Tamil Rasi Palan Today 8th July 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  08.07.2018

இன்றைய  பஞ்சாங்கம்

 

08-07-2018, ஆனி 24, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி இரவு 11.31 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. அஸ்வினி நட்சத்திரம் காலை 07.38 வரை பின்பு பரணி. சித்தயோகம் காலை 07.38 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

 

சந்தி

 

சூரிய

 

திருக்கணித கிரக நிலை

08.07.2018

ராகு புதன்

கேது

செவ்(வ)

சுக்கி

சனி (வ)

 

குரு (வ)

 

 


இன்றைய ராசிப்பலன் – 08.07.2018

aries-single-iconமேஷம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் ஓரளவு குறையும். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.


cancer-single-iconகடகம்

இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த உபாதைகள் நீங்கும். உறவினர்கள் வழியிலும் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.


leo-single-iconசிம்மம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெண்கள் ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகத்தால் லாபம் பெருகும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்.


virgo-single-iconகன்னி

இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதி காப்பது உத்தமம்.


libra-single-iconதுலாம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் செல்லும் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப் பலன்கள் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.


sagittarius-single-iconதனுசு

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். வெளி பயணங்களால் வீண் செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.


aquarius-single-iconகும்பம்

இன்று வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்களுடன் இருந்த பகை விலகி ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.


pisces-single-iconமீனம்

இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் சற்று குறையும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.