Tamil Rasi Palan Today 8th April 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  08.04.2018

இன்றைய  பஞ்சாங்கம்

08-04-2018, பங்குனி 25, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 02.05 வரை பின்பு தேய்பிறை நவமி. பூராடம் நட்சத்திரம் மாலை 05.36 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் மாலை 05.36 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கால பைரவருக்கு உகந்த நாள்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

சூரிய

புதன்(வ)

சுக்கி

 

 

 

திருக்கணித கிரக நிலை

08.04.2018

ராகு

கேது 

 

செவ் சனி

சந்தி

 

குரு(வ)  

 

 


இன்றைய ராசிப்பலன் – 08.04.2018

aries-single-iconமேஷம்

இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். நெருங்கியவர்களால் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் ஓரளவு குறையும். நிதானமாக இருப்பது நல்லது.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். எந்த ஒரு சுப காரியத்தையும், தொழில் சம்பந்தமாக எடுக்கப்படும் புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.


gemini-single-iconமிதுனம்

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியங்கள் எளிதில் கைகூடும்.


cancer-single-iconகடகம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பழைய கடன்கள் வசூலாகும்.


leo-single-iconசிம்மம்

இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.


virgo-single-iconகன்னி

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை நிலவும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பணப்பிரச்சனை சற்று குறையும்.


libra-single-iconதுலாம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் சற்று குறையும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சனைகள் குறையும். சேமிப்பு உயரும்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணபற்றாக்குறை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படுவது நல்லது.


aquarius-single-iconகும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் கிட்டும்.


pisces-single-iconமீனம்

இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களும் நிறைவேறும்.