Tamil Rasi Palan Today 25th May 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  25.05.2018

இன்றைய  பஞ்சாங்கம்

25-05-2018, வைகாசி 11, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி மாலை 05.47 வரை பின்பு வளர்பிறை துவாதசி. அஸ்தம் நட்சத்திரம் இரவு 07.59 வரை பின்பு சித்திரை. அமிர்தயோகம் இரவு 07.59 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

 

புதன்

சூரிய

சுக்கி

 

திருக்கணித கிரக நிலை

25.05.2018

 

ராகு

கேது  செவ்

 

சனி(வ)

 

குரு(வ)               

சந்தி


இன்றைய ராசிப்பலன் – 25.05.2018

aries-single-iconமேஷம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வியாபாரத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். கடன் பிரச்சனை ஓரளவு தீரும்.


gemini-single-iconமிதுனம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். தெய்வ வழிபாடு நன்மையை தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.


cancer-single-iconகடகம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். தேவைகள் பூர்த்தியாகும்.


leo-single-iconசிம்மம்

இன்று நீங்கள் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும். கடன் சுமை குறையும்.


virgo-single-iconகன்னி

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.


libra-single-iconதுலாம்

இன்று எதிர்பாராத வகையில் திடீர் செலவுகள் உண்டாகும். வீட்டில் பெரியவர்களுடன் சிறு சிறு மனசங்கடங்கள் தோன்றும். முயற்சி செய்தால் எடுக்கும் காரியத்தில் முன்னேற்றம் அடையலாம். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகளால் தொழில் வியாபாரத்தில் லாபம் ஏற்படும்.  வேலையில் சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். பயணங்களால் அனுகூலம் கிட்டும்.


sagittarius-single-iconதனுசு

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமை சேரும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நற்பலன்கள் கிட்டும். வேலையில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.


capricorn-single-iconமகரம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.


aquarius-single-iconகும்பம்

இன்று உங்களால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பிறரை நம்பி எந்த பொறுப்பையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம்.


pisces-single-iconமீனம்

இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு பணி சுமையை குறைக்கும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.