Tamil Rasi Palan Today 1st October 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  01.10.2017

இன்றைய  பஞ்சாங்கம்

01-10-2017, புரட்டாசி -15, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 02.44 வரை பின்பு துவாதசி. திருவோணம் நட்சத்திரம் இரவு 08.09 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் இரவு 08.09 வரை பின்பு மரணயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 0. ஏகாதசி விரதம். ஹயக்ரீவருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

திருக்கணித கிரக நிலை 01.10.2017     ராகு
கேது சந்தி செவ் சுக்கி
சனி குரு   சூரிய புதன்
 

இன்றைய ராசிப்பலன் – 01.10.2017

aries-single-iconமேஷம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.


taurus-single-iconரிஷபம்

இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் சற்று குறையும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சனைகள் குறையும். உடல்நிலையில் கவனம் தேவை.


cancer-single-iconகடகம்

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.


leo-single-iconசிம்மம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.


virgo-single-iconகன்னி

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் சில தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எந்த செயலிலும் நிதானம் தேவை.


libra-single-iconதுலாம்

இன்று உடன் பிறந்தவர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமணம் சுப காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் அனுகூலம் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும். வெளி வட்டார தொடர்புகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலம் இருக்கும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வீண் செலவுகள் தோன்றும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.


capricorn-single-iconமகரம்

இன்று வீட்டில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். மன அமைதி இருக்கும்.


aquarius-single-iconகும்பம்

இன்று நீங்கள் பணப்பிரச்சனையிலிருந்து விடுபட சிக்கனமுடன் செயல்படவேண்டும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம்.


pisces-single-iconமீனம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு அமோகமாக இருந்து கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த லாபம் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.