Tamil Rasi Palan Today 4th May 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  04.05.2018

இன்றைய  பஞ்சாங்கம்

04.05.2018 சித்திரை 21, வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி பகல் 11.01 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. மூலம் நட்சத்திரம் இரவு 10.33 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் இரவு 10.33 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. அக்னி நட்சத்திரம் ஆரம்பம் இரவு 08.51. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00  

புதன்

சூரிய

சுக்கி

 

 

திருக்கணித கிரக நிலை

04.05.2018

ராகு

கேது செவ்

 

சந்தி

சனி (வ)

 

குரு(வ)

 

இன்றைய ராசிப்பலன் – 04.05.2018

aries-single-iconமேஷம்

இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் உதவி மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். வருமானம் பெருகும்.


taurus-single-iconரிஷபம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் தாமதப்பலன் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.


gemini-single-iconமிதுனம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.


cancer-single-iconகடகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.


leo-single-iconசிம்மம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள் உண்டாகும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.


virgo-single-iconகன்னி

இன்று உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படும். குடும்பத்தில் அமைதி குறையும் சூழ்நிலை உருவாகும். தொழிலில் எதிர்பாராத செலவுகள் தோன்றினாலும் பெரிய பாதிப்பு இருக்காது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் வேலைபளு சற்று குறையும்.


libra-single-iconதுலாம்

இன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் கிட்டும். பணவரவு தாராளமாக இருக்கும். மன அமைதி ஏற்படும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும்.


sagittarius-single-iconதனுசு

இன்று குடும்பத்தில் திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கடன் பிரச்சினைகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.


capricorn-single-iconமகரம்

இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்க்காத செலவுகள் தோன்றும். வீட்டில் ஒற்றுமை குறையும். எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதாராம் சுமாராக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.


aquarius-single-iconகும்பம்

இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.


pisces-single-iconமீனம்

இன்று உங்கள் திறமைகேற்ப வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று வளர்ச்சி அடைவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் தீரும். வங்கி சேமிப்பு உயரும்.