Tamil Rasi Palan Today 20th February 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  20.02.2018

இன்றைய  பஞ்சாங்கம்

20-02-2018, மாசி 08, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 04.46 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. ரேவதி நட்சத்திரம் பகல் 02.02 வரை பின்பு அசுவினி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 0. ஜீவன்- 1/2. முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.                                               

சந்தி

 

 

 

சுக்கி சூரிய புதன்

திருக்கணித கிரக நிலை

20.02.2018

ராகு

கேது

 

சனி

  செவ்

குரு

 


இன்றைய ராசிப்பலன் – 20.02.2018

aries-single-iconமேஷம்

இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை, பிள்ளைகளால் மன உளைச்சல் உண்டாகும். பணவரவு சுமாராக இருக்கும். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உங்கள் பிரச்சனைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் விலகி லாபம் பெருகும்.


gemini-single-iconமிதுனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும்.


cancer-single-iconகடகம்

இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வருமானம் பெருகும்.


leo-single-iconசிம்மம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் ராசிக்கு பகல் 02.02 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் இருப்பீர்கள். மதியத்திற்கு பிறகு மனஅமைதி இருக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.


virgo-single-iconகன்னி

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு மதியம் 02.02 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.


libra-single-iconதுலாம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் மட்டுமே வெற்றி காண முடியும். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விட்டு கொடுத்து செல்வதால் பிரச்சினைகள் குறையும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று இல்லத்தில் மங்கள சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். வேலை தேடுபவர்களுக்கு வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.


sagittarius-single-iconதனுசு

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.


capricorn-single-iconமகரம்

இன்று தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சில தடங்கல்கள் ஏற்படலாம். வேலை விஷயமாக செல்லும் பயணங்களில் அலைச்சல் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டி இருக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.


aquarius-single-iconகும்பம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.


pisces-single-iconமீனம்

இன்று பிள்ளைகள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவியால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.