Tamil Rasi Palan Today 5th September 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  05.09.2017

இன்றைய  பஞ்சாங்கம்

05-09-2017, ஆவணி- 20, செவ்வாய்கிழமை, சதுர்த்தசி திதி பகல் 12.41 வரை பின்பு பௌர்ணமி. அவிட்டம் நட்சத்திரம் பகல் 12.24 வரை பின்பு சதயம். சித்தயோகம் பகல் 12.24 வரை பின்பு மரணயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1. பௌர்ணமி. நடராஜர் அபிஷேகம். ஆவணி அவிட்டம்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 
  சந்தி திருக்கணித கிரக நிலை 05.09.2017   ராகு சுக்கி
கேது சூரிய செவ் புதன்(வ)
சனி குரு

இன்றைய ராசிப்பலன் – 05.09.2017

aries-single-iconமேஷம்

இன்று உங்கள் வீட்டில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும், பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.


gemini-single-iconமிதுனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் தடைக்கு பின்பு நற்பலன் கிட்டும். வியாபாரத்தில் ஒருசிலருக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.


cancer-single-iconகடகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணிபுரிபவர்க்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும்.


virgo-single-iconகன்னி

இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக இருப்பார்கள். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.


libra-single-iconதுலாம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். வேலையில் உயர் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் அலட்சியத்தால் எதிர்பாராத வீண் பிரச்சனைகள் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.


sagittarius-single-iconதனுசு

இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.


capricorn-single-iconமகரம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் புரிபவர்க்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைபடும். பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.


aquarius-single-iconகும்பம்

இன்று நீங்கள் செய்யும் வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவர். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபம் பெறுவீர்.


pisces-single-iconமீனம்

இன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். தேவைகள் பூர்த்தியாகும்.