Tamil Rasi Palan Today 22nd February 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  22.02.2018

இன்றைய  பஞ்சாங்கம்

22-02-2018, மாசி 10 , வியாழக்கிழமை, சப்தமி திதி பின்இரவு 02.29 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. பரணி நட்சத்திரம் பகல் 01.34 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் பகல் 01.34 வரை பின்பு மரணயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.                                                      

 

சந்தி

 

 

சுக்கி சூரிய புதன்

திருக்கணித கிரக நிலை

22.02.2018

ராகு

கேது

 

சனி

  செவ்

குரு

 


இன்றைய ராசிப்பலன் – 22.02.2018

aries-single-iconமேஷம்

இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு ஆனந்தத்தை தரும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். எதிர்பார்த்த லாபம் கிட்டும். வெளியூரிலிருந்து வேலை கிடைப்பதற்கான சூழ்நிலை உருவாகும். புதிய பொருட்கள் சேரும்.


taurus-single-iconரிஷபம்

இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். எந்த செயலையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.


gemini-single-iconமிதுனம்

இன்று குடும்பத்தில் செலவுகள் குறைந்து காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். கடன் பிரச்சனை குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.


cancer-single-iconகடகம்

இன்று புது உற்சாகத்துடன் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவதில் சிக்கல்கள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மனதிற்கு நிம்மதியை தரும். சுபகாரிய முயற்சிகளில் நற்பலன் கிட்டும்.


virgo-single-iconகன்னி

இன்று உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். மற்றவர்கள் மீது கோபப்படும் நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை.


libra-single-iconதுலாம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். சுப செலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெரும் வாய்ப்புகள் ஏற்படும். சேமிப்பு உயரும்.


sagittarius-single-iconதனுசு

இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் சக நண்பர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.


capricorn-single-iconமகரம்

இன்று உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். வீட்டில் பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.


aquarius-single-iconகும்பம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். மற்றவர்களுக்கு உதவும் வகையில் பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கான செயல்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். வேலையில் பணிச்சுமை குறையும்.


pisces-single-iconமீனம்

இன்று எதிர்பாராத வகையில் திடீர் செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.