Tamil Rasi Palan Today 22nd May 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  22.05.2018

இன்றைய  பஞ்சாங்கம்

22-05-2018, வைகாசி 08, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி இரவு 08.31 வரை பின்பு வளர்பிறை நவமி. மகம் நட்சத்திரம் இரவு 08.28 வரை  பின்பு பூரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

புதன்

சூரிய

சுக்கி

 

திருக்கணித கிரக நிலை

22.05.2018

 

ராகு

கேது  செவ்

சந்தி

சனி(வ)

 

குரு(வ)               

 


இன்றைய ராசிப்பலன் – 22.05.2018

aries-single-iconமேஷம்

இன்று பிள்ளைகளிடம் வீண் மன ஸ்தாபங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம்.


taurus-single-iconரிஷபம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படலாம். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். மதிநுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.


gemini-single-iconமிதுனம்

இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.


cancer-single-iconகடகம்

இன்று உங்களுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். பண கஷ்டம் சற்று குறையும்.


leo-single-iconசிம்மம்

இன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் இரட்டிப்பாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய கடன்கள் வசூலாகும். பொன் பொருள் சேரும்.


virgo-single-iconகன்னி

இன்று உங்களுக்கு பண புழக்கம் அதிகமாகும்-. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனைகள் குறையும். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகும்.


libra-single-iconதுலாம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். பெரியவர்களின் அறிவுரையால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.


sagittarius-single-iconதனுசு

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை குறையும். பெண்களுக்கு பணிச்சுமை அதிகமாகலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுபகாரியங்களை தவிர்க்கவும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நிதானம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


aquarius-single-iconகும்பம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். வீட்டு தேவை பூர்த்தியாகும். சேமிப்பு உயரும்.


pisces-single-iconமீனம்

இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். உற்றார் உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை நிலவும்.