.
gemini-single-iconமிதுனம் இன்று உங்களுக்கு தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் கிட்டும்.
cancer-single-iconகடகம் இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
leo-single-iconசிம்மம் இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வேலையில் இருந்த பிரச்சனைகள் சற்று குறையும். தொழில் ரீதியான வெளியூர் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
virgo-single-iconகன்னி இன்று உங்களுக்கு வீண் கவலைகள் குழப்பங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.
libra-single-iconதுலாம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மனம் மகிழும் மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பணவரவு பலவழிகளில் வரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று நீங்கள் எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும்.
sagittarius-single-iconதனுசு இன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
capricorn-single-iconமகரம் இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கொடுக்கல்& வாங்கல் லாபகரமாக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
aquarius-single-iconகும்பம் இன்று உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பு உயரும்.
pisces-single-iconமீனம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மன ஸ்தாபங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் கோபத்தை குறைத்துக் கொண்டு பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும்.