Tamil Rasi Palan Today 20th January 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  20.01.2018

இன்றைய  பஞ்சாங்கம்

 

20-01-2018, தை 07, சனிக்கிழமை, திரிதியை திதி பகல் 02.11 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. சதயம் நட்சத்திரம் பின்இரவு 05.31 வரை பின்பு பூரட்டாதி. அமிர்தயோகம் பின்இரவு 05.31 வரை பின்பு மரணயோகம். நேத்திரம்- 0.  ஜீவன்- 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

சந்தி திருக்கணித கிரக நிலை 20.01.2018 ராகு
சூரிய கேது  சுக்கி
புதன் சனி செவ் குரு

இன்றைய ராசிப்பலன் – 20.01.2018

aries-single-iconமேஷம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய கடன்கள் வசூலாகும்.


taurus-single-iconரிஷபம்

இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சேமிப்பு உயரும். நினைத்தது நிறைவேறும்.


gemini-single-iconமிதுனம்

இன்று பிள்ளைகளால் சுப செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். பணகஷ்டம் குறையும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். பொன்பொருள் சேரும்.


cancer-single-iconகடகம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுபகாரியங்களை தவிர்க்கவும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நிதானம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை குறைக்கவும்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செய்வீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.


virgo-single-iconகன்னி

இன்று பிள்ளைகளிடம் இருந்த மனஸ்தாபங்கள் குறையும். செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பொன்பொருள் சேரும்.


libra-single-iconதுலாம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சனைகள் குறையும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை ஏற்படும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்களுடன் மனக்கசப்பு உண்டாகலாம். உடனிருப்பவரை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். அயராத உழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.


sagittarius-single-iconதனுசு

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரியம் கைகூடும்.


capricorn-single-iconமகரம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றலாம். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையக்கூடும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். மதி நுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.


aquarius-single-iconகும்பம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனைகள் குறையும். வீட்டில் சுப காரிய முயற்சிகள் நற்பலனை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும். பழைய பாக்கிகள் வசூலாகும்.


pisces-single-iconமீனம்

இன்று வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வருமானம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். பெரியவர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.