Tamil Rasi Palan Today 23rd December 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  23.12.2017

இன்றைய  பஞ்சாங்கம்

23-12-2017, மார்கழி 08, சனிக்கிழமை, பஞ்சமி திதி இரவு 12.25 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 09.43 வரை பின்பு சதயம். சித்தயோகம் இரவு 09.43 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. தனியநாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

திருக்கணித கிரக நிலை 23.12.2017  ராகு
சந்தி கேது
சூரிய சனி சுக்கி   புதன்(வ) செவ் குரு
 

இன்றைய ராசிப்பலன் – 23.12.2017

aries-single-iconமேஷம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் அதற்கேற்ப நற்பலன்களும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். கடன் சுமை குறையும். உடல்நிலை சீராகும்.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும். பழைய பாக்கிகள் வசூலாகும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு அவர்களது திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மாற்று கருத்துக்கள் நீங்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும்.


cancer-single-iconகடகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. பயணங்களை தவிர்க்கவும்


leo-single-iconசிம்மம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழிலில் வெளிவட்டார தொடர்பின் மூலம் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும்.


virgo-single-iconகன்னி

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளின் தேவைகள் நிறைவேறும். உடல் நிலை சீராகும்.


libra-single-iconதுலாம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உறவினர்களிடம் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றத்தால் மன உளைச்சல் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். பண கஷ்டம் தீரும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்திலும் அனுகூலப்பலன் உண்டாகும்.


capricorn-single-iconமகரம்

இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன்கள் குறையும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும்.


aquarius-single-iconகும்பம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களுடன் சுமூக உறவு ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.


pisces-single-iconமீனம்

இன்று நீங்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.