Tamil Rasi Palan Today 18th September 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  18.09.2017

இன்றைய  பஞ்சாங்கம்

18-09-2017, புரட்டாசி -02, திங்கட்கிழமை, திரியோதசி திதி பகல் 01.08 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. மகம் நட்சத்திரம் இரவு 11.23 வரை பின்பு பூரம். மரணயோகம் இரவு 11.23 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம்- 0, ஜீவன்- 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 
திருக்கணித கிரக நிலை 18.09.2017     ராகு
கேது சந்தி செவ் சுக்கி புதன்
சனி குரு சூரிய
 

இன்றைய ராசிப்பலன் – 18.09.2017

aries-single-iconமேஷம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றலாம். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றத்தை காண முடியும்.


taurus-single-iconரிஷபம்

இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கேற்ப நற்பலன்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.


gemini-single-iconமிதுனம்

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்வுகள் நடைப்பெறும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும்.


cancer-single-iconகடகம்

இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் வெளிவட்டார நட்பு கிட்டும். பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் நிறைவேறும்.


virgo-single-iconகன்னி

இன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் கல்வி சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். சேமிப்பு உயரும்.


libra-single-iconதுலாம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். கடன் பிரச்சினைகள் தீரும்.


sagittarius-single-iconதனுசு

இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். சிலருக்கு புதிய சொத்து வாங்கும் யோகம் கிட்டும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். திருமண சுபமுயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் கவனம் தேவை.


aquarius-single-iconகும்பம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களால் உங்கள் பிரச்சனைகள் குறையும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடைவீர்கள். உத்தியோகத்தில் சக நண்பர்களின் ஆதரவு கிட்டும்.


pisces-single-iconமீனம்

இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.