Tamil Rasi Palan Today 7th March 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  07.03.2018

இன்றைய  பஞ்சாங்கம்

07-03-2018, மாசி 23, புதன்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 02.01 வரை பின்பு தேய்பிறை சப்தமி. விசாகம் நட்சத்திரம் இரவு 10.34 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

சுக்கி புதன்

 

 

 

சூரிய 

திருக்கணித கிரக நிலை

07.03.2018

ராகு

கேது

 

சனி

  செவ்

குரு சந்தி               

 

 


இன்றைய ராசிப்பலன் – 07.03.2018

aries-single-iconமேஷம்

இன்று  மாலை 04.07 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் வீண் செலவுகள் செய்ய நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். வேலையில் சக ஊழியர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.


taurus-single-iconரிஷபம்

இன்று நீங்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சனை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் தகுதிக்கேற்ற உயர்வு கிட்டும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.


cancer-single-iconகடகம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத பணவரவு உண்டாகும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் எளிதில் கைகூடும்.


virgo-single-iconகன்னி

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. எதிர்பாராத உதவி கிட்டும்.


libra-single-iconதுலாம்

இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில்  சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்களால் சிறு மனசங்கடங்கள் ஏற்படும். நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் கிட்டும். தெய்வ வழிபாடு செய்வது நல்லது.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மன கஷ்டங்கள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கா விட்டாலும் நஷ்டம் இருக்காது. உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.


capricorn-single-iconமகரம்

இன்று உங்களுக்கு பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும். வருமானம் பெருகும். குடும்பத்தில் அமைதி இருக்கும்.


aquarius-single-iconகும்பம்

இன்று உங்களுக்கு தாராள பணவரவு உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். மாணவர்களுக்கு படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலைபளு குறையும்.


pisces-single-iconமீனம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். உங்கள் ராசிக்கு மாலை 04.07 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பண விஷயத்தில் கவனம் தேவை.