Tamil Rasi Palan Today 17th May 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  17.05.2018

இன்றைய  பஞ்சாங்கம்

17-05-2018, வைகாசி 03, வியாழக்கிழமை, துதியை திதி பகல் 11.27 வரை பின்பு வளர்பிறை திரிதியை. ரோகிணி நட்சத்திரம் காலை 06.48 வரை பின்பு மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 04.33 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

புதன்

சூரிய சந்தி

சுக்கி

 

திருக்கணித கிரக நிலை

17.05.2018

ராகு

செவ் கேது

 

சனி (வ)

 

குரு (வ)      

 

 


இன்றைய ராசிப்பலன் – 17.05.2018

aries-single-iconமேஷம்

இன்று வேலையில் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகலாம். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை தோன்றும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.


taurus-single-iconரிஷபம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். சுபகாரியம் கைகூடும்.


gemini-single-iconமிதுனம்

இன்று குடும்பத்தில் அசையா சொத்து வழியில் செலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் தீரும்.


cancer-single-iconகடகம்

இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எந்த வேலையையும் புது பொலிவுடனும், தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உயர் பதவிகள் கிடைக்ககூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் ரீதியாக வெளிமாநில தொடர்பு ஏற்படும். பொன் பொருள் சேரும்.


leo-single-iconசிம்மம்

இன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழிலில் இ-ருந்த எதிரிகளின் தொல்லை குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.


virgo-single-iconகன்னி

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சில தடங்கல்கள் ஏற்படலாம். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.


libra-single-iconதுலாம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது உத்தமம். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எந்த வேலைகளிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உங்கள் குடும்பத்தில் இனிய செய்திகள் வந்து சேரும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். பண வரவு தாராளமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.


capricorn-single-iconமகரம்

இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும். உடன் பிறப்புகள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.


aquarius-single-iconகும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோக ரீதியாக சிலருக்கு மன உளைச்சல் உண்டாகலாம். உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டாகும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.


pisces-single-iconமீனம்

இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.