Tamil Rasi Palan Today 24th May 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  24.05.2018

இன்றைய  பஞ்சாங்கம்

24-05-2018, வைகாசி 10, வியாழக்கிழமை, தசமி திதி மாலை 06.18 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. உத்திரம் நட்சத்திரம் இரவு 07.45 வரை  பின்பு அஸ்தம். மரணயோகம் இரவு 07.45 வரை  பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

புதன்

சூரிய

சுக்கி

 

திருக்கணித கிரக நிலை

24.05.2018

 

ராகு

கேது  செவ்

 

சனி(வ)

 

குரு(வ)               

சந்தி


இன்றைய ராசிப்பலன் – 24.05.2018

aries-single-iconமேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாரத்ததை விட லாபம் பெருகும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.


taurus-single-iconரிஷபம்

இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணி சுமை கூடும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடன் இருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பெரியவர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும். எதிர்பாராத உதவிகள் கிட்டும்.


cancer-single-iconகடகம்

இன்று குடும்பத்தில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியம் சீராகும்.


leo-single-iconசிம்மம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும்.


virgo-single-iconகன்னி

இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை பலப்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடன் பிரச்சனை தீரும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். நினைத்த காரியம் நிறைவேறும்.


libra-single-iconதுலாம்

இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் இருக்கும். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். வியாபாரத்தில்  கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு முன்னேற்றத்தை தரும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.


sagittarius-single-iconதனுசு

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று சுபசெய்தி வரும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். பொன் பொருள் சேரும்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் தோன்றும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.


aquarius-single-iconகும்பம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.


pisces-single-iconமீனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் முன்னேற்றமும் லாபமும் ஏற்படும்.