Tamil Rasi Palan Today 23rd May 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  23.05.2018

இன்றைய  பஞ்சாங்கம்

23-05-2018, வைகாசி 09, புதன்கிழமை, நவமி திதி இரவு 07.13 வரை பின்பு வளர்பிறை தசமி. பூரம் நட்சத்திரம் இரவு 07.55 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. தனிய நாள். சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

புதன்

சூரிய

சுக்கி

 

திருக்கணித கிரக நிலை

23.05.2018

 

ராகு

கேது  செவ்

சந்தி

சனி(வ)

 

குரு(வ)               

 


இன்றைய ராசிப்பலன் – 23.05.2018

aries-single-iconமேஷம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சனை விலகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.


taurus-single-iconரிஷபம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.


gemini-single-iconமிதுனம்

இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். ஊழியர்களின் ஒத்துழைப்பால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணபற்றாக்குறை நீங்கும். வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.


cancer-single-iconகடகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  உத்தியோகத்தில் புதிய பதவிகள் தேடி வரும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் அடைவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.


leo-single-iconசிம்மம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் மந்த நிலை நீங்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும்.


virgo-single-iconகன்னி

இன்று தொழில் வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் நெருக்கடிகளால் வேலைபளு சற்று அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிட்டும். எதிர்பார்த்த உதவி தடையின்றி கிடைக்கும்.


libra-single-iconதுலாம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். திருமண பேச்சுவார்த்தைகள் நற்பலனை தரும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமண சுபமுயற்சிகள் அனுகூலமான பலன்களை தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.


sagittarius-single-iconதனுசு

இன்று பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அலுவலகத்தில் தேவையற்ற பிரச்சனையால் மன உளைச்சல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் பெரிய கெடுதி இருக்காது. நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.


capricorn-single-iconமகரம்

இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.


aquarius-single-iconகும்பம்

இன்று உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும்.


pisces-single-iconமீனம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்களால் மனமகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய நவீன பொருட்கள் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும்.