Tamil Rasi Palan Today 27th December 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  27.12.2017

இன்றைய  பஞ்சாங்கம்

27-12-2017, மார்கழி 12, புதன்கிழமை, நவமி திதி பின்இரவு 01.55 வரை பின்பு வளர்பிறை தசமி. ரேவதி நட்சத்திரம் பின்இரவு 01.36 வரை பின்பு அசுவினி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

சந்தி
திருக்கணித கிரக நிலை 27.12.2017  ராகு
கேது
சூரிய சனி சுக்கி   புதன் செவ் குரு

இன்றைய ராசிப்பலன் – 27.12.2017

aries-single-iconமேஷம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். சேமிப்பு குறையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். வேலையில் உடன் இருப்பவர்களால் பணிச்சுமை குறையும்.


taurus-single-iconரிஷபம்

இன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் கைக்கு வந்து சேரும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் -சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.


cancer-single-iconகடகம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். சேமிப்பு உயரும்.


leo-single-iconசிம்மம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களை தள்ளி வைப்பது நல்லது.


virgo-single-iconகன்னி

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெறும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.


libra-single-iconதுலாம்

இன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வீட்டில் ஒற்றுமை குறையலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கடன் ஓரளவு குறையும்.


sagittarius-single-iconதனுசு

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படக்கூடும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.


capricorn-single-iconமகரம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பு சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.


aquarius-single-iconகும்பம்

இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களை செய்து முடிப்பதற்கு சிறிது காலதாமதமாகலாம். பெற்றோருடன் சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை குறையும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். வேலையில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும்.


pisces-single-iconமீனம்

இன்று உறவினர்களால் மனமகிழும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.