Tamil Rasi Palan Today 8th February 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  08.01.2018

இன்றைய  பஞ்சாங்கம்

08-02-2018, தை 26, வியாழக்கிழமை, அஷ்டமி திதி பகல் 10.13 வரை பின்பு தேய்பிறை நவமி. விசாகம் நட்சத்திரம் பகல் 02.19 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

     
சுக்கி திருக்கணித கிரக நிலை 08.02.2018 ராகு
சூரிய கேது  புதன்    
சனி   செவ் குரு  சந்தி

இன்றைய ராசிப்பலன் – 08.01.2018

aries-single-iconமேஷம்

இன்று எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செல்வது நல்லது.


taurus-single-iconரிஷபம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். கடன்கள் குறையும்.


gemini-single-iconமிதுனம்

இன்று குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.


cancer-single-iconகடகம்

இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் கொடுக்கல்-& வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். பணப்பிரச்சனை குறையும்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு உற்றார் உறவினர்களால் மனஅமைதி குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் வழியில் சுபசெய்திகள் வரும்.


virgo-single-iconகன்னி

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் ரீதயான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.


libra-single-iconதுலாம்

இன்று தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனு-கூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களால் உங்கள் பிரச்சினைகள் குறையும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஓத்துழைப்பு கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். எதிலும் கவனம் தேவை.


capricorn-single-iconமகரம்

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பயணங்களாலும் அனுகூலம் கிட்டும். வருமானம் பெருகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாள். சுபகாரியங்கள் கைகூடும்.


aquarius-single-iconகும்பம்

இன்று எந்த செயலையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் சாதகப்பலன் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். கடன் பிரச்சனை தீரும்.


pisces-single-iconமீனம்

இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகலாம். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் உதவியால் தொழிலில் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.