Tamil Rasi Palan Today 25th March 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  25.03.2018

இன்றைய  பஞ்சாங்கம்

25-03-2018, பங்குனி 11, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி காலை 08.02 வரை பின்பு நவமி திதி பின்இரவு 05.54 வரை பின்பு வளர்பிறை தசமி. திருவாதிரை நட்சத்திரம் பகல் 02.20 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஸ்ரீராமநவமி. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

சூரிய சுக்கி புதன் (வ)

 

 

சந்தி

 

திருக்கணித கிரக நிலை

25.03.2018

ராகு

கேது 

 

சனி செவ்

 

குரு (வ)

 


இன்றைய ராசிப்பலன் – 25.03.2018

aries-single-iconமேஷம்

இன்று உடன் பிறந்தவர்கள் மூலமாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் மகிழச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.


taurus-single-iconரிஷபம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.


gemini-single-iconமிதுனம்

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்துக்கள் விஷயத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.


cancer-single-iconகடகம்

இன்று குடும்பத்தில் வீண் செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடன் பிறந்தவர்கள் ஓரளவு உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.


virgo-single-iconகன்னி

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். வியாபாரத்தில் கடன் பிரச்சினைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் கிட்டும்.


libra-single-iconதுலாம்

இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிட்டும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் பெண்களின் ஆசைகள் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். சேமிப்பு பெருகும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.


sagittarius-single-iconதனுசு

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். சிலருக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும்.


capricorn-single-iconமகரம்

இன்று பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். சுபசெலவுகள் செய்ய வேண்டிய வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும்.


aquarius-single-iconகும்பம்

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். திருமண முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். வீட்டில் பெண்களின் பணிச்சுமை குறையும். மனநிம்மதி உண்டாகும்.


pisces-single-iconமீனம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும். கடன் பிரச்சனைகள் சற்று குறையும்.