Tamil Rasi Palan Today 19th August 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  19.08.2017

இன்றைய  பஞ்சாங்கம் 19-08-2017, ஆவணி- 03, சனிக்கிழமை, துவாதசி திதி காலை 07.17 வரை பின்பு திரியோதசி திதி பின்இரவு 04.38 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. புனர்பூசம் நட்சத்திரம் இரவு 07.09 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 0, ஜீவன்- 1/2. சனிப் பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
சந்தி சுக்கி
திருக்கணித கிரக நிலை 19.08.2017 ராகு செவ்
கேது சூரிய புதன்(வ)
சனி  (வ)   குரு

இன்றைய ராசிப்பலன் – 19.08.2017

aries-single-iconமேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகி அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பாராத லாபம் கிட்டும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
taurus-single-iconரிஷபம் இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. வீட்டின் தேவைகள் நிறைவேறும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனைகள் குறையும். இது வரை வராத கடன்கள் வசூலாகும். பொன்பொருள் சேரும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
gemini-single-iconமிதுனம் இன்று நீங்கள் தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்க குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அயராத உழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நல்லது.
cancer-single-iconகடகம் இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிள்ளைகள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.
leo-single-iconசிம்மம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எடுத்த காரியம் எளிதில் முடியும்.
virgo-single-iconகன்னி இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் வருமானம் பெருகும். தேவைகள் பூர்த்தியாகும்.
libra-single-iconதுலாம் இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களின் மனஸ்தாபத்துக்கு ஆளாக நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உங்களுக்கு பகல் 01.36 மணிக்கு வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை குறையும். வீண் விரயங்களால் கடன்சுமை அதிகமாகலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்க முடியும்.
sagittarius-single-iconதனுசு இன்று உங்களுக்கு பகல் 01.36 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் உத்தியோக ரீதியாக மனஉளைச்சல் ஏற்படக்கூடும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.
capricorn-single-iconமகரம் இன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.
aquarius-single-iconகும்பம் இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் வழியில் ஆதரவு கிட்டும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.
pisces-single-iconமீனம் இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் பணிச்சுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத உதவிகள் கிட்டும்.