Tamil Rasi Palan Today 28th March 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  28.03.2018

இன்றைய  பஞ்சாங்கம்

28-03-2018, பங்குனி 14, புதன்கிழமை, துவாதசி திதி இரவு 11.23 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. ஆயில்யம் நட்சத்திரம் காலை 10.01 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

சூரிய

புதன் (வ)

சுக்கி

 

 

 

திருக்கணித கிரக நிலை

28.03.2018

சந்தி ராகு

கேது

 

சனி செவ்

 

குரு  (வ)

 


இன்றைய ராசிப்பலன் – 28.03.2018

aries-single-iconமேஷம்

இன்று உங்களுக்கு தேவையற்ற பிரச்சனைகளால் மனஉளைச்சல் உண்டாகலாம். பிள்ளைகளுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கையாளும் பொருட்களில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்.


taurus-single-iconரிஷபம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படக்கூடும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.


gemini-single-iconமிதுனம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பு சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.


cancer-single-iconகடகம்

இன்று உறவினர்களால் மனமகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.


leo-single-iconசிம்மம்

இன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும்.


virgo-single-iconகன்னி

இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வண்டி வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வீட்டில் அமைதி குறையும். தொழில் வியாபாரத்தில் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கடன் ஓரளவு குறையும்.


libra-single-iconதுலாம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் -சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். ஆரோக்கிய பாதிப்புகள் ஓரளவு குறையும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.


sagittarius-single-iconதனுசு

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை ஏற்படும். தேவையில்லாமல் மற்றவர்கள் மீது கோபப்படும் சூழ்நிலை உருவாகும். எதிலும் பொறுமை தேவை. உங்கள் ராசிக்கு காலை 10.01 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை மதியத்திற்கு பிறகு செய்வது உத்தமம்.


capricorn-single-iconமகரம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். உங்கள் ராசிக்கு காலை 10.01 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.


aquarius-single-iconகும்பம்

இன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் கைக்கு வந்து சேரும்.


pisces-single-iconமீனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் மறைந்து சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வேலையில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.