Tamil Rasi Palan Today 9th April 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  09.04.2018

இன்றைய  பஞ்சாங்கம்

09-04-2018, பங்குனி 26, திங்கட்கிழமை, நவமி திதி பின்இரவு 04.34 வரை பின்பு தேய்பிறை தசமி. உத்திராடம் நட்சத்திரம் இரவு 08.39 வரை பின்பு திருவோணம். மரணயோகம் இரவு 08.39 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

சூரிய

புதன்(வ)

சுக்கி

 

 

 

திருக்கணித கிரக நிலை

09.04.2018

ராகு

கேது  சந்தி

 

செவ் சனி

 

குரு(வ)

 


இன்றைய ராசிப்பலன் – 09.04.2018

aries-single-iconமேஷம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். கடன் பிரச்சனைகள் தீரும்.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை மறைந்து முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.


cancer-single-iconகடகம்

இன்று மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் நல்ல ஆர்வம் காட்டுவார்கள். பணி புரிவோர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் சம்பந்தமாக வெளிமாநில நண்பர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர். கடன் சுமை ஓரளவு குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய நபர்கள் அறிமுகம் உண்டாகும்.


virgo-single-iconகன்னி

இன்று உங்களுக்கு வரவிற்கேற்ற செலவுகள் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். சிக்கனமுடன் நடந்து கொள்வது நல்லது. புத்திர வழியில் அனுகூலங்கள் உண்டாகும். தெய்வ வழிபாடு நல்லது.


libra-single-iconதுலாம்

இன்று நீங்கள் பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். புதிய முயற்சிகளில் சற்று மந்த நிலை ஏற்படும். சேமிப்பு குறையும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் உடன்வேலை செய்பவர்கள் உதவியாக இருப்பார்கள். பணப்பிரச்சனை சற்று குறையும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பயணங்களில் புதிய நட்பு ஏற்படும்.


sagittarius-single-iconதனுசு

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சில இடையூறுகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையில் இதுவரை இருந்த பிரச்சனைகள் விலகும்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளால் அனுகூலம் கிடைக்கும். உறவினர்களின் உதவியால் எடுத்த காரியத்தை முடிப்பீர்கள்.


aquarius-single-iconகும்பம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் முழுமனதுடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு திடீர் பயணம் உண்டாகும்.  வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலப்பலன் உண்டாகும்.


pisces-single-iconமீனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும்.