Tamil Weekly Rasi Palan 25.03.18 – 31.03.18

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


வார ராசிப்பலன்

மார்ச் 25 முதல் 31 வரை –  பங்குனி 11 முதல் 17 வரை

 

சூரிய சுக்கி புதன் (வ)     சந்தி
               

திருக்கணித கிரக நிலை

25.03.2018

ராகு
கேது   
சனி செவ்   குரு (வ)  

கிரக மாற்றம்

26-03-2018 மேஷ சுக்கிரன் பகல் 03.47மணிக்கு


இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

மிதுனம்         24-03-2018 அதிகாலை 04.21 மணி முதல் 26-03-2018 காலை 07.17 மணி வரை.

கடகம்              26-03-2018 காலை 07.17 மணி முதல் 28-03-2018 காலை 10.02 மணி வரை

சிம்மம்            28-03-2018 காலை 10.02 மணி முதல் 30-03-2018 மதியம் 01.13 மணி வரை.

கன்னி              30-03-2018 மதியம் 01.13 மணி முதல் 01-04-2018 மாலை 05.52 மணி வரை.


இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

26.03.2018 பங்குனி 12 ஆம் தேதி திங்கட்கிழமை தசமி திதி புனர்பூசம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை

30.03.2018 பங்குனி 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்த்தசி திதி உத்திரம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை


aries-single-iconமேஷம்

மேஷம்  அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவி செய்யும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த செயல் செய்வதென்றாலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 7ல் குரு வக்ர கதியில் இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக செயல்பட்டால் எதையும் சமாளிக்க முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது நல்லது. கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் தட்டி கொடுத்து வேலை வாங்குவது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு சற்றே வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற அதிக பாடுபட வேண்டியிருக்கும். சிவ வழிபாடு செய்வதும் துர்கையம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபடுவதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 25, 30, 31.


taurus-single-iconரிஷபம்

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

எந்த கஷ்டத்தையும் தாங்கி கொள்ளக்கூடிய அளவிற்கு சகிப்பு தன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு, லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றத்தை அடைவீர்கள். பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பார்கள். குரு வக்ர கதியில் இருப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். நல்ல வரன்கள் தேடி வரும். உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறுவதால் லாபம் சிறப்பாக இருக்கும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். தெழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும். முருக வழிபாடு செய்வதாலும், சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதாலும் கஷ்டங்கள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் – 26, 27.


gemini-single-iconமிதுனம்

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசை துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதியான புதன், சூரியனுடன் 10-ல் சஞ்சரிப்பதும், 26-ஆம் தேதி முதல் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நல்ல அமைப்பாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். சனி- செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது சிறப்பு. கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். கடன்கள் சற்றே குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது. அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் இருக்கும் கவலைகள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் – 25, 28, 29, 30.


cancer-single-icon

கடகம் 

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

கோபமாகவும் வேகமாகவும் பேசினாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். சர்பகிரகங்கள் சாதகமற்று இருப்பதால் கணவன்- மனைவி இருவரும் அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கி சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைப்பதால் லாபம் பெருகும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிப்பதால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். நவக்கிரகங்களில் ராகுவிற்கும் குருவிற்கும் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் – 26, 27, 30, 31.


leo-single-iconசிம்மம்

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் ஆற்றல் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதும் 6-ல் கேது சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் ராசியதிபதி சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது உத்தமம். எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும்.  உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் சற்று தாமதப்படும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடு செய்வதும், ஸ்ரீ ராமபிரானை வணங்குவதும் சிறப்பான பலன்களை கொடுக்கும்.

வெற்றி தரும் நாட்கள் – 25, 28, 29, 30.


virgo-single-iconகன்னி

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

அனைவரிடத்திலும் அன்பும் பண்பும், மரியாதையும் கொண்டவராகவும், தெய்வ பக்தி உடையவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள் என்றாலும் 4-ல் சனி, செவ்வாய், 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், தேவையற்ற கவலைகள் ஏற்படும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நெருங்கியவர்களின் உதவிகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உயரதிகாரிகளின் ஆதரவுகளைப் பெற சற்று பாடுபட வேண்டியிருக்கும். தூர பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல் குறையும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன் ஈடுபடுவது உத்தமம். சனிப்ரீதியாக ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதும், முருக வழிபாடு செய்வதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 25, 26, 27, 31.


libra-single-iconதுலாம்

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

தம்முடைய எந்த பொருட்களையும் கேட்பவருக்கு தானமளிக்க கூடிய பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் வரும் 26-ஆம் தேதி முதல் 7-ல் சஞ்சரிப்பதும் 3-ல் செவ்வாய், சனி, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் விலகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டி, பொறாமைகள் குறைந்து தொழில் மேன்மையடையும். பொருளாதாரமும் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சிறு தடைகளுக்குப் பின் அனுகூலப் பலன் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். விநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும் வணங்குவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 26, 27, 28, 29.


scorpio-single-iconவிருச்சிகம்

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

எவ்வளவு தான் கற்றறிந்திருந்தாலும் அகம் பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். முடிந்த வரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொண்டால் எதிர்பாராத மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது மூலம் அனுகூலங்கள் உண்டாகும். தற்போது குரு வக்ர கதியில் இருப்பதால் பொருளாதார நிலை ஓரளவிற்கு சாதகமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வீண் செலவுகளை குறைப்பது உத்தமம். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்தால் குருவின் அருள் கிட்டும்.

வெற்றி தரும் நாட்கள்  -28, 29, 30, 31.

சந்திராஷ்டமம் –   24-03-2018 அதிகாலை 04.21 மணி முதல் 26-03-2018 காலை 07.17 மணி வரை.


sagittarius-single-iconதனுசு 

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் புதன் சஞ்சரிப்பதாலும் 26-ஆம் தேதி முதல் 5-ல் சுக்கிரன் சஞ்சரிக்க இருப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். ஜென்ம ராசியில் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின் கிடைத்தாலும் லாபங்கள் தடைப்படாது. உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். முருக வழிபாடு செய்வதாலும், பிரதோஷ காலங்களில் விரதமிருந்து சிவ வழிபாடு செய்வதாலும் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 25, 30, 31.

சந்திராஷ்டமம் –   26-03-2018 காலை 07.17 மணி முதல் 28-03-2018 காலை 10.02 மணி வரை


capricorn-single-iconமகரம்

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானத்தில் சூரியன், 26-ஆம் தேதி முதல் 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களது செயல்கள் அனைத்திலும் பரிபூரண வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தற்போது குரு வக்ர கதியில் இருப்பதால் பண வரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். பொன், பொருள் சேரும். திருமண சுபகாரியங்கள் சில தடைகளுக்குப் பின் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்தால் மங்களம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 25, 26, 27, 31.

சந்திராஷ்டமம் –   28-03-2018 காலை 10.02 மணி முதல் 30-03-2018 மதியம் 01.13 மணி வரை.


aquarius-single-iconகும்பம்

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சிறு வயதிலிருந்தே சிறந்த தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி, செவ்வாய் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். பொருளாதார நிலை மேலோங்கி இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். எல்லா வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி  கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சிலருக்கு சொந்த வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள் என்றாலும் அளவோடு வைத்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் அடைவீர்கள். பயணங்களாலும் அனுகூலம் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். விநாயகர் வழிபாடு செய்வதாலும், மகாலட்சுமி வழிபாடு செய்வதாலும் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 26, 27, 28, 29.

சந்திராஷ்டமம் –   30-03-2018 மதியம் 01.13 மணி முதல் 01-04-2018 மாலை 05.52 மணி வரை.


pisces-single-iconமீனம்

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன், 10-ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டிய வாரமாகும். எடுக்கும் காரியங்களில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் எந்த சிக்கல்களையும் சமாளிக்க முடியும். தற்போது குரு வக்ர கதியில் இருப்பதால் பணவரவில் முன்னேற்றம், தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும் யோகம் போன்றவை உண்டாகும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமைந்து அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொன், பொருள், ஆடை ஆபரணம் யாவும் சேரும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல் படுவது நல்லது. பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் சாதகமான செயல்பாட்டால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். முருக வழிபாடு செய்வதும், தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 28, 29, 30, 31.