Tamil Rasi Palan Today 23rd April 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  23.04.2018

இன்றைய  பஞ்சாங்கம்

23-04-2018, சித்திரை 10, திங்கட்கிழமை, அஷ்டமி திதி பகல் 02.16 வரை பின்பு வளர்பிறை நவமி. பூசம் நட்சத்திரம் மாலை 05.03 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. வாஸ்து நாள் காலை 08.50 மணி முதல் 09.26 மணி வரை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

புதன்

சூரிய

சுக்கி

 

 

திருக்கணித கிரக நிலை

23.04.2018

ராகு சந்தி

கேது

 

செவ் சனி(வ)

 

 

குரு(வ)               

 

 

 


இன்றைய ராசிப்பலன் – 23.04.2018

aries-single-iconமேஷம்

இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை சற்று குறைவாக காணப்படும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.


taurus-single-iconரிஷபம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.


gemini-single-iconமிதுனம்

இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். வியாபாரத்தில் லாபம் பெருகும். சேமிப்பு உயரும்.


cancer-single-iconகடகம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பதற்கான சூழ்நிலை அமையும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.


leo-single-iconசிம்மம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை குறையும் சூழ்நிலை ஏற்படலாம். சுப செலவுகளால் கையிருப்பு குறையும். தொழில் புரிவோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம். ஆடம்பர செலவுகளை குறைத்தால் கடன் வாங்கும் சூழ்நிலையை தவிர்க்கலாம்.


virgo-single-iconகன்னி

இன்று உங்களுக்கு புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிட்டும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும்.


libra-single-iconதுலாம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிட்டும். உங்களின் பிரச்சனைகளுக்கு உறவினர்கள் பக்க பலமாக இருந்து உதவுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைப்பதற்கான சூழ்நிலை உருவாகும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களில் அதிக கவனம் தேவை.


capricorn-single-iconமகரம்

இன்று நீங்கள் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் அதிக லாபம் கிட்டும்.


aquarius-single-iconகும்பம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் முடியும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வேலையில் பணிச்சுமை குறையும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். ஆன்மீக பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும்.


pisces-single-iconமீனம்

இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சனைகளை குறையும்.