Tamil Rasi Palan Today 27th September 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  27.09.2017 இன்றைய  பஞ்சாங்கம்

27-09-2017, புரட்டாசி -11, புதன்கிழமை, சப்தமி திதி இரவு 07.08 வரை பின்பு அஷ்டமி. கேட்டை நட்சத்திரம் காலை 09.57 வரை பின்பு மூலம்.  சித்தயோகம் காலை 09.57 வரை பின்பு மரணயோகம். நேத்திரம்- 1, ஜீவன்- 1/2.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 
திருக்கணித கிரக நிலை 27.09.2017     ராகு
கேது செவ் சுக்கி
சந்தி சனி குரு   சூரிய புதன்

இன்றைய ராசிப்பலன் – 27.09.2017

aries-single-iconமேஷம்

இன்று உங்கள் ராசிக்கு காலை 09.57 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பிரச்சனைகள் படிப்படியதக குறையும். சுப காரியங்கள் பிற்பகலுக்கு பின் நற்பலன் கிடைக்கும்.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு காலை 09.57 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். உடன் பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறையும். தூர  பயணங்களில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். எதிலும் நிதானமாக செயல்படுவது சிறப்பு.


gemini-single-iconமிதுனம்

இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நல்ல பலன்களை தரும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சேமிப்பு உயரும்.


cancer-single-iconகடகம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.


leo-single-iconசிம்மம்

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் கிட்டும்.


virgo-single-iconகன்னி

இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் முன்னேற்றத்திற்காக சிறு தொகையை கடன் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.


libra-single-iconதுலாம்

இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் ஓரளவு குறையும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.


sagittarius-single-iconதனுசு

இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். கடன்கள் குறையும்.


capricorn-single-iconமகரம்

இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். தொழிலில் இருந்த தேக்க நிலை மாறி சற்று முன்னேற்றம் ஏற்படும். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சுப காரியங்கள் கைகூடும்.


aquarius-single-iconகும்பம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக பகை நீங்கும். சேமிப்பு உயரும்.


pisces-single-iconமீனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழச்சியை தரும்.