Tamil Rasi Palan Today 30th May 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  30.05.2018

இன்றைய  பஞ்சாங்கம்

30-05-2018, வைகாசி 16, புதன்கிழமை, பிரதமை  திதி இரவு 09.25 வரை பின்பு தேய்பிறை துதியை. கேட்டை நட்சத்திரம் பின்இரவு 03.12 வரை பின்பு மூலம். சித்தயோகம் பின்இரவு 03.12 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00,காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

 

சூரிய புதன்

சுக்கி

 

திருக்கணித கிரக நிலை

30.05.2018

ராகு

கேது  செவ்

 

சனி(வ)

  சந்தி

குரு(வ)               

 


இன்றைய ராசிப்பலன் – 30.05.2018

aries-single-iconமேஷம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை.  வியாபாரத்தில் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படுவது நல்லது.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்களின் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து சந்தோஷம் கூடும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவர். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.


gemini-single-iconமிதுனம்

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் லாபகரமான பலன்கள் கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும்.


cancer-single-iconகடகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். வங்கி சேமிப்பு உயரும்.


leo-single-iconசிம்மம்

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் பிரச்சனைகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.


virgo-single-iconகன்னி

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்படுவதன் மூலம் லாபம் கிட்டும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.


libra-single-iconதுலாம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.


sagittarius-single-iconதனுசு

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை கூடும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். கடன்கள் குறையும்.


capricorn-single-iconமகரம்

இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். வருமானம் இரட்டிப்பாகும்.


aquarius-single-iconகும்பம்

இன்று தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். வீட்டில் பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். உற்றார் உறவினர்கள் வழியில் ஓரளவு அனுகூலம் கிட்டும். செலவுகள் குறையும்.


pisces-single-iconமீனம்

இன்று எதிர்பாராத பணவரவுகள் உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சேமிப்பு உயரும்.