Tamil Rasi Palan Today 7th August 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  07.08.2017

இன்றைய  பஞ்சாங்கம் 07-08-2017, ஆடி- 22, திங்கட்கிழமை, பௌர்ணமி திதி இரவு 11.40 வரை பின்பு தேய்பிறை பிரதமை. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 03.32 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் பின்இரவு 03.32 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1. பௌர்ணமி. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். சந்திர கிரகணம் இரவு 10.52 முதல் 12.49 வரை. இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.
சுக்கி
கேது   திருக்கணித கிரக நிலை 07.08.2017   சூரிய செவ்
சந்தி புதன் ராகு
சனி  (வ) குரு

இன்றைய ராசிப்பலன் – 07.08.2017

aries-single-iconமேஷம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக வெளியூர் பயணங்களில் லாபகரமான பலன்கள் கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்களால் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும்.
taurus-single-iconரிஷபம் இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் அமைதி இருக்கும். வியாபாரத்தில் வெளிமாநில நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.
gemini-single-iconமிதுனம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை. சுபகாரியங்களை தவிர்ப்பது நல்லது.
cancer-single-iconகடகம் இன்று வீட்டில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும்.
leo-single-iconசிம்மம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து ஒற்றுமை நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல்& வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
virgo-single-iconகன்னி இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் இன்று வசூலாகும். சேமிப்பு உயரும்.
libra-single-iconதுலாம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.  தெய்வ வழிபாடு மன அமைதியை தரும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிட்டும். வியாபார ரீதியான புதிய கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வருமானம் பெருகும்.
sagittarius-single-iconதனுசு இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் சற்று மந்த நிலை இருக்கும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் சிறு இடையூறுக்குப் பின் அனுகூலமான பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் நிதானத்துடன் கவனமாக செயல்படுவது உத்தமம்.
capricorn-single-iconமகரம் இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
aquarius-single-iconகும்பம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நிலையில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் உண்டாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு அரசு வழி உதவிகள் கிடைக்கப்பெறும். கடன்கள் குறையும்.
pisces-single-iconமீனம் இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும்.