Tamil Rasi Palan Today 26th August 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  26.08.2017

இன்றைய  பஞ்சாங்கம் 26-08-2017, ஆவணி- 10, சனிக்கிழமை, பஞ்சமி திதி இரவு 09.17 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. சித்திரை நட்சத்திரம் பகல் 03.51 வரை பின்பு சுவாதி. மரணயோகம் பகல் 03.51 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 1, ஜீவன்- 1/2. சுப முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
திருக்கணித கிரக நிலை 26.08.2017   செவ் ராகு சுக்கி
கேது சூரிய புதன்(வ)
சனி சந்தி குரு

இன்றைய ராசிப்பலன் – 26.08.2017

aries-single-iconமேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும்.
taurus-single-iconரிஷபம் இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பழைய கடன்கள் வசூலாகும்.
gemini-single-iconமிதுனம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையக்கூடும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.
cancer-single-iconகடகம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படும். குடும்பத்தில் உள்ள நெருக்கடிகளை சமாளிக்க நீங்கள் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
leo-single-iconசிம்மம் இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வருமானம் பெருகும்.
virgo-single-iconகன்னி இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
libra-single-iconதுலாம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிசுமை அதிகரிக்கலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கடன் வாங்க நேரிடும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படக்கூடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும்.
sagittarius-single-iconதனுசு இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
capricorn-single-iconமகரம் இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.
aquarius-single-iconகும்பம் இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் உண்டாகலாம். வீட்டு தேவைகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உறவினர்களின் உதவியால் பணப்பற்றாக்குறை ஓரளவு நீங்கும். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.
pisces-single-iconமீனம் இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.